எந்த இடத்திலும் இன்டர்நெட்
இன்டர்நெட்
இணைப்பினை எளிதாக எந்த இடத்திலும் மேற்கொள் ளலாம். இதற்கென பல
நிறுவனங்கள், டேட்டா நெட் கார்ட்களை விற்பனை செய்கின்றன. சிலர் இதனை
இன்டர்நெட் டாங்கிள் எனவும் அழைக்கின்றனர்.
சற்றுப்
பெரிய ப்ளாஷ் மெமரி ஸ்டிக் போலத் தோற்றமளிக்கும் இவற்றை, எந்தக்
கம்ப்யூட்டரிலும் (டெஸ்க்டாப், லேப்டாப், நெட்புக் போன்றவை) இணைத்து,
இன்டர்நெட்டில் உலா வரலாம். பயன்படுத்திக் கொண்டிருக்கும் கம்ப்யூட்ட ரில்
உள்ள நெட்வொர்க் இணைப்பினைச் சிரமப்படுத்த வேண்டியதில்லை.
இது
போன்ற இன்டர்நெட் இணைப்புகளால், நாம் அலுவல் காரணமாக வெளியூர்களுக்குச்
செல்கையில் அங்கு இருக்கும் கம்ப்யூட்டர்களில் அல்லது நம் லேப்டாப்பில்
இந்த டேட்டா கார்ட்களை இணைத்துப் பயன்படுத்த முடிகிறது.
இருந்தாலும்,
சில வேளைகளிலும் இவையும் நம் காலை வாரிவிடுகின்றன. இணைப்பு தராமல்,ஏதாவது
ஒரு எர்ரர் குறியீட்டினைக் காட்டிவிட்டு, தொடர முடியாமல்
உறைந்துவிடுகின்றன. இதனால் நம் வேலைகள் தடை படுகின்றன.
இது போன்ற சூழ்நிலைகள் உருவாகாமல் இருக்க நாம் என்ன மாதிரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கலாம்.
1. மொபைல் இன்டர்நெட்டுக்கு ஒரே நிறுவனமா?
எப்போதும்
இன்டர்நெட் இணைப்பு பெற, குறிப்பாக, நாம் செல்லும் இடங்களில் எல்லாம்
இன்டர்நெட் இணைப்பு பெற, ஒரே நிறுவனத்தின் இன்டர்நெட் இணைப்பு கார்ட்
அல்லது அட்டையை நம்ப வேண்டாம். நீங்கள் வாங்கியுள்ள இணைப்பு ட்ரைவினைத்
தந்த நிறுவனத்தின் இன்டர்நெட் தொடர்பு, நீங்கள் வசிக்கும் நகரில் நல்ல
வேகத்தில் கிடைக்கலாம்.
ஆனால்,
மற்ற நகரங்களில் அந்த நிறுவனத்தின் டவர்கள் சரியான திறன் கொண்டு
இயங்காததால், வேகத்தில் தடைபடலாம். சென்னையில் சரியாக இயங்கும் ஒரு
நெட்வொர்க் கார்ட், டில்லியில் அல்லது மதுரையில் பாதி அளவு மட்டுமே வேகம்
தரலாம்;
அல்லது
அந்த நகரிலிருந்து சிறிது தொலைவு தள்ளிப் போனால், இயங்காமலேயே இருக்கலாம்.
எனவே ஒன்றுக்கு இரண்டாக நெட்வொர்க் கார்டுகளை, வெவ்வேறு
நிறுவனங்களிடமிருந்து வாங்கிப் பயன்படுத்துவது நல்லது.
2.குறைந்த வேக மொபைல் இன்டர்நெட் இணைப்பு:
உங்கள்
மொபைல் போனில் இன்டர்நெட் இணைப்பு பெற்று பயன்படுத்து பவர்களுக்கு
வித்தியாசமான பிரச்னை உண்டாகலாம். உங்கள் மொபைல் போனில் இன்டர்நெட்
இணைப்பிற்கான ஐகானில் ஐந்து கட்டங்களும் நிறைவு பெற்று, சிக்னல் மிக
ஸ்ட்ராங்காக இருப்பதாகக் காட்டப்படலாம்.
ஆனால்
டேட்டா மிக மெதுவாக, நம் பொறுமையைச் சோதிக்கும் வகையில் கிடைக்கும். இதில்
என்ன சிக்கல் என்றால், உங்கள் மொபைல் போனுக்கும் அருகில் உள்ள அதன்
டவருக்கும் சிக்னல் பரிமாற்றம் மிக வேகமாக உள்ளது.
ஆனால்
அந்த சிக்னல் டவரினை அதிகம் பேர் பயன்படுத்துவதால், டேட்டா மிக மெதுவாகக்
கிடைக்கிறது. எனவே உடனே இன்டர்நெட் இணைப்பு வேண்டும் என்றால், உங்கள்
இடத்தை மாற்றிப் பார்க்க வேண்டும். சில வேளைகளில், சிக்னல் பரிமாற்றம் மிக
மோசமாக இருக்கும்; ஆனால் டேட்டா வரத்து வேகமாக இருக்கும். இதற்குக் காரணம்,
உங்கள் சிக்னல் டவரைக் குறைந்த இணைப்புகளே பயன்படுத்துவதால் தான்.
