இந்தியாவில் இணையம் பயன்படுத்துபவர்கள் சில சுவாரஸ்யமான தகவல்கள்

இணையம் என்பது தற்போதைய உலகில் ஒரு மிகப்பெரிய ஊடகமாக மாறிவிட்டது. முதன் முதலில் அமெரிக்க ராணுவத்திற்காக உருவாக்கப்பட்ட இணையம் தற்பொழுது உலகம் முழுவதும் மிக வேகமாக பரவி இப்பொழுது உலகையே தன்னுடைய கட்டுபாட்டில் வைத்துள்ளது. இணையம் இருப்பதால் தான் உலகில் எந்த மூலையில் நடப்பதையும் ஒரு நொடிப்பொழுதில் அறிகிறோம் மற்றும் இதன் வசதிகளை சொல்லி மாளாது. இந்த இணைய பயன்பாடு நம் இந்தியாவிலும் மிக வேகமாகபரவி வருகிறது. கணினியிலும் மொபைல் போன்களிலும் இணையத்தை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை கணிசமாக வளர்ந்து கொண்டே உள்ளது. அதை பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்களை கீழே காணலாம்.

இந்தியாவில் இணையம் பயன்படுத்துவோரின் சில தகவல்கள்:
  • செப்டெம்பர் 2011 கணக்கெடுப்பின் படி இந்தியாவில் இணையம் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 112 மில்லியனாகும். இதில் 88மில்லியன் நகரங்களில் இருந்தும் 24 மில்லியன் மக்கள் கிராமங்களில் இருந்தும் இணையத்தை பயன்படுத்துகின்றனர்.
  • கடந்த வருடத்தோடு ஒப்பிட்டு பார்த்தல் எண்ணிக்கையில் 13% வளர்ச்சி ஏற்ப்பட்டுள்ளது. இதே வளர்ச்சி நீடித்தால் டிசம்பர்2011 க்குள் இந்த எண்ணிக்கை 121 மில்லியன் பயனாளர்களை தாண்டும். 
  • இந்த 112 மில்லியன் பயனாளர்களில் 90மில்லியன் பேர் மாதத்திற்கு ஒரு முறையாவது இணையத்தை உபயோகிக்கின்றனர்.
  • 26.3 மில்லியன் மக்கள் தங்கள் மொபைல் மூலமாக இணையத்தை உபயோகிக்கின்றனர்.
  • இளைஞர்கள் தான் இணையத்தை அதிகமாக உபயோகிக்கின்றனர். மற்றும் 18 வயதுக்கு குறைவான பயனாளர்களின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது.
  • இணையத்தில் ஈமெயில்(89%),சமூக வலைத்தளங்கள்(71%), கல்வி சம்பந்தமாக(64%), பாடல்,வீடியோ(49%) மற்றும் நண்பர்களுடன் அரட்டை(55%) போன்ற வசதிகள் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது.
  • 79மில்லியன் பயனாளர்கள் இணையத்தை வாரம் ஒருமுறை இணையத்தை உபயோகிக்கின்றனர். 
  • இந்தியாவில் மும்பையில் தான் அதிகளவு (8.1 மில்லியன்) இணையத்தை பயன்படுத்துகின்றனர். சென்னை நான்காம் (2.9 மில்லியன்) இடத்தில் உள்ளது.

மேலும் விரிவாக அறிய இந்த லிங்கில் செல்லுங்கள் - icube Research Report

Comments

Popular posts from this blog

மறந்துபோன மொபைல் நம்பரை கண்டுபிடிக்க எளிய வழி..!

புதிதாக கணினி வாங்கும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன?

திருமண பொருத்தம் சுலபமாக பார்க்க