எண்ணற்ற வசதிகளுடன் ஆசஸ் ட்ரான்ஸ்பார்மர் பிரைம் டேப்லெட்!
ஆசஸ்
ட்ரான்ஸ்பார்மர் பிரைம் லேப்ட்டுக்காக நீண்ட காலமாக கெட்ஜெட் உலகம்
எதிர்பார்த்துக் கொண்டிருந்தது. இந்த டேப்லெட்டைப் பார்க்கும் போதே இதை
வாங்க வேண்டும் என்று தோன்றும் அளவிற்கு இது அட்டகாசமாக இருக்கிறது. இந்த
டேப்லெட் பேனல்கள் உலோகத்தால் செய்யப்பட்டு பல புதிய உயர்ந்த தொழில்
நுட்பங்களுடன் இருக்கிறது.
இந்த ட்ரான்ஸ்பார்மர் டேப்லெட்டின் திரை
கெப்பாசிட்டிவ் தொழில்நுட்பம் கொண்ட தொடுதிரை ஆகும். இந்த திரை 1280 X 800
பிக்சல் ரிசலூசனை வழங்குகிறது. மேலும் இந்த டிவைசில் கொரில்லா க்ளாஸ்
டிஸ்ப்ளே மற்றும் இன்டிலஜென்ட் ஆசஸ் வேவ் ஷேர் யுஐ போன்றவையும் உண்டு. இந்த
டேப்லெட் மிகவும மெல்லிய ஒன்றாகும். இதன் எடை 586 கிராம் மட்டுமே.
அடுத்த முக்கிய சிறப்பு என்னவென்றால் இந்த
லேப்டாப்பின் சவுண்ட் ஹார்ட்வேர் மிக பக்காவாக உள்ளது. அதாவது இந்த
லேப்டாப் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் மற்றும் எஸ்ஆர்எஸ் சவுண்ட் வசதிகளைக்
கொண்டுள்ளதால் இதன் இசை மிக அபாரமாக இருக்கும். மெமரிக்காக இந்த லேப்டாப்
1ஜிபி ரேமுடன் 32 ஜிபி மெமரி சேமிப்பைக் கொண்டுள்ளது. அதே போல் 64 ஜிபி
மெமரி சேமிப்பு கொண்ட டேப்லெட்டு சந்தைக்கு வரும் என்று தெரிகிறது.
தகவல் பரிமாற்றத்திற்காக இந்த
ட்ரான்ஸ்பார்மர் டேப்லெட் வைபை 802.11 பி/ஜி/எம், ப்ளூடூத்துடன் எ2டிபி
மற்றும் யுஎஸ்பி 2.0 இணைப்புகளை வழங்குகிறது. இதன் கேமராவை எடுத்துக்
கொண்டால் அது 3264 X 2448 பிக்சல் சப்போர்ட் கொண்ட 8 எம்பி கேமரா ஆகும்.
இந்த கேமராவில் ஆட்டோ போக்கஸ், எல்இடி ப்ளாஷ் மற்றும் ஜியோ டேக்கிங் போன்ற
வசதிகளும் உண்டு.
இந்த ஆசஸ் டேப்லெட் ஆன்ட்ராய்டு 3.2
ஹனிகோம்ப் இயங்கு தளத்தில் இயங்குகிறது. மேலும் இந்த லேப்டாப்பை
ஆன்ட்ராய்டு 4.0 வெர்சனுக்கு அப்க்ரேட் செய்ய முடியும். இதன் ப்ராசஸர்
என்விடியா டேக்ரா 3 ஆகும். அதுபோல் இது 1.3 ஜிஹெர்ட்ஸ் கார்ட்டெக்ஸ் எ9
சிபியு கொண்டுள்ளது.
இந்த ட்ரான்ஸ்பார்மர் டேப்லெட்டில் உள்ள
ஜிபிஎஸ் யூட்டிலிட்டியில் சிறிய குறைகள் இருப்பதாக புகார்கள் வருகின்றன.
அதை நிறைவு செய்ய ஆசஸ் வாடிக்கையாளர் சேவை மையங்கள் ஒரு குழுவை உருவாக்கி
இருக்கின்றன. ஆனால் இந்த சிறிய குறைபாடு இந்த டேப்லெட்டின் விற்பனையை எந்த
விதத்திலும் பாதிக்கவில்லை.
Comments