3. விடுதிகளில் வை-பி:
பல
சாதாரண விடுதிகள் கூட, இப்போதெல்லாம் அவர்கள் விடுதி முழுவதையும் வை-பி
செய்திருப்பதாக விளம்பரம் செய்கின்றனர். தங்கும் அனைவரும் இன்டர்நெட்
இணைப்பு வேண்டுவதால், இந்த வசதி தரும் விடுதிகளுக்கு முன்னுரிமை
தருகின்றனர்.
அங்கு
போன பின்னரே, நீங்கள் எதிர்பார்க்கும் வேகத்தில் அந்த வை-பி வேலை
செய்திடவில்லை என்பது. எனவே, நாமே நம்முடைய வை-பி ரௌட்டரைக் கொண்டு செல்ல
வேண்டும். ஈதர்நெட் இணைப்பினை வயர்வழி இணைத்திருக்கும்
அறையைக்
கேட்டு வாங்கி, அங்கு இவற்றைப் பயன்படுத்த வேண்டும். இது போன்ற வசதிகளை
மேற்கொள்கையில், நீளமான இணைப்பு தரும் கேபிள்களைக் கையுடன் கொண்டு
செல்லுங்கள். அறைகளில் உள்ள ஈதர்நெட் இணைப்பு மிகக் குறைவான நீளமுள்ள
கேபிளைக் கொண்டிருக்கும். நீங்களோ படுக்கையில் வைத்து லேப்டாப்பில்
இன்டர்நெட் இணைப்பினை மேற்கொள்ள எண்ணுவீர்கள். அதற்காகவே இந்த ஏற்பாடு.
4.இன்டர்நெட் வேகத்தை உறுதி செய்திடுங்கள்:
நம்
வர்த்தகம் மற்றும் அலுவலகப் பணிகளுக்காக, பெரிய அளவிலான பைல்களை அப்லோட்
செய்திட வேண்டிய திருக்கும். இன்டர்நெட் இணைப்புதான் உள்ளதே என்று, பைல்களை
அப்லோட் செய்திட முனைந்தால், அப்லோட் செய்திடும் நேரத்தில் நாமே நம்
அலுவலகத்திற்குச் சென்று திரும்பலாம் போலத் தோன்றும். எனவே, பைல்களை
அப்லோட் செய்திடும் முன், கிடைக்கும் இன்டர்நெட் இணைப்பினை ஒருமுறை சோதனை
செய்திடவும்.
5. பாதுகாப்பினைப் பயன்படுத்தவும்:
திறந்த
வெளியில் வை-பி இணைப்பு கிடைக்கிறதா? சற்று கவனத்துடன் பாதுகாப்பாகச்
செயல்படவும். ஹாட்ஸ்பாட் ஷீல்ட் (Hotspot Shield) போன்ற பயன்பாட்டு
புரோகிராம் களைப் பயன்படுத்தினால் உங்கள் மெயில் மற்றும் தனிநபர்
தகவல்களைப் பாதுகாப்பாகக் கையாளலாம். இதனை எல்லாம், இன்டர்நெட் இணைப்பினை
வை-பி மூலம் பெறும் முன்னர் ஏற்பாடு செய்து கொண்டு வைத்துக் கொள்ள
வேண்டும்.
6.கிளவ்ட் இணைப்பினைத் தள்ளி வைக்கலாம்:
கிளவுட்
கம்ப்யூட்டிங் முறை வெகு வேகமாகப் பரவி வருகிறது. பல நிறுவனங்கள் தங்கள்
டிஜிட்டல் செலவுகளைக் குறைத்திட இந்த முறைக்குத் தாவி வருகின்றனர். இது
போன்ற சூழ்நிலையில், நீங்கள் உருவாக்கும் அனைத்து டாகுமெண்ட்களுக்கும்
உங்களுடைய நகல் ஒன்றை, உங்கள் கம்ப்யூட்டரில் சேவ் செய்து வைத்துக்
கொள்ளுங்கள். அதே போல கிளவ்ட் கம்ப்யூட்டிங் சர்வரில் இணைக்கப்படாமலேயே,
அலுவலகப் பணிகளை மேற்கொள்ளப் பழகிக் கொள்ளுங்கள்.
7.பயணத்திட்டத்தில் இன்டர்நெட்:
பயணம்
ஒன்றை, அலுவலகப் பணிகளுக்கோ, குடும்பத்தினருடனோ அல்லது தனி நபர்
சந்தோஷத்திற்காகவோ, மேற் கொள்ளத் திட்டமிடுகையில், மாத்திரைகள், பெர்சனல்
ஆடை, உணவு வகைகளுக்கு முக்கியத்துவம் அளித்து தயார் செய்வது போல,
இன்டர்நெட் இணைப்பினையும் உறுதி செய்து கொள்ளுங்கள்.
வெளியூர்களில்
உறவினர் அல்லது நண்பர் வீடுகளில் தங்கினாலும், விடுதிகளில் தங்கினாலும்
அங்கு இன்டர்நெட் இணைப்பு கிடைக்குமா என்று உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
அது போன்ற விடுதிகளிலேயே அறைகளை முன்பதிவு செய்திடவும். உங்களுடன்
இன்டர்நெட் இணைப்பு தரும், பழகிய நிறுவனத்தின் டேட்டா கார்டுகளை எடுத்துச்
செல்லவும்.
Comments