கூகுள் தேடுபொறியில் இனி எல்லாமே கிடைக்கும் : புதிய வசதி அறிமுகம்

கடந்த வருடம் பேஸ்புக் சேவையை போன்று, கூகுள் பிளஸை அறிமுகப்படுத்திய கூகுல் நிறுவனம், தற்போது Search, Plus your World எனும் இச்சேவையை விரிவாக்க தொடங்கியுள்ளது. நீங்கள் கூகுள் பிளஸில் சேகரிக்கும் உங்களது புகைப்படங்கள், வீடியோக்கள், செய்திகள், தரவுகள் என்பவற்றை நீங்கள் விரும்பும் பட்சத்தில் கூகுள் தளத்தின் பிரதான தேடுபொறியுடன் இனி இணைத்து கொள்ள முடியும். இதன் மூலம், உங்களை பற்றி அறியாத மூன்றாவது நபர் ஒருவர் உங்களுடன் நண்பர் ஆகமலே நீங்கள் சேகரித்து வைத்திருக்கும் பொது விஷயமொன்றை பற்றி அறிந்து கொள்ளும் வாய்ப்பு ஏற்படுகிறது என்கிறது கூகுள்.