உங்களுடைய Antivirus software சரியாக இயங்குகிறதா என்பதைக் கண்டறிய..
வணக்கம் நண்பர்களே..!
உங்களுடைய கணினியைப் பாதுகாக்க ஆன்ட்டி வைரஸ் மென்பொருள் நிறுவியிருப்பீர்கள். விலையுயர்ந்த கணினியைப் பாதுகாக்க, பெருமதிப்புடைய கோப்புகளைக் காக்கவென நீங்கள் பதிந்திருக்கும் ஆன்ட்டி வைரஸ் சரியாக இயங்குகிறதா? என்று ஒரு நாளேனும் எண்ணியதுண்டா? Anti Virus நிறுவினால் மட்டும் போதாது. அந்த Antivirus software வைரஸ்கள் சரியாக நீக்குகிறதா? என்பதையும் தெரிந்துகொள்ளவேண்டும். வைரஸ் எதிர்ப்பை சரிவர நிறைவேற்றுகிறதா என கண்டறிய இந்த முறை உங்களுக்கு உதவும். முதலில் நீங்களே உங்கள் கணினியில் சோதனைக்காக ஒரு வைரஸ் நிரலை உருவாக்க வேண்டும்.
வைரஸ் நிரலை உருவாக்க...
உங்கள் கணினியல் ஒரு சாதாரண வைரஸ் கோப்பை உருவாக்க கீழ்க்கண்ட ப்ரோக்ராம் வரிகளை நோட்பேடில் எழுதிக்கொண்டு அதை virus என்ற பெயரில் சேமித்துவிடுங்கள்.
X5O!P%@AP[4\PZX54(P^)7CC)7}$EICAR-STANDARD-ANTIVIRUS-TEST-FILE!$H+H*
பிறகு கணினியில் உள்ள ஆட்ன்டி வைரஸ் மென்பொருள் கொண்டு உங்கள் கணினியை வைரஸ் ஸ்கேன் (Scan) செய்யுங்கள். இப்போது நீங்கள் உருவாக்கிய சோதனை வைரஸ் நிரல் அதில் காண்பிக்கப்பட்டால் உங்களுடைய ஆன்ட்டி வைரஸ் நன்றாக இயங்குகிறது என்று தெரிந்துகொள்ளலாம்..
இல்லையென்றால் உங்களுடைய ஆன்ட்டி வைரஸ் மென்பொருளை Update செய்து ஆக வேண்டும்.. அல்லது அதற்கு மாற்றாக மற்றொரு நல்ல ஆன்ட்டி வைரஸ் மென்பொருளை நிறுவுவதே உங்கள் கணினியை வைரஸிலிருந்து பாதுகாக்க சிறந்த வழி.
நீங்கள் சோதனைக்காக உருவாக்கிய வைரஸ் நிரலால் எந்த பிரச்னையும் வராது என்பதை நினைவில் வைக்கவும்.
பதிவு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள். நன்றி நண்பர்களே..!!
நீங்கள் சோதனைக்காக உருவாக்கிய வைரஸ் நிரலால் எந்த பிரச்னையும் வராது என்பதை நினைவில் வைக்கவும்.
பதிவு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள். நன்றி நண்பர்களே..!!
Comments