முதல் போன்

முதன்முதலில் அறிமுகமான போனில் பயன்படுத்தப்பட்ட பேட்டரியின் எடை ஒரு கிலோ ஆகும். பொறியாளர் மார்ட்டின் கூப்பரால் மொபைல் போன் அறிமுகப்படுத்தப்பட்டு 40 ஆண்டு ஆகிவிட்டது.

மொபைல் போனை முதலில் மோட்டோரோலா நிறுவனம் தான் தயாரித்தது. இதன் பொறியாளர்கள் குழுவின் தலைவராக மார்டின் கூப்பர் இருந்தார். அவர் 1973 ஆம் ஆண்டு ஏப்ரல் 3 ஆம் தேதி அமெரிக்காவின் நியூயார்க் நகரில் பத்திரிகையாளர்கள் கூட்டத்தில் மொபைல் போனை அறிமுகம் செய்தார். இதன்படி நேற்று முன்தினம் மொபைல் போன் 40 வயதை தாண்டியுள்ளது.

பத்திரிகையாளர்கள் கூட்டத்துக்கு செல்வதற்கு முன்பு, அவர் சிக்ஸ்த் அவென்யூவில் உள்ள அலுவலகத்தில் இருந்தபடி முதல் அழைப்பை செய்து பரிசோதித்து கொண்டார். இதுதான் அங்கீகரிக்கப்பட்ட முதல் அழைப்பாகும். அப்போது மார்டின் கூப்பர் பயன்படுத்தியது மோட்டோரோலா டைனா டிஏசி மொபைல் போனாகும்.

அதிலிருந்த பேட்டரியின் எடை ஒரு கிலோவாக இருந்தது. இது 20 நிமிடத்துக்கு மொபைல் போனுக்கு சக்தி அளித்தது. மார்டின் கூப்பர் முதல் முறையாக செய்த அழைப்பு, பெல்லா லேப்ஸ் நிறுவனத்தில் பணியாற்றிய தன்னுடைய போட்டியாளர் ஜோயல் ஏங்கெலுக்குத்தான்.

Comments

Popular posts from this blog

மறந்துபோன மொபைல் நம்பரை கண்டுபிடிக்க எளிய வழி..!

திருமண பொருத்தம் சுலபமாக பார்க்க

புதிதாக கணினி வாங்கும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன?