பென்டிரைவில் மறைந்த கோப்புகளை மீட்பது எப்படி

இன்றையை மென்பொருள் உலகத்தில் பென் டிரைவ் என்றழைக்கப்படும் தகவல் சேமிக்கும் கருவி இன்றியமையாத ஒன்றாகிவிட்டது. 

பென்டிரவைகள் ஒரே கனிப்பொறியில் பயன்படுத்தாமல், தேவைப்படும் இடங்களிலெல்லாம், அங்குள்ள கனிப்பொறிகளில் பயன்படுத்துகின்றனர். இவ்வாறு செய்யும் போது பென்டிரைவை, கம்யூட்டர் வைரஸ் தாக்கும் அபாயம் உள்ளது. 

ஒருவேளை பென்டிரைவை வைரஸ் தாக்கினால் அதில் உள்ள தகவல்கள் மறைந்துவிடும். அவ்வாறு மறைந்துவிட்டால், பென்டிரைவை கணிப்பொறியுடன் இணைக்கும் போது அதில் தகவல்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ள இடத்தை மட்டும் காட்டும். எனவே இழந்த தகவலை மீட்டெடுக்க கீழ்கண்ட வழிமுறையை பின்பற்றலாம்.

1. முதலில் கணிப்பொறியில் Start ==> Run ==> CMD==> Enter கொடுக்கவும்

2. இப்பொழுது பென்டிரைவ் எந்த டிரைவில் உள்ளது என்பதை தெரிந்துகொள்ளுங்கள் My Computer செல்வதன் மூலம் இதை உறுதிசெய்யலாம்.

3. உதாரணமாக E: டிரைவில் பென்டிரைவ் உள்ளது என்றால் நீங்கள் E: என டைப் செய்து Enter பட்டனை அழுத்தவும்.

4. attrib h s r /s /d *.* என டைப் செய்யவும். ஒவ்வொரு பகுதியை டைப் செய்யும் போதும் சரியான முறையில் Space கொடுக்கவும்.

5. இப்போது Enter பட்டனை அழுத்துங்கள். சில வினாடிகளுக்கு பிறகு உங்களின் பென்டிரைவை வெளியில் எடுத்து, மீண்டும் போட்டுப்பாருங்கள் மறைக்கப்பட்டிருந்த அனைத்து தகவல்களும் இப்போது திரையில் தெரியும்.

ஆனால் தகவல்கள் திரும்ப கிடைத்தாலும் அதில் உள்ள வைரஸ்கள் அப்படியே தான் இருக்கும் எனவே தேவையான தகவலை எடுத்துக்கொண்ட பின் பென் டிரைவை பார்மெட் செய்வதே சிறந்ததாகும்.


Comments

Popular posts from this blog

மறந்துபோன மொபைல் நம்பரை கண்டுபிடிக்க எளிய வழி..!

புதிதாக கணினி வாங்கும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன?

திருமண பொருத்தம் சுலபமாக பார்க்க