சாம்சங்கை மிரட்டும் மோட்டோ ஜி



இந்தியாவில் மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் ஸ்மார்ட் போன்கள் பட்டியலில் முதலிடத்தில் இருப்பது ஆப்பிள் நிறுவனத்தின் ஐ-போன். இதற்கு 
அடுத்தபடியாக சாம்சங் நிறுவனம் உள்ளது. ஆனால் இரண்டு நிறுவனங்களின் தயாரிப்புகளுக்கும் பெரிய அளவிலான வித்தியாசங்கள் தொழில்நுட்ப வித்தியாசங்கள் இருக்காது. ஆனால் ஆப்பிள் நிறுவனம் தங்களின் தொழில்நுட்பத்தை சாம்சங் நிறுவனம் காப்பியடித்ததாக வழக்கு தொடர்ந்து அதில் வெற்றியும் பெற்றது.

இருப்பினும் தற்போது ஆப்பிள் நிறுவனத்தின் ஐ-போனை காட்டிலும் சாம்சங் நிறுவனத்தின் போன்கள் விற்பனையில் சக்கைபோடு போட்டுவருகின்றன. இதனால் தங்களை அடித்துக்கொள்ள ஆளில்லை என்று பெருமை பாடிக்கொண்டிருந்த சாம்சங் நிறுவனம், சமீபத்தில் வெளியான மோட்டரோலா நிறுவனத்தின் மோட்டோ-ஜி வகை ஸ்மார்ட் போன்களை கண்டு மிரண்டு போயுள்ளது.

இதற்கு காரணம் சாம்சங் நிறுவனத்தின் விலை உயர்ந்த ஸ்மார்ட் போன்களில் உள்ள அனைத்து நவீன வசதிகளும், மோட்டரோலா நிறுவனத்தில் மோட்டோ-ஜி போனில் உள்ளது. ஆனால் விலை வெறும் 12 ஆயிரம் மட்டுமே. இதனால் அறிமுகப்படுத்திய சில வாரங்களிலேயே அனைத்து போன்களும் விற்றுத்தீர்ந்தது. மோட்டோ-ஜி வகை போன்களின் விற்பனையை பார்த்து சாம்சங் நிறுவனம் அதிர்ச்சியானது.

இந்நிலையில் அடுத்த சில வாரங்களில் மோட்டரோலா நிறுவனம், அதிநவீன வசதிகளுடன் கூடிய மோட்டோ-இ வகை செல்போன்களை வெளியிட உள்ளது. இந்த போனில் ஒரு ஜிபி ரேம், 1.2 ஜிகாஹ்ர்ட்ஸ் டுயல்கோர் புராசசர், 5 எம்பி பின்பக்க கேமரா, ஆண்ட்ராய்டு கிட்கேட் ஆப்பரேட்டிங்க் சிஸ்டம் என பல்வேறு நவீன வசதிகளை மோட்டோ-இ வகை செல்போன்களில் புகுத்தியுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன், ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்-5சி வகை செல்போனுக்கு நிகராக வசதிகளை கொண்டுள்ளது. இதன் விற்பனை விலை விவரங்களை மோட்டரோலா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை. இருப்பினும் இதன் விலை 15 ஆயிரம் முதல் 17 ஆயிரம் வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சாம்சங் நிறுவனத்தின் கலக்கத்திற்கு இதுவே காரணம், சமீபத்தில் வெளியாகி விற்பனையாகிக்கொண்டிருக்கும் கேலக்சி-5எஸ் போனை ஒப்பிடும் போது இதில் ஒரு சில வசதிகள் மட்டுமே குறைவாக உள்ளது. இருப்பினும் மோட்டோ-இ ஸ்மார்ட் போன் வெளியானால் மோட்டோ-ஜி ஸ்மார்ட்போனை காட்டிலும் சக்கைபோடுபோடும் என்று எதிர்பார்க்கலாம்.

நன்றி

Comments

Popular posts from this blog

மறந்துபோன மொபைல் நம்பரை கண்டுபிடிக்க எளிய வழி..!

புதிதாக கணினி வாங்கும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன?

திருமண பொருத்தம் சுலபமாக பார்க்க