ஃப்ளாஷ் டிரைவை ராம் நினைவகமாக பயன்படுத்துவது எப்படி?
விண்டோஸ் எக்ஸ்பி / விஸ்ட்டா நிறுவப்பட்ட கணினிகளில் யு.எஸ்.பி கருவிகளைச் செருகுவதற்காக குறிப்பிட்ட ஸ்லாட்கள் இருக்கும்.
இந்த யுஎஸ்பிக்கான ஸ்லாட்களில் வெளி நினைவகங்களான ஃப்ளாஷ் டிரைவ்கள், பென் டிரைவ்கள் போன்றவற்றை செருகி தகவல் பரிமாற்றம் செய்து பழக்கப்பட்டுள்ளோம்.
ஆனால் இந்த பென் டிரைவ் / ஃப்ளாஷ் டிரைவ்களையே கணினியின் நினைவகமான ராம் உடன் இணைந்து செயல்படச் செய்தால் – கணினியின் வேகம் பலமடங்கு அதிகரிக்கும்.
கணினியின் தற்காலிக நினைவகமான ராம் மெமரியின் கொள்ளளவைக் கொண்டே கணினியின் வேகமும் நிர்ணயிக்கப்படுகிறது.
4GB ராம் நினைவகத்தின் விலையைக் காட்டிலும், 4 ஜிபி ஃப்ளாஷ் டிரைவின் விலை மிகக் குறைவுதான்.
ஆகவே ஏற்கனவே கணினியில் இணைக்கப்பட்டுள்ள ராம் உடன், ஒரு பென் டிரைவை இணைத்து – ஒட்டுமொத்த நினைவகத்தை அதிகரித்து கணினியின் வேகத்தையும் பலமடங்கு அதிகரிக்க ஒரு மென்பொருள் உள்ளது.
இந்த மென்பொருளைப் பயன்படுத்தினால் பென் டிரைவின் நினைவகத்தையும் கணினியின் ஒருங்கிணைந்த நினைவகமாக விண்டோஸ் கருதிவிடும்.
இலவச மென்பொருளாக eBoostr என்னும் பயன்பாட்டை இணையிறக்கம் செய்து கணினியில் நிறுவி இயக்கிப் பாருங்கள்.
இந்தப் பயன்பாட்டின் விதிமுறையின் படி தொடர்ச்சியாக 4 மணி நேரம் வரை மட்டும்தான் இந்த மென்பொருளைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
பிறகு கணினியை ஒரு முறை மறுபடி துவக்கி மீண்டும் பயன்படுத்தலாம்.
ஏற்கனவே பென் டிரைவ் / ஃப்ளாஷ் டிரைவ் வைத்திருப்போர் இதை அவரவர் கணினியில் முயன்று பார்க்கலாம்.
யுஎஸ்பி 2.0 கருவியுடனும் விண்டோஸ் எக்ஸ்ப்பி மற்றும் 2003, விஸ்ட்டாவுடனும் ஏற்புடையதாக உள்ளது.
இணையிறக்கச் சுட்டி : http://www.eboostr.com/
கலைச்சொற்கள் :
ஃப்ளாஷ் டிரைவ் – Flash drive
பென் டிரைவ் – Pen drive
நினைவகம் – Memory
யுஎஸ்பி – Universal Serial Bus
ஸ்லாட் – Slot
ராம் – Random Access Memory – RAM
இணையிறக்கம் – Download
பயன்பாட்டின் விதிமுறை – Terms and Conditions
மறுபடி துவக்கி – Restart

Comments