கூகுள் கார் சோதனை ஓட்டம்
ஓட்டுனர் இல்லாமல் இயங்கும் கார்களின் சோதனை ஓட்டம் அமெரிக்காவில் நடைபெற்றது. பிரபல இனையதள நிறுவனம் கூகுள்லின் தயாரிப்பான இந்த கார்கள் சாலைகளில் பயணித்து பிரமிப்பை ஏற்படுத்தின. கலிபோர்னியா பகுதியில் மௌன்டைன் வியுவ் பகுதியில் நடைபெற்ற சோதனை ஓட்டத்தில் நான்கு கார்கள் பங்கேற்றன. முற்றிலும் லேசர், சென்சார் தொழில்நுட்பத்துடன் இயங்கும் கார்களில் முன்கூட்டியே நாம் செல்ல திட்டமிட்ட இடங்களை கணினியில் பதிவு செய்யப்படும். அதன் பின் கார்கள் பொறப்பட்டு சாலைகளில் உள்ள சிக்னல்களில் நின்றும் வாகனத்துடன் பயின்றும் திட்டமிட்ட இடங்களுக்கு செல்கின்றன. ஓட்டுனர் இல்லாமல் இயங்கும் கார்களின் சோதனை ஓட்டம் தங்களுக்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியதாக கூறிய கூகுல் நிறுவனம், எதிர்காலத்தில் இது போன்ற கார்களை தயாரித்து விற்பனை செய்யப்படுமா என்ற தகவலை கூற மறுத்துவிட்டது. அதே நேரம் இதைப்பற்றிய தொழில்நுட்பம் வரும் 2017ஆம் ஆண்டு வெளியிடப்படும் என்றும் அந்நிறுவனம் கூறியுள்ளது. நன்றி நிலவைத்தேடி