ரூபாய் 10,000 க்கு குறைவாக கிடைக்கும் 5 சிறந்த ஆன்ட்ராய்ட் போன்கள்
தினம் தினம் பல புதிய மொபைல் போன்கள்
வெளியாகின்றன, பலருக்கு எந்த போனை வாங்குவது என்று குழப்பமாக இருக்கும்.
அதை போக்க இந்த மாதத்தின் சிறந்த ஆன்ட்ராய்ட் போன்கள் அதுவும் ரூபாய்
10,000 க்கும் குறைவாக உள்ளவற்றை இங்கே காண்போம்.
- பட்டியலில் உள்ள போன்கள் ஐந்தும் குறைந்த பட்சம் 5MP கேமரா உள்ளவைகளாக தெரிவு செய்துள்ளேன்.
- விலை Flipkart தளத்தில் இருந்து Update செய்யப்பட்டுள்ளது. தேதி 10-04-2013. மற்ற தளங்களில் விலை மாறுபடலாம்.
XOLO A800 - ரூபாய் 9999 - Full Specifications
Intel Processor மூலம் தனது மார்கெட்டை
தொடங்கிய XOLO நிறுவனத்தின் சமீபத்திய வரவு A800. 4.5 Inch IPS Display, 1
GHz Dual Core Processor, 8 MP Camera, Android v4.0 (Ice Cream Sandwich)
OS மற்றும் Dual Sim என அசத்தலான வசதிகளுடன் உள்ளது. கொடுக்கும் விலைக்கு
மேலேயே வசதிகள் கிடைக்கின்றன. குறைந்த விலைக்கு மிக அதிகமான வசதிகளை
எதிர்நோக்கும் நபர்களுக்கு உகந்த மாடல்.
Micromax A101 - ரூபாய் 9999
குறைந்த விலை போன்களின் ஆதர்ச
நிறுவனமான Micromax இன் இந்த மாடல் 5 Inch TFT Display, 1 GHz Dual Core
Processor, 5 MP Camera, Android v4.0 (Ice Cream Sandwich) OS மற்றும்
Dual Sim போன்ற வசதிகளுடன் வருகிறது. 5 Inch Display என்பது
குறிப்பிடத்தக்க விஷயம்.
Samsung Galaxy Ace S5830i - ரூபாய் 9230 - Full Specifications
சாம்சங் நிறுவனம் 2011 ஆண்டு வெளியிட்ட
இந்த போன் இன்னும் பல வாசகர்களுக்கு பிடித்துள்ளது. இது 3.5 Inch TFT
Capacitive Touchscreen, 832 MHz Processor, Android v2.3 (Gingerbread) OS
மற்றும் 5 MP Camera போன்றவற்றுடன் வருகிறது. OS பழைய Version மற்றும்
கேமராவில் Flash இல்லை போன்றவை குறைபாடுகள். இவை பற்றிய கவலை இல்லாதவர்கள்
வாங்கலாம்.
Lava Iris 501 - விலை 9199 - Full Specifications
ஸ்மார்ட்போன் மார்கெட்டில் கொஞ்சம்
கொஞ்சமாக பிரபலமாகி வரும் Lava நிறுவனத்தின் Iris 501 மாடல் 5 Inch
Display, 1 GHz Dual Core Processor, 5 MP Camera, Android v4.0 (Ice Cream
Sandwich) OS மற்றும் Dual Sim போன்ற வசதிகளுடன் வருகிறது. மேலே
சொன்ன Micromax A101 போலவே 5 Inch Screen என்பது சிறந்த அம்சம்.
XOLO B700 - ரூபாய் 8999
மறுபடியும் அதே Xolo தான். இந்த B700
போனும் 4.3 Inch IPS Display, 1 GHz Dual Core Processor, 5 MP
Camera, Android v4.0 (Ice Cream Sandwich) OS மற்றும் Dual Sim போன்ற
வசதிகளுடன் உள்ளது. மிகக் குறிப்பிடத்தக்க விஷயம் 3450 mAh பாட்டரி. இது 23
மணி நேரம் Talk Time மற்றும் 380 மணி நேரம் Standby Time போன்றவற்றுடன்
வருகிறது.
இந்த ஐந்து போன்களை தவிர மற்ற சிறந்த போன்கள் கீழே உள்ளன.
- XOLO B700 - Rs. 8999
- XOLO X500 - Rs. 8499
- XOLO A700 - Rs. 7999
- Karbonn Smart A12 - Rs. 7990
- Huawei Ascend Y300 - Rs. 7980
இது எனது பரிந்துரை மட்டுமே. உங்கள் பார்வையில் இந்த விலைப் பட்டியலில் வேறு போன்கள் இருந்தால் அவற்றை கீழே சொல்லுங்கள்.
இந்த பகுதியை இனி தொடரலாம் என்று நினைக்கிறேன், அதற்கான உங்கள் கருத்துக்களை இங்கே பகிருங்கள்.
Comments