கணனியில் ஹெட் கிராஷ் பற்றி அறிய வேண்டுமா..?
ஹெட் கிராஷ் (Head Crash): என்பது, கம்ப்யூட்டரில் இயங்கும் ஹார்ட் ட்ரைவில் ஏற்பட்டுள்ள மோசமான பாதிப்பைக் குறிக்கும். முற்றிலும் சேதமடைந்த நிலையையும் இந்த சொல் விளக்குகிறது. ஹார்ட் டிஸ்க்கில் இந்த நிலை ஏற்படக் காரணம், அதில் சேரும் தூசுகள், தவறாக வடிவமைக்கப்பட்ட ஹார்ட் டிஸ்க் பகுதிகள், ஹார்ட் ட்ரைவ் ஏற்றுக் கொள்ள முடியாத உஷ்ணம், சரியாகப் பொருத்தாத நிலை போன்றவையாக இருக்கலாம். இவற்றால், ஹார்ட் டிஸ்க்கின் எழுதும் படிக்கும் ஹெட், டிஸ்க்குடன் சரியாகத் தொடர்பு ஏற்படுத்த இயலாமல், ஸ்கிராட்ச் ஏற்படுத்தலாம். அல்லது டிஸ்க்கினை எரிக்கலாம். இதனால், அதில் உள்ள டேட்டா முழுவதுமாக அழிக்கப்படலாம்.
ரெசல்யூசன் (Resolution): மானிட்டர் திரை அல்லது அச்சில் படம் ஒன்றில் எந்த அளவிற்கு டீடெய்ல்ஸ் உள்ளன என்பதைக் குறிக்க இந்த அளவு அலகு சொல்லைப் பயன்படுத்துகிறோம். ஒரு மானிட்டரில் இது அதன் பிக்ஸெல்களைக் குறிக்கிறது. எடுத்துக் காட்டாக 17 அங்குல மானிட்டரில் இது 1024 x 768 பிக்ஸெல் ஆக இருக்கும். அச்சுப் படிவம் மற்றும் ஸ்கேனரில் ரெசல்யூசன் என்பது ஒரு சதுர அங்குலத்தில் எத்தனை புள்ளிகளில் (Dots per inch) டீடெய்ல்ஸ் தரப்பட்டுள்ளது என்பதை இது குறிக்கிறது. அல்லது ஒரு சதுர அங்குல இடத்தில் எத்தனை துளி இங்க் அல்லது டோனர் தெளிக்கப்படுகிறது என்பதையும் ரெசல்யூசன் என்பதன் மூலம் சொல்லப்படுகிறது.
எம்.டி.ஏ. (Mail Transfer Agent): இதைச் சுருக்கமாக MTA என அழைக்கின்றனர். நாம் நம்முடைய இமெயில் கடிதத்தைத் தயார் செய்து அதனை அனுப்புவதற்கு Send பட்டனை அழுத்தியவுடன் கடிதத்தை இதுதான் தன் வசம் எடுத்துக் கொள்கிறது. MTA என்பது ஒரு கம்ப்யூட்டர் புரோகிராம் அல்லது சாப்ட்வேர் ஏஜண்ட். உங்களுடைய கம்ப்யூட்டரிலிருந்து இமெயில் உங்கள் நண்பரின் கம்ப்யூட்டருக்கு அனுப்பப்படுகையில் பல கம்ப்யூட்டர்களை, சர்வர்களை அது தங்கி தாண்டிச் செல்கிறது. இந்த பயணத்தை இந்த MTA தான் கவனித்துக் கொள்கிறது. இது Mail Submission Agent மற்றும் Mail User Agent என்பவற்றுடன் இணைந்து செயல்படுகிறது. ஒவ்வொரு நாளும் நீங்கள் தயார் செய்திடும் இமெயில்களை வகைப்படுத்தி அனுப்புவது இதுதான். இமெயில்கள் வகைப்படுத்தப்பட்டவுடன் அவற்றிற்கு ஒரு ஹெடர் கொடுத்து Mail Delivery Agent (MDA)க்கு அனுப்புகிறது. இந்த இமெயில்கள் அனைத்தும் சரியாக உரிய கம்ப்யூட்டருக்குச் செல்கின்றனவா என்பதனை இந்த Mail Delivery Agent தான் பார்த்துக் கொள்கிறது.
Comments