டிஜிட்டல் உலகில் பரபரப்பு ஆண்ட்ராய்ட் ஓ.எஸ்
டிஜிட்டல் உலகில் இப்போதைய பரபரப்பு ஸ்மார்ட் வாட்ச்களாகும். முதன் முதலில் சோனி நிறுவனம் தான் ஸ்மார்ட் வாட்ச்களைத் தயாரித்து, இரண்டு
மாடல்களை வெளியிட்டது. ஆனால், இவை இரண்டும் அவ்வளவாக மக்களைச் சென்றடையவில்லை. சோனி ஸ்மார்ட் வாட்ச், ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தினை தன் ஆப்பரேட்டிங் சிஸ்டமாகப் பயன்படுத்தவில்லை.
சென்ற வாரம், கூகுள் நிறுவனம் தன்னுடைய ஆண்ட்ராய்ட் வேர் எஸ்.டி.கே. (Android Wear SDK) என்ற சிஸ்டத்தினை ஸ்மார்ட் வாட்ச்களுக்கென அறிமுகப்படுத்தியபோது, எல்.ஜி. மற்றும் மோட்டோ நிறுவனங்கள் தங்கள் ஸ்மார்ட் வாட்ச்களை அறிவித்தன.
ஆனால், சோனி நிறுவனம் தன் ஸ்மார்ட் வாட்ச்களுக்கு ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தினைத் தவிர்த்து, தன்னுடைய ஆப்பரேட்டிங் சிஸ்டத் தினையே பயன்படுத்த இருப்பதாக அறிவித்தது. தன் நிறுவனம், தன்னுடைய சிஸ்டத்தினைத் தயாரிக்க பலரின் முயற்சிகளையும், பணத்தினையும் செலவழித்திருப்பதாகவும், எனவே அதனையே தொடர்ந்து பயன்படுத்த முடிவெடுத்திருப்பதாகவும் அறிவித்தது. இருப்பினும் தன் ஸ்மார்ட் வாட்ச்களில், ஆண்ட்ராய்ட் ஓ.எஸ். பயன்படுத்துவது குறித்து தொடர்ந்து யோசிக்கும் எனவும் கூறியுள்ளது.
நன்றி
Comments