15 ஆண்டுகளில் டவுண்லோட் டாட் காம் தளம்

இலவசமாக ஏதேனும் சாப்ட்வேர் அப்ளி கேஷன் வேண்டும் என்றால், நாம் அனைவரும் அணுகும் ஓர் இணைய தளம் டவுண்லோட் டாட் காம் (Download.com). பல்வேறு வகையான செயல்பாடுகளுக்கு அதிகமான எண்ணிக்கையில் சாப்ட்வேர் அப்ளிகேஷன்களை இந்த தளம் கொண்டுள்ளது.


இப்போது பல நிறுவனங்கள் அப்ளிகேஷன் ஸ்டோர் எனத் தொடங்கி தங்கள் தயாரிப்புகள் சார்ந்த அப்ளி கேஷன் சாப்ட்வேர் தொகுப்புகளை மட்டும் வழங்கி வருகின்றன.

ஆனால் 15 ஆண்டுகளுக்கு முன்பே, இந்த தளம் இலவசமாக சாப்ட்வேர் அப்ளிகேஷன்களைத் தரும் சேவையில் தொடங்கப்பட்டு இன்றளவும் வெற்றி கரமாக இயங்கி வருகிறது.

இதன் 15 ஆண்டு கால சேவையில் சில அரிய, ஆர்வமூட்டும் தகவல்களைத் தன் தளத்தில் தெரிவித்துள்ளது இந்த இணையதளம். அவற்றில் சில தகவல்களைப் பார்க்கலாம்.

ஒரு வாரத்தில், எத்தனை அப்ளிகேஷன்கள் டவுண்லோட் செய்யப்பட்டன என்று ஆண்டுக் கணக்கில் தகவல்கள் கிடைக்கின்றனர்.

1996ல் 1,99,701; 2001ல் 52,58,094; 2006ல் 63,55,306; 2011ல் 95,95,161.

2011ஆம் ஆண்டில் டவுண்லோட் செய்யப்பட்ட புரோகிராம்களில் முதல் இடம் பெற்றிருப்பது இலவச ஏ.வி.ஜி. ஆண்ட்டி வைரஸ் புரோகிராம். இந்த புரோகிராம், 2000 ஆண்டில் அறிமுகமானது. இதுவரை 38 கோடியே 43 லட்சத்து 31 ஆயிரத்து 367 முறை டவுண்லோட் செய்யப்பட்டுள்ளது.

அடுத்த இடத்தில் அவாஸ்ட் இலவச ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் உள்ளது. இதனை 15 கோடியே 74 லட்சத்து 83 ஆயிரத்து 377 முறை டவுண்லோட் செய்துள்ளனர். சிகிளீனர் 19ஆம் இடத்தைப் பிடித்துள்ளது.

டவுண்லோட் செய்திட பயன்படுத்தப்பட்ட பிரவுசர்களின் பங்கினைப் பார்க்கையில் எப்படி பிரவுசர் பயன்பாட்டுச் சூழ்நிலை மாறி வருகிறது என அறிய முடிகிறது. 1996ல் நெட்ஸ்கேப் பிரவுசர் 73% கொண்டு முன்னணியில் உள்ளது. அப்போது இன்டர்நெட் எக்ஸ் புளோரர் பங்கு 20% மட்டுமே. பயர்பாக்ஸ் எல்லாம் அப்போது இல்லை.

2011 ஆம் ஆண்டில், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 51% இடம் கொண்டுள்ளது. நெட்ஸ்கேப் இல்லவே இல்லை. அடுத்த இடத்தில் மொஸில்லா பயர்பாக்ஸ் 21% பங்கு கொண்டுள்ளது. கூகுள் குரோம் 15% இடம் பிடித்துள்ளது.

Comments

Popular posts from this blog

மறந்துபோன மொபைல் நம்பரை கண்டுபிடிக்க எளிய வழி..!

புதிதாக கணினி வாங்கும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன?

திருமண பொருத்தம் சுலபமாக பார்க்க