டாகுமெண்ட் பதிந்த தேதியை பார்பது எப்படி

 
வேர்ட் புரோகிராமில், ஒவ்வொரு முறை நீங்கள் டாகுமெண்ட் ஒன்றினை சேவ் செய்திடுகையில், அந்த டாகுமெண்ட் குறித்த சில விஷயங்கள்
தானாகவே அற்றைப்படுத்தப்படுகின்றன. இதில் ஒரு தகவல், அதனை இறுதியாக எடிட் செய்த தேதியாகும். 

இந்த தேதியை, அந்த டாகுமெண்ட்டிலும் பதியச் செய்திடலாம். அதனையும் தானாக அப்டேட் செய்திடும் வகையில் செட் செய்திட லாம். இதற்குக் கீழே கண்டுள்ளபடி செயல்படவும்.

1. உங்கள் கர்சரை டாகுமெண்ட்டில் எந்த இடத்தில், இறுதியாக எடிட் செய்த தேதி காட்டப்பட்டு, ஒவ்வொரு முறையும் அப்டேட் ஆக வேண்டுமோ, அந்த இடத்தில் வைக்கவும்.

2. வேர்ட் ரிப்பனில் டேப்பினைக் கிளிக் செய்து அப்பிரிவினைக் காட்டவும்.

3. இதில் உள்ள டெக்ஸ்ட் குரூப்பில் (Text group) Quick Parts என்பதில் கிளிக் செய்திடவும். அதன் பின்னர், Fields என்பதில் கிளிக் செய்திடவும். வேர்ட் Field டயலாக் பாக்ஸைக் காட்டும்.

4. டயலாக் பாக்ஸின் இடது பக்கத்தில் உள்ள பீல்ட் வகைகளில் Date and Time என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.

5. இங்கு வலது பக்கத்தில் உள்ள பீல்ட் பட்டியலிலிருந்து Save Date என்பதைத் தேர்ந்தெடுக்கவும். 

6. தேதி எப்படிக் காட்டப்பட வேண்டுமென்பதற்கான வடிவமைப்பினைத் தேர்ந்தெடுக்க Options என்பதில் கிளிக் செய்திடவும்.
அடுத்து பீல்டை அமைக்க ஓகே கிளிக் செய்திடவும்.

நன்றி

Comments

Popular posts from this blog

மறந்துபோன மொபைல் நம்பரை கண்டுபிடிக்க எளிய வழி..!

புதிதாக கணினி வாங்கும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன?

திருமண பொருத்தம் சுலபமாக பார்க்க