ப்ரிண்ட் எடுப்பதற்க்கு (அச்சிடும்) முன் சிந்திக்க சில விஷயங்கள்
உங்கள்
டாகுமெண்ட், ஸ்ப்ரெட்ஷீட் ஆகியவற்றை அச்சிடும் முன், குறிப்பிட்ட அந்த
அச்சு நகல், அவ்வளவு அழகாக இருக்க வேண்டாம்; சாதாரணமாக இருந்தால் போதும்;
நம் பைலுக்குத்தான் என்று எண்ணுகிறீர்களா?
அப்படியானால்,
அதனை draft modeல் அச்சிடவும். இவ்வகை அச்சுப் பிரதி வேகமாக பிரிண்ட்
ஆகும். குறைவான இங்க் செலவாகும். இந்த வகை அச்சு நகல் ‘draft’, ‘fast’,
‘eco’ என வெவ்வேறு வகையில் அழைக்கப்படும். உங்கள் பிரிண்டரில் இது
என்னவென்று காட்டப் படும்.
*
சில டாகுமெண்ட்களில் குறைவான வரிகள் இருக்கலாம்; அல்லது சிறிய அளவில்
அச்சிட்டாலும் படிக்கும் வகை யில் இருக்கலாம். அப்படிப்பட்ட டாகுமெண்ட்களை
அச்சிடுகையில், தாளின் ஒரு பக்கத்தில் இரண்டு பக்கங்களை அச்சிடலாமே!
*
கூடுமானவரை உங்கள் டாகுமெண்ட் களில், போட்டோக்கள் மற்றும் பெரிய அளவிலான
கிராபிக்ஸ் படங்களைத் தவிர்க்கவும். இதனால் டாகுமெண்ட் பைல் அளவு
அதிகரிக்கும். அச்சிடுகையில், இந்த டாகுமெண்ட்டின் பக்கங்களை வடி வமைத்து
அச்சிட, பிரிண்டர் அதிக நேரம் எடுக்கும்.
*
வண்ணம் கலந்த டாகுமெண்ட் அச்செடுக்கையில், அந்த அச்சுப் பிரதி முடிவானதாக
இல்லாமல், சோதனைக்குத் தான் எனில், அதனை black or grayscale என்னும்
வகையில் அச்செடுக்கலாம். இதனால், நேரம் மிச்சமாகும். வண்ண மை செலவாகாது.
குறிப்பாக லேசர் கலர் பிரிண்டரில் நேரம் அதிக அளவில் குறையும்.
*
பிரிண்டர்கள் அச்சிடாத வேளைகளில் sleep modeக்குச் சென்று விடும். உடன்
அச்சிட கட்டளை கொடுக்கையில் விரை வாகத் தயாராகிவிடும். இதனையே மின் சக்தியை
நிறுத்திவிட்டால், பிரிண்டர் தயாராகும் நேரம் அதிகமாகும். பிரிண்ட் ஹெட்
தயார்ப்படுத்தப்பட வேண்டும்;
மை
தெளிக்கும் சிறிய குழாய் முனைகள் (nozzles) சோதிக்கப்பட வேண்டும்;
இவற்றைக் கலவைக்குத் தயார்படுத்த வேண்டும் என்பது போன்ற பல பணி முனைப்புகள்
மேற்கொள்ளப்படும். எனவே பிரிண்டர் வேலை செய்யாவிட்டாலும், அதன் மின்
சக்தியை நிறுத்தாமல் தயார் நிலையில் வைத்திருக்கலாம். அது தானாகவே sleep
modeக்குச் செல்வதால், சிக்கல் இல்லை.
Comments