Android தொலைபேசிகளுக்கான Top 5 இணைய உலாவிகள் ( Web Browsers)
இன்றைய
நாளை பொறுத்தவரை மிக பிரபலமான, அதிகமானவர்களால் விரும்பி உபயோகிக்கப்படும்
தொலைபேசி இயங்குதளம் என்றால் அது Android தான். இதனால் பல நிறுவனங்களும்
Android இற்கான Application களை அதிகமாக வெளியிட ஆரம்பித்துள்ளார்கள். அந்த
வகையில் Android இற்கான Top 5 இணைய உலாவிகளை பார்ப்போம்.
Opera Mini Browser
Opera Mini பொதுவாக அனைத்து
தொலைபேசிகளிலும் சிறப்பான சேவையை வழங்கும் இணைய உலாவியாகும். Android இலும்
இந்த உலாவியை பெற்றுக்கொள்ளலாம்.
தரவிறக்க :Opera Mini Browser
Dolphin Browser HD
இந்த உலாவி மிகவும் வேகமானதும்
அதேநேரம் கையாளுவதற்கு இலகுவானதும் ஆகும். Dolphin Mini, Dolphin, Dolphin
HD என மூன்று Version களாக வெளிவந்துள்ளது இந்த உலாவி
தரவிறக்க :Dolphin Browser HD
Skyfire Web Browser
இந்த இணைய உலாவியின் சிறப்பம்சம்
Flash Support ஆகும். கூடவே வேகமாகவும் செயற்படக்கூடியது. சிறந்த ஒரு இணைய
அனுபவத்தை இந்த உலாவியில் பெற்றுக்கொள்ளலாம்.
தரவிறக்க : Skyfire Web Browser
Firefox Browser
கணினிக்கான சிறந்த இணைய உலாவியை
வழங்கிவந்த Mozilla நிறுவனத்தின் Android தொலைபேசிக்கான பதிப்பு இதுவாகும்.
இது வேகமானதும், இலகுவானதும், ஒழுங்குபடுத்தக்கூடியதுமாகும். இதன்
Security மற்றும் Privacy Feature சிறந்த Online பாதுகாப்பை தருகிறது.
தரவிறக்க : Firefox Browser
UC Browser
உலகளாவிய ரீதியில் அதிக பாவனையாளர்களால் உபயோகிக்கப்படும் ஒரு இணைய உலாவி. வேகமான செயற்பாட்டை கொண்டது.
தரவிறக்க : UC Browser
Comments