காம் (COM) போர்ட் வேலை செய்கிறதா என்பதை எப்படி தெரிந்து கொள்வது ?
ஒரு
சில நேரங்களில், உங்கள் கணினியில், கம்யூனிகேஷன் போர்ட் என
அழைக்கப்படும், COM போர்ட்டில் கனெக்ட் செய்யப்படும் வெளி சாதனங்கள்
(Extenal devices) இயங்க மறுக்கும். அப்போது அந்த சாதனத்தில் பிரச்சனையோ என
நாம் யோசிக்கத்தோன்றும். ஆனால், நாம் அந்த சாதனத்தை இணைத்திருக்கும்
COM போர்ட் சரியாக வேலை செய்யாமல் போனாலும், அந்த சாதனம் இயங்காமல்
போயிருக்கலாம் அல்லவா? அந்த காம் (COM) போர்ட் வேலை செய்கிறதா என்பதை
எப்படி தெரிந்து கொள்வது ?
ஒரு சுலபமான வழி.
பொதுவாக கணினி, காம் போர்ட் மூலமாக, 3 வது pin வழியாக தகவல் அனுப்பும். 2 வது pin வழியாக தகவல்களைப்பெறும். இந்த இரண்டு பின்களிடையே தொடர்பு ஏற்படுத்தினால், அந்த போர்ட் வேலை செய்கிறதா இல்லையா என்பதை தெரிந்து கொள்ளலாம்.
முதலில், சோதித்தறிய வேண்டிய காம் போர்ட்டில், ஏதாவது சாதனம் இணைக்கப்பட்டிருந்தால் அதனை நீக்குங்கள்.
பின்னர், உங்கள் கணினியில் ஹைபர்டெர்மினல் ஓபன் செய்து கொள்ளுங்கள்.
பின்னர் கனெக்ஷன் டெஸ்க்ரிப்ஷன் விண்டோவில் ஏதாவதொரு பெயர் கொடுத்துக்கொள்ளுங்கள்.
பின்னர், நீங்கள் சோதித்துப்பார்க்க வேண்டிய காம் போர்ட்டை தேர்ந்தேடுத்துக்கொள்ளுங்கள்.
போர்ட் செட்டிங்க்ஸ் விண்டோவில் எதுவும், மாற்ற வேண்டாம். OK பொத்தானை அழுத்துங்கள்.
இப்பொழுது தோன்றும் விண்டோவில், ஏதாவது டைப் செய்யுங்கள். நீங்கள் டைப் செய்யும் எந்த எழுத்தும், நமக்கு தெரியாது.
இப்பொழுது ஜெம் கிளிப் கொண்டோ, அல்லது சிறு ஒயர் கொண்டோ, காம் போர்ட்டில், இரண்டாவது, அல்லது மூன்றாவது பின்களை ஷார்ட் செய்யுங்கள் (மிகவும் பாதுகாப்புடன் கவனமாக செய்யவும்.).
இப்போது ஷார்ட் செய்தபடியே ஹைபர்டெர்மினல் விண்டோவில் டைப் செய்யுங்கள். இப்போது நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் வெளியில் தெரியும். அவ்வாறு தெரிந்தால், உங்கள் காம் போர்ட் வேலை செய்கிறது என்று பொருள். இல்லையென்றால் ஏதோ பிரச்சனை உள்ளது என்பதை அறியலாம்.

Comments