கம்ப்யூட்டர் நலமாக இயங்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

கம்ப்யூட்டர் நலமாக இயங்க நாம் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். பாதுகாப்பு குறித்த பல்வேறு தகவல்கள் தொடர்ந்து வெளியாகிக் கொண்டே இருக்கின்றன. பலர் புத்தாண்டு சபதங்கள் பல எடுப்பார்கள்.

(அடுத்த வாரத்திலேயே நொண்டிச் சாக்குகள் சொல்லி விட்டுவிடுவார்கள் என்பதுவும் உண்மை) இங்கும் இந்த புத்தாண்டில் கம்ப்யூட்டருக்காக என்ன சபதங்கள் எடுக்கலாம் என்று பார்க்கலாம்.


1. உங்களுடைய ஆப்பரேட்டிங் சிஸ்டம் அப் டேட்டட் ஆக இருக்க வேண்டும். புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கு மாற வேண்டும் என்பதில்லை. பயன்படுத்தும் ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கான அண்மைக் காலத்திய அப்டேட்டட் பைல்கள் இறக்கப்பட்டு பதியப்பட்டிருக்க வேண்டும்.

2. நீங்கள் அரும்பாடுபட்டு உருவாக்கிய தகவல்கள் அடங்கிய பைல்கள் பாதுகாப்பாக இருக்க சிறப்பான ஆண்டி வைரஸ் இருக்க வேண்டும். அதுவும் அவ்வப்போது அப்டேட்டட் ஆக இருக்க வேண்டும்.

3. தேவையில்லாமல் கம்ப்யூட்டர் பூட் ஆகும்போதே தொடங்கி பின்னணியில் இயங்கும் புரோகிராம்கள் உங்கள் கம்ப்யூட்டர் பணியை மந்தப்படுத்தும்; தாமதப்படுத்தும். எனவே தேவையற்ற புரோகிராம்கள் இருந்தால் நீக்கி விடுங்கள்.

4. பயர்வால் ஒன்று அவசியம் வேண்டும். விண்டோஸ் இயக்கத்துடன் வரும் பயர் வால் கூட போதும்.

5. டூல் பார்களை அவ்வப்போது ட்யூன் செய்திட வேண்டும். தேவைப்படும் டூல் பார்களை மட்டும் இயங்க வைத்திட வேண்டும். தேவையற்ற டூல் பார்களை மூடிவிட்டால் ராம் மெமரியில் இடம் கிடைக்கும். கம்ப்யூட்டரும் வேகமாக இயங்கும்.

6. அடுத்தது தான் மிக முக்கியம். இந்த செயல்பாடு மேலே சொல்லப்பட்ட அனைத்தையும் உள்ளடக்கியதாகும். மாதம் ஒரு முறையாவது கம்ப்யூட்டரில் முழுமையான பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

டிபிராக், ரெஜிஸ்ட்ரி கிளீனங் போன்றவற்றோடு மேலே சொல்லப்பட்ட ஐந்து செயல்பாடுகளும் அடங்கியதாகும்.

Comments

Popular posts from this blog

மறந்துபோன மொபைல் நம்பரை கண்டுபிடிக்க எளிய வழி..!

திருமண பொருத்தம் சுலபமாக பார்க்க

இயங்குதளங்கள் - OPERATING SYSTEMS