தாய்லாந்து வெள்ளத்தால் ஹார்டு டிஸ்க் விலை எகிறியது





 
 உலக அளவில் ஹார்டுவேர் சப்ளையில் தாய்லாந்து 70 சதவீத பங்கு வகிக்கிறது. ஏராளமான ஹார்டுவேர் தயாரிப்பு நிறுவனங்கள் பாங்காக் மற்றும் புறநகர்களில் செயல்படுகின்றன. தாய்லாந்து வெள்ளத்தில் பாங்காக் நகரமே மிதக்கிறது. அங்குள்ள சீகேட் உட்பட கம்ப்யூட்டர் ஹார்டு டிஸ்க் டிரைவ் தயாரிப்பு நிறுவனங்களில் உற்பத்தி முடங்கியது. உதிரிபாக தொழிற்சாலைகள் வெள்ளம் சூழ்ந்து பொருட்கள் நாசமாகின. இதனால், சப்ளை பாதிக்கப்பட்டுள்ளது.

எனவே, இந்தியா உட்பட பல நாடுகளில் ஹார்டு டிஸ்க் விலை இரு மடங்காக உயர்ந்துள்ளது. சென்னையில் கம்ப்யூட்டர் ஹார்டுவேர் மற்றும் உதிரி பாகங்கள் மொத்த விலையில் கிடைக்கும் ரிச்சி தெருவில் கடந்த வாரம் ரூ.2,300க்கு விற்ற சீகேட் ஹார்டு டிஸ்க், இப்போது ரூ.4,600 ஆக உயர்ந்துள்ளது. அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளிலும் விலை எகிறியுள்ளது. வெள்ள பாதிப்பால் ஹார்டு டிஸ்க் தயாரிப்பு நிறுவனங்கள் இந்த நிதி ஆண்டில் கடும் நஷ்டத்தை சந்திக்கும்.

Comments

Popular posts from this blog

மறந்துபோன மொபைல் நம்பரை கண்டுபிடிக்க எளிய வழி..!

புதிதாக கணினி வாங்கும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன?

திருமண பொருத்தம் சுலபமாக பார்க்க