ஆன்லைன் ஷாப்பிங் - கேள்வி நேரம்!
'ம்ம்ஹூம்... பர்ஸை நான் வெளியில் எடுப்பதாய் இல்லை, என் லைன் தனி லைன், ஆன்லைன் ஷாப்பிங் எனக்கு சரிப்படாது! என்னதான் இருந்தாலும் நேரில் சென்று, பொருட்களை தொட்டுப் பார்த்து, 360°-யில் சுற்றிப் பார்த்து வாங்குவது போல் வருமா?' இப்படி அடம் பிடிப்பவர்களா நீங்கள்?! சரி, நேரில் கடைகளுக்கு செல்லுங்கள்! நன்றாக தொட்டு, முகர்ந்து பார்த்துக் கொள்ளுங்கள், 3D-யில் சுற்றிப் பார்த்துக் கொள்ளுங்கள்! வேண்டுமானால் கட்டிப்பிடித்து முத்தம் கூட கொடுத்துக்கொள்ளுங்கள் (விற்பனையாளரை அல்ல!) ஆனால் வாங்காதீர்கள்! ;) உதாரணத்திற்கு மொபைல் வாங்க வேண்டுமானால் பக்கத்தில் உள்ள ஷோரூம் அல்லது மாலுக்கு சென்று பத்து, பதினைந்து மாடல்களை ஆசைதீரப் பார்த்து, பிடித்த ஒன்றை தேர்ந்தெடுத்து, மாடல் நம்பரை மனதில் குறித்துக்கொள்ளுங்கள்!
'அடப்பாவி, இது அநியாயம் இல்லையா?!' என்கிறீர்களா? என்னைப் பொறுத்தவரை இப்படி செய்வதை பெரும்பாலும் தவிர்க்கிறேன் என்பதுதான் உண்மை - ஏனெனில் சில ஆன்லைன் ஷாப்கள் மீது அவ்வளவு நம்பிக்கை, மேலும் 360°-யில் சுற்றிப்பார்க்கும் வேலையை இணையத்திலேயே செய்துவிடுகிறேன்!
'ஆனா ஒரு பொருளை வாங்குறதுக்கு முன்னாடி அதைப்பத்தின சில விவரங்களை கேக்கணுமே! பக்கத்துக்கு ஷோரூம்க்கு போய் விசாரிச்சுட்டு வாங்காம வர்றது எனக்கு சுத்தமா பிடிக்கலே! அதே போல நெட்டில் விவரங்களை தேடிப்பார்க்கவும் எனக்கு பொறுமை இல்லை! என்ன செய்வது?!' - இது ஒரு பெரிய பிரச்னையே அல்ல! ஒவ்வொரு ஆன்லைன் ஷாப்பும் தங்களின் கால்சென்டர் முகவரி விவரங்களை அளித்திருப்பார்கள்! எனவே, ஆர்டர் செய்யும் முன் ஆசை தீர மொக்கை போட்டுக்கொள்ளலாம்! பேசுபவரின் குரல் நன்றாக இருக்கிறது என்பதற்காக கடலை போட முயற்சிக்கவேண்டாம்! :)
கடைக்காரர் வாங்க சொல்லி வற்புறுத்தினால், 'இந்த மொபைல் போன் 'ஜிங்கிச்சா பிங்க் + கிளிப்பச்சை' காம்பினேஷன் கலர்ல கிடைக்குமா, என் கேர்ள் பிரெண்ட் அந்த கலர்தான் வேணும்னு அடம் பிடிக்கிறா!' என்று ஏதாவதொரு மொக்கை காரணம் சொல்லுங்கள்! நிச்சயமாய் இல்லை என்ற பதில் வரும் - உடனே எஸ்கேப் ஆகி விடுங்கள்! அப்புறம் வீட்டிற்கு வந்து சாவகாசமாய் ஆன்லைனில் ஆர்டர் செய்து கொள்ளலாம்! ஆனால் ஷோரூமில் என்ன விலை என்று கேட்க மறந்து விடாதீர்கள்! சில சமயங்களில் ஆன்லைனை விட குறைவான விலையில் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது!
'அடப்பாவி, இது அநியாயம் இல்லையா?!' என்கிறீர்களா? என்னைப் பொறுத்தவரை இப்படி செய்வதை பெரும்பாலும் தவிர்க்கிறேன் என்பதுதான் உண்மை - ஏனெனில் சில ஆன்லைன் ஷாப்கள் மீது அவ்வளவு நம்பிக்கை, மேலும் 360°-யில் சுற்றிப்பார்க்கும் வேலையை இணையத்திலேயே செய்துவிடுகிறேன்!
