விண்டோஸ் 7 கணினிகளுக்கு அழகழகான தீம்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய
உங்கள்
கணினியை ஒரே தோற்றத்தில் பார்த்து போர் அடித்து விட்டதா கவலையே படாதிங்க
உங்கள் கணினியை உங்கள் விருப்பப்படி அழகாக மாற்றலாம். மைக்ரோசாப்ட்
நிறுவனத்தின் விண்டோஸ் 7 மென்பொருளில் உள்ள பல வசதிகளில் தீம்கள் வசதியும்
ஒன்று. இந்த தீம்களை நாம் விதவிதமாக மாற்றலாம். இந்த தீம்களையும்
மைக்ரோசாப்ட் நிறுவனமே இலவசமாக அனைவருக்கும் அளிக்கிறது. விண்டோஸ் 7
பயன்படுத்துபவர்கள் எப்படி இந்த தீம்களை இலவசமாக டவுன்லோட் செய்வது எப்படி
என பார்ப்போம்.
கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக்
செய்து மைக்ரோசாப்ட் தளத்தை ஓபன் செய்தால் நூற்றுகனக்கான் தீம்கள்
இருக்கும். அந்த தீம்கள் பல்வேறு பிரிவுகளாக வகைப்படுத்தப் பட்டிருக்கும்.
Download லிங்கை கிளிக் செய்தால் அந்த குறிப்பிட்ட தீம் டவுன்லோட் ஆகும்.
விண்டோஸ் 7 ல் தீம் மாற்றுவது எப்படி:
இந்த
தீம்களில் ஏதேனும் ஒன்றை டவுன்லோட் செய்தாலே போதும் தானாகவே உங்கள்
கணினியில் தீம் மாறிவிடும். அல்லது டெஸ்க்டாப்பில் வலது கிளிக் செய்து
Personalize என்பதை கிளிக் செய்து வரும் விண்டோவில் உங்களுக்கு வேண்டிய
தீமை மாற்றி கொள்ளலாம்.
Download - Windows 7 Themes




Comments