ஸ்கைப்பில் இனி குரூப் வீடியோ வசதி
ஒருவருக்கொருவர் திரையில் கண்டு பேசி மகிழ்ந்து கொள்ள உதவும் அப்ளிகேஷன் புரோகிராம்களில், பெரும்பாலானவர்கள் பயன்படுத்துவது ஸ்கைப் ஆகும். இதனை மைக்ரோசாப்ட் நிறுவனம் விலைக்கு வாங்கி, அதில் மேம்படுத்துதலைக் கொண்டு வந்துள்ளது.
இதில் அக்கவுண்ட் கொண்டுள்ள எவரும், இணைய தொடர்பு கொண்டு, வீடியோ காட்சியாக ஒருவொருக்கொருவர் பார்த்துக் கொண்டு பேசலாம். இருவருக்கு மேலானவர்கள் ஒரே நேரத்தில் கலந்துகொண்டு பேச, மாதம் ஒன்றுக்கு 10 டாலர் கட்டணம் செலுத்த வேண்டும். இதனை பிரிமியம் அக்கவுண்ட் என மைக்ரோசாப்ட் அழைக்கிறது. இதில் குறிப்பிட்ட இடங்களுக்கு, நேரடியாக தொலைபேசி எண்களையும் அழைத்து பேசும் வசதியும் உண்டு.
இப்போது இந்த வசதிகளில், குழுவாக வீடியோ காட்சிகளை அமைத்துப் பயன்படுத்தும் வசதியினை, மைக்ரோசாப்ட் இலவசமாக வழங்குகிறது. மூன்று முதல் பத்து நபர்கள் வரை ஒரே நேரத்தில் இணைந்து பேசலாம். நீங்கள் பயன்படுத்தும் கம்ப்யூட்டர் சாதனம் மற்றும் இணைய இணைப்பினைப் பொறுத்து இதன் தன்மை அமையும். இருப்பினும், ஒரே நேரத்தில் ஐந்து பேர் வரை பேசுவதே சிறப்பாகும் என மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது. விண்டோஸ் டெஸ்க்டாப், மேக் மற்றும் எக்ஸ் பாக்ஸ் ஒன் ஆகிய இயக்கங்களில் இந்த வசதி தற்போதைக்குக் கிடைக்கிறது. மேலும் பல ஆப்பரேட்டிங் சிஸ்டங் களில் இயங்கும் வகையில் இந்த வசதி நீட்டிக்கப்படும்.
நன்றி
Comments