2012ல் சவாலைச் சந்திக்குமா மைக்ரோசாப்ட்?
சென்ற
2011 ஆம் ஆண்டு மைக்ரோசாப்ட்
நிறுவனத்திற்கு
அவ்வளவு
சிறப்பான
ஆண்டாக இருக்கவில்லை.
டேப்ளட்
சந்தையில்
இந்நிறுவனத்தின் தயாரிப்பு
எதுவும்
அறிமுகமாகாதது
பலரின்
விமர்சனத்திற்குள்ளானது. மேலும் விண்டோஸ்
போன் சரியாக விற்பனை
இல்லாத நிலை மற்றும்
கிளவ்ட்
கம்ப்யூட்டிங்
பிரிவில்
மிகத் தாமதமாக இறங்கியது ஆகியவையும் பலரால் எடுத்துரைக்கப்பட்டது.
இருப்பினும்
இந்நிறுவனத்தின்
வருமானம்
சிறிதும் குறையாமல், அனைத்து பிரிவுகளிலும் சிறப்பாக உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.
நடப்பு
ஆண்டு மைக்ரோசாப்ட் நிறுவனத்திடமிருந்து பல புதுமைகளை
மக்கள் எதிர்பார்க்கின்றனர்.இவற்றை நிறை
வேற்றும் வகையில்
தற்போது
மைக்ரோசாப்ட்
செயல்பட்டு
வருகிறது. மிகப் பெரிய
அளவில் எதிர்பார்க்கப்படுவது விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் அறிமுகமாகும். குறிப்பாக டேப்ளட் பிசிக்களில் இந்த சிஸ்டம்
முற்றிலும்
மாறுதலான ஓர் அனுபவத்தினைத்
தரும் என்று எதிர்பார்க்கலாம்.
ஐ-பேட் சாதனத்திற்கு
எதிரான போட்டியில், டேப்ளட் பிசி சந்தையில் இது மைக்ரோசாப்ட்
நிறுவனத்திற்கு
ஓர் இடத்தைக் கொடுக்கும். ஆப்பிள் ஐபேட் ஏப்ரல்
2010ல் வெளியான போது, பாரம்பரியமாகப்
பயன்படுத்தி
வந்த பெர்சனல் கம்ப்யூட்டர் சந்தை சிறிது
ஆட்டம் கண்டது. விண்டோஸ்
8 சிஸ்டம், டேப்ளட் பிசி மற்றும்
பெர்சனல்
கம்ப்யூட்டர்
என இரு பிரிவுகளிலும்
இயங்கும்
வகையில்அறிமுகப்படுத்தப்படுவதால்,
நிச்சயம்
இது மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்குக் கைகொடுக்கும். ஆனால்,இரண்டும் வெவ்வேறு ப்ராசசர்களில் இயங்க இருப்பதால்,
இவற்றில்
இயங்கும்
வகையில் சாப்ட்வேர்
அப்ளிகேசன்களைத்
தயாரிப்பவர்கள்
இரு பங்கு உழைத்திட
வேண்டியதிருக்கும்.
மேலும்,
ஏற்கனவே
வெளியான
விண்டோஸ்
7 சிஸ்டத்தைக்
காட்டிலும்
குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய அளவிற்கு,
விண்டோஸ்
8 மேம்பாடு
கொண்ட அம்சங்களைக் கொண்டிருக்கப் போவ தில்லை
என்பதால்
இதனை மக்கள் அவ்வளவாகச்
சிறப்பாகப் பேசப்போவ தில்லை.ஒரே
ஒரு சிறப்பான அம்சம் என்னவெனில்,
அது மல்ட்டி டச் வசதி மட்டுமே.
எனவே
டேப்ளட்
பிசி பிரிவில் மைக்ரோசாப்ட் மிகக் கடுமையாக
உழைக்க வேண்டியதிருக்கும். தன் சிஸ்டம்
இயங்கும்
வகையில்,
டேப்ளட்
பிசிக்கள்
சந்தையில்
வருவதற்குத்
துணை புரிய வேண்டியதிருக்கும்.
இந்த வகையில், மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு. 2012 ஆம் ஆண்டு
ஒரு சவாலான ஆண்டாக
நிச்சயம்
அமையும்.
Comments