'ஆனா ஒரு பொருளை வாங்குறதுக்கு முன்னாடி அதைப்பத்தின சில விவரங்களை கேக்கணுமே! பக்கத்துக்கு ஷோரூம்க்கு போய் விசாரிச்சுட்டு வாங்காம வர்றது எனக்கு சுத்தமா பிடிக்கலே! அதே போல நெட்டில் விவரங்களை தேடிப்பார்க்கவும் எனக்கு பொறுமை இல்லை! என்ன செய்வது?!' - இது ஒரு பெரிய பிரச்னையே அல்ல! ஒவ்வொரு ஆன்லைன் ஷாப்பும் தங்களின் கால்சென்டர் முகவரி விவரங்களை அளித்திருப்பார்கள்! எனவே, ஆர்டர் செய்யும் முன் ஆசை தீர மொக்கை போட்டுக்கொள்ளலாம்! பேசுபவரின் குரல் நன்றாக இருக்கிறது என்பதற்காக கடலை போட முயற்சிக்கவேண்டாம்! :)
'என்னவோ போங்க சார், ஆன்லைன்ல வாங்குனா பொருட்களை குரியர்லதான அனுப்புவாங்க? சேதாரம் ஜாஸ்தியா இருக்குமே??' - நிச்சயமாக இல்லை! பெயர்பெற்ற ஆன்லைன் ஷாப்புகளின், பேக்கிங் முறையை பார்த்து வியந்திருக்கிறேன்! அவ்வளவு பக்காவாக இருக்கும்! தெர்மகோல் எல்லாம் வைத்து, அட்டைபெட்டியில், அச்சடித்த முகவரி ஒட்டி, பில் சகிதம் பாதுகாப்பாக அனுப்பி வைப்பார்கள்! அதுவும், தரமான குரியர் சர்வீஸ் மூலம்! பொருட்களை அனுப்பியவுடன், குரியர் நிறுவனத்தின் பெயரையும், ஷிப்மெண்ட் ட்ராக்கிங் நம்பரையும் மெயிலிலோ அல்லது SMS மூலமாகவோ தெரியப்படுத்திவிடுவார்கள்! அப்புறம் என்ன அதை வைத்துக்கொண்டு பொருள் வந்து சேரும்வரை குரியர் கம்பெனி கால் சென்டரை படாத பாடு படுத்திவிடலாம்! :)
'என்கிட்டே இன்டர்நெட் கனெக்ஷன் இல்லையேப்பா! பிரௌசிங் சென்டர்ல போய் ஆர்டர் பண்ணிக்கலாமா?!' - நிறுத்துங்ங்ங்ங்ங்ககககக!!! மொத வேலையா அந்த கிரெடிட் / டெபிட் கார்டை பர்ஸுல இருந்து வெளிய எடுக்காதீங்க! இது ஒரு மகா மெகா தவறான காரியம்! பிரௌசிங் சென்டர்களில் நான் இமெயில் செக் பண்ணுவதை கூட தவிர்த்துவிடுவேன்! ஏன் என்றால், "Key Loggers" மூலம் உங்கள் பாஸ்வோர்ட் பறிபோகும் வாய்ப்பு உள்ளது! அப்படி இருக்க உங்கள் கிரெடிட் / டெபிட் கார்டு விவரங்களை அனைவரும் பகிர்ந்து கொள்ளும் ஒரு கணினியில் / இன்டர்நெட் கனெக்ஷனில் உபயோகிப்பது அபாயாகரமானது! அப்படி செய்தால், திடீரென்று ஒரு நாள் உங்கள் கார்டில் 67608/- க்கு, சென்னை GRT தங்க மாளிகையில் செலவழிக்கப்பட்டிருப்பதாக பேங்கிலிருந்து SMS வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை! அப்புறம் வேறு என்னதான் வழி? பிரௌசிங் சென்டரில் பொருட்களை தேடுங்கள்! எந்த தளத்தில் வாங்குவது என்று முடிவு செய்து கொள்ளுங்கள்! அவர்கள் Cash On Delivery முறையில் பொருட்களை அனுப்பும் பட்சத்தில் தைரியமாக ஆர்டர் செய்யுங்கள்! சில ஆன்லைன் ஷாப்புகளில் தொலைபேசி மூலமாகவும் ஆர்டர் செய்யலாம்!
சரி, வாஷிங் பவுடரில் இருந்து வாஷிங் மெஷின் வரை, சட்டியில் இருந்து ஜட்டி வரை எல்லாவற்றையும் ஆன்லைனிலேயே வாங்கவேண்டுமா? - கூடாது! பொதுவாக குறைவான விலையுள்ள பொருட்களின் விலை ஆன்லைனில் வாங்கினால் ரொம்ப அதிகம்! 40W பல்பை கூட ஆன்லைனில்தான் வாங்குவேன் என்று அடம் பிடிக்க கூடாது - பொடி நடையாக பக்கத்துக் கடை சென்று வாங்கவேண்டும்! :) அதே போல எடையில் குறைவான ஆனால் வெளி அளவில் அதிகமான (உ.ம். Bean Bag!) பொருட்களையும் வாங்குவதை தவிருங்கள்! குரியர் செலவையும் சேர்த்து உங்கள் தலை மேல் கட்டிவிடுவார்கள்! அதே போல நான் அறிந்த வரை மளிகை சாமான்களின் விலையும் ஆன்லைனில் சற்று அதிகமே! இதைப்பற்றி விரிவாக இன்னொரு பதிவில் பார்க்கலாம்! அதே போல நீங்கள் வாங்க விரும்பும் பொருள் உங்களுக்கு உடனடியாக தேவை என்றால், நேரில் சென்றே வாங்கி விடுங்கள்! ஏனென்றால், ஆன்லைன் ஆர்டர் மூலம் வந்து சேர 2 நாள் முதல் (சில சமயம்) 2 வாரம் வரை பிடிக்கலாம்!
Comments