ஐ பேட் மினியில் இல்லாத வசதிகளுடன் சாம்சங் கேலக்ஸி நோட் 8
சாம்சங்
நிறுவனம் அண்மையில் வெளியிட்ட காலக்ஸி நோட் 8 டேப்ளட், ஐ பேட் மினிக்குப்
போட்டியாகவே வெளியிடப்பட்டது. ஆனால், ஆப்பிள் நிறுவனம் காப்பி அடித்துத் தர
முடியாத பல சிறப்புகள் இதில் தரப்பட்டுள்ளன.
அதனால், ஐ பேட் மினியை, இந்த வகையில், காலக்ஸி நோட் 8 வெற்றி பெற்றுவிட்டது எனவே கூற வேண்டும்.
ஐபேட் மினியின் அளவிலேயே, காலக்ஸி நோட் 8ம் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆனால்,
ஒப்புமை அத்துடன் நின்றுவிடுகிறது. சாம்சங், தனக்கே உரித்தான வகையில்,
ஆப்பிள் தராத சில தனிச் சிறப்புடன் கூடிய வசதிகளை அளித்துள்ளது.
காலக்ஸி நோட் 8 கொண்டுள்ள கூடுதல் அளவிலான திரை, புதிய வாழ்க்கைக்கு உங்களை
அழைக்கிறது. சாம்சங் நோட் போன்களிலும், மேலும் பெரிய நோட் 10.1லும்,
பரவலாக விரும்பிப் பயன்படுத்தப்படும், சாம்சங் எஸ் பென்,இதில் சிறப்பான
பயனைத் தருகிறது.
இதில் முழுமையாகப் பயன்படுத்தப்படும் வாய்ப்புகளைப் பெற்றுள்ளது. இந்தப்
பேனாவினைக் கொண்டு, மிக அழகாகவும் விரைவாகவும் நோட்ஸ் எடுக்கலாம். எனவே,
எந்த கூட்டத்திற்கும், கருத்தரங்கத்திற்கும், குறிப்பெடுக்க இதனைப்
பயன்படுத்தலாம்.
இதன் சிறப்பான சில அம்சங்கள்:
1. 1.6 கிகா ஹெர்ட்ஸ் வேகம் கொண்ட குவாட் கோர் சாம்சங் எக்ஸைனோஸ் 4412 ப்ராசரர்
2. 1280 x 800 பிக்ஸெல் டிஸ்பிளேயுடன் கூடிய 8 அங்குல திரை. டச் மற்றும் பென் டிஜிட்டைசர் இயக்கம்
3. இதன்மெமரி 2 ஜிபி
4. ஸ்டோரேஜ் மெமரி 16 ஜிபி. இதனை மைக்ரோ எஸ்.டி. கார்ட் மூலம் 64 ஜிபி வரை உயர்த்தலாம்
5. பின்பக்கமாக 5 எம்.பி. மற்றும் முன்பக்கமாக 1.3 எம்.பி. திறனுடன் கூடிய இரண்டு கேமராக்கள்
6. ஆண்ட்ராய்ட் 4.1 ஜெல்லி பீன் ஆப்பரேட்டிங் சிஸ்டம்.
7. 4,600 mAh திறன் கொண்ட பேட்டரி
8. வை-பி இணைப்பு
9. 210.8 X135.9 X 7.95 மிமீ அளவில் அமைக்கப்பட்டது; எடை 340 கிராம்
ஒரு சிலருக்கு, சாம்சங் தரும் ஆண்ட்ராய்ட் வசதிகள் பிடிக்காமல் இருக்கலாம்.
ஆனால், நோட் 2 மற்றும் தற்போது நோட் 8ல் இந்த வசதிகள் அனைவரையும் கவரும்
வகையில் உள்ளன.
இதன் 8 அங்குல அகலத் திரை, கைகளில் வைத்து இயக்குவதற்கான சிறப்பான ஏற்பாடாக
உள்ளது. இந்த டேப்ளட் தடிமன் மிகக் குறைவானதாகவும், எடை அதிகமின்றி
இருப்பதாலும், இந்த டேப்ளட்டை, போர்ட்ரெய்ட் மற்றும் லேண்ட்ஸ்கேப் வகையில்
என இரண்டு வகைகளிலும் இயக்குவதற்கு எளிமையாக உள்ளது.
இதன் கட்டமைப்பு பிளாஸ்டிக்கியாக உள்ளது, கீழே விழுந்தாலும் அதிர்ச்சி உள்ளே செல்வதில்லை.
இதன் முன்புறமாக உள்ள ஹோம் பட்டனின் இரு பக்கத்திலும் மெனு மற்றும் ரிடர்ன்
பட்டன்கள் அமைந்திருப்பது, இயக்குவதனை எளிதாக்குகிறது. டிஸ்பிளேக்கு
மேலாக, ஒரு வெப் கேமரா 1.3 எம்பி திறனுடன் தரப்பட்டுள்ளது. மேலாகவே, ஹெட்
போன் ஜாக், பவர் பட்டன் மற்றும் வால்யூம் பட்டன்கள் உள்ளன.
வலது பக்கத்தில் இன்ப்ரா ரெட் ட்ரான்ஸ்மிட்டர் உள்ளது. இதனை பொழுது போக்கு
சாதனங்களுக்கான ரிமோட் கண்ட்ரோல் ஆகப் பயன்படுத்த அப்ளிகேஷனை இந்த நோட்
கொண்டுள்ளது.
ஐபேட் மினியை பின்னுக்குத் தள்ளும் வசதிகள்: இதில் உள்ள எஸ் பென், இதன்
கீழ் வலது பக்கத்தில் அமர்ந்து கொள்கிறது. இதனை எடுத்தவுடன், குறிப்பெடுக்க
எஸ் நோட் அப்ளிகேஷன் இயங்கி, திரையில் காட்டப்படுகிறது.
இந்த பென் ஹோவர் மோட் ஒன்றைக் கொண்டு, அதன் மூலம் பெர்சனல் கம்ப்யூட்டரின்
மவுஸ் போன்ற இயக்கத்தினைத் தருகிறது. இதனை நோட்பேட் போலப் பயன்படுத்த பல
தர்ட் பார்ட்டி அப்ளிகேஷன்களும் கிடைக்கின்றன.
இந்த காலக்ஸி நோட் பிசியில், இரண்டு அப்ளிகேஷன்கள் ஒரே நேரத்தில் இயங்கித்
திரையில் காட்டப்படுகின்றன. இது ஐ பேட் மினியில் மேற்கொள்ள முடியாத ஒன்று.
இது நோட் 2 போனில் இருந்தாலும், அகலமான திரை கொண்ட நோட் 8ல் இது, மிகப்
பெரிய வசதியாகத் தெரிகிறது.
இந்த காலக்ஸி நோட் அமெரிக்காவில் 399 டாலர் என விலையிடப்பட்டுள்ளது. இது போகப் போகக் குறையலாம்
Comments