Information Technology - தகவல் தொழில்நுட்பம்

எவ்வளவு தான் அறிவியல் வளர்ச்சியடைந்தாலும், தகவல் தொழில்நுட்பம் விண்ணைத் தொட்டாலும், ஒரு மொழி என்பது அதிலுள்ள கலைச்சொற்களை உள்வாங்கி தன்னைத் தகவமைத்துக் கொள்ளாதவரை, அம்மொழி தன்னை நிலை நிறுத்திக் கொள்ள முடியாது.

அந்த வகையில் கணினி சம்மந்தமான ஆங்கிலச் சொற்களை மொழிபெயர்ப்பு செய்து வெளியாகியுள்ள தமிழ்ச் சொற்களை வரவேற்போம்!

Computer - கணினி / கணிப்பொறி
Key board - விசைப்பலகை
Software - மென்பொருள்
Application Software - பொதுபயன்பாட்டு மென்பொருள்
Hardware - வன்பொருள்
Screen - திரை
Laptop - மடிக்கணினி
Central Processing Unit - மையச்செயலகம்
Compact Disk - இறுவட்டு/குறுவட்டு
Memory - நினைவகம்
RAM - தற்காலிக நினைவகம்
Control Unit - கட்டுப்பாட்டகம்
Registers - பதிவகம்
Microprocessor - நுண்செயலகம்
Operating System - இயக்கு தளம்
Digital - எண்ணிமம்
Pointer - சுட்டி
Mouse - சொடுக்குபொறி
Binary Numbers ( 0, 1 ) - இரும எண்கள் / துவித எண்கள்
Internet - இணையம் / இணையத்தளம்
Networking - வலைப்பின்னல் / வலையமைப்பு
Browser - உலவி / உலாவி
Printer - அச்சுப்பொறி
Server - வழங்கி
Internet Server - இணைய வழங்கி
IC ( Integrated Circuit) - ஒருங்கிணைச் சுற்று
Data - தரவுகள் / Datum - தரவு
Command - கட்டளை
Button - பொத்தான்
Input - உள்ளிடு
Battery/Cell - மின்கலம்
Digital Versatile Disk(DVD) -பல் திறன் வட்டு
Port - பொருத்துவாய்
Liquid Crystal Display (LCD)- திரவப்படிக திரையகம்
Super computer - மீத்திறன் கணினி
File - கோப்பு
Output - வெளியீடு
E-mail - மின்னஞ்சல்
Download - பதிவிறக்கம்
Multi-media - பல்லூடகம்
Compiler/ interpreters - நிரல்மொழிமாற்றி
High Level Language - மேல்நிலை நிரல்மொழி
Low Level Language - கீழ்நிலை நிரல்மொழி
Source Language/ Source Code - மூல மொழி
Machine Language - பொறி மொழி
Executable Program - நிறைவேற்றத்தகு நிரல்
Execute - நிறைவேற்று
Source Code Optimizer - மூல மொழி ஊகவுறுத்தி
Code Generator - குறிமுறை இயற்றி / நிரல் இயற்றி
Target Code Optimizer - பெயர்ப்பு மொழி ஊகவுறுத்தி
Tool Bar - கருவிப்பட்டை
IT (information Technology) - தகவல் தொழில்நுட்பம்
Interface- இடைமுகம்/இடைமுகப்பு
table - அட்டவணை
List - பட்டியல்
Object Oriented Language - பொருள்நோக்கு நிரல்மொழி
Data Base - தரவுத்தளம்
Free / Open - கட்டற்ற
Function - செயற்கூறு
Modem- இணக்கி
Chip - சில்லு
Word Processor - சொல் செயலி
Spread Sheet - விரி தாள்
Global positioning System (GPS)- உலக இருப்பிட முறைமை
Scroll bar - உருள் பட்டை
Interface - இடை முகம்
Synchronise - ஒத்தியக்கம்

Comments

Popular posts from this blog

மறந்துபோன மொபைல் நம்பரை கண்டுபிடிக்க எளிய வழி..!

புதிதாக கணினி வாங்கும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன?

திருமண பொருத்தம் சுலபமாக பார்க்க