அமேசான் தற்போது இந்தியாவிலும்..!

இணையம் மூலம் பொருட்கள் வாங்கப் பயன்படும் முதன்மையான இணையதளம் அமேசான். இது ஒரு பன்னாட்டு நிறுவனம் ஆகும். தற்பொழுது அமேசான் இந்தியாவில் தனது விற்பனை இணையதளத்தை துவங்கியுள்ளது.
ஆன்லைன் மூலம் பொருட்களை வாங்கும் இந்தியர்களுக்கு இது மகிழ்ச்சி தரும் விடயம் ஆகும். அமேசான் இணையதளத்தில் உங்களுக்கு வேண்டிய பொருட்கள் அனைத்தும் உள்ளன.
தற்பொழுது அமேசான்.இன் தளத்தின் மூலம் புத்தகங்கள் (Books), டிவி மற்றும் மூவிகள் (TV&Movies) மட்டுமே விற்பனைக்கு உள்ளன. விரைவில் இத்தளத்தின் மூலம் கேமரா, செல்போன், ஐபேட், வாட்ச், டேப்ளட் பிசி, லேப்டாப் போன்ற எலக்ரானிக் ஐட்டங்களையும், கேம்ஸ், பாடல்கள்,  சாப்ட்வேர்கள், புத்தகங்கள், இ-புக்  போன்றவைகளையும் வாங்க முடியும்.  அனைத்துப் பொருட்களும் இத்தளத்திலேயே பெற்றுக்கொள்ள முடியும்.

மேலும் பலதரப்பட்ட மிகவும் பயனுள்ள பொருட்களை இத்தளத்தின் மூலம் வாங்க முடியும்.  கடை கடையாக ஏறி இறங்கி, பொருட்களைப் பார்த்து தேர்வு செய்ய அலுத்துக்கொள்ளும் நண்பர்களுக்கு இத்தளம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். வீட்டிலிருந்தபடியே கணினியில் உள்ளவாறே உங்களுடைய முகவரியுடன் ஆர்டர் கொடுத்துவிட்டு, அதற்கான பணத்தை செலுத்தினால் போதும்..

உங்கள் வீடுதேடி தரமிக்க பொருட்கள் வந்துவிடும்.  ஆன்லைன் மூலம் பொருட்களை வாங்க விரும்பும் இந்தியர்களுக்கு இத்தளம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. Online Shopping பிரியர்களுக்கு இது பயனுள்ள தளம்.

இத்தளத்தில் தங்களுடைய விற்பனைப் பொருட்களைப் பற்றியும், விற்பனை செய்யும் முறைகளைப் பற்றியும் விரிவாக கொடுத்திருக்கிறார்கள். அவற்றில் முதலிரண்டு பத்திகளை அப்படியே இங்கு கொடுத்திருக்கிறேன்.

Shop with Confidence -  Amazon.in


We are committed to ensure that you shop with confidence on Amazon.in. Our website is designed to help you find & order items easily, protect your data and deliver a great shopping experience, right from choosing your products to receiving them.
  • Genuine Products
  • Safe and Secure Ordering
  • 30 day returns
  • 100% purchase protection with A-to-Z Guarantee

இது ஒரு பன்னாட்டு நிறுவனமாகையால் நம்பி பொருட்களை வாங்கலாம். நூறு சதவிகித உத்தரவாதம் அளிக்கிறது.
அமேசானின் புதிய இந்திய இணைய தளம் http://www.amazon.in/
 

Comments

Popular posts from this blog

மறந்துபோன மொபைல் நம்பரை கண்டுபிடிக்க எளிய வழி..!

புதிதாக கணினி வாங்கும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன?

திருமண பொருத்தம் சுலபமாக பார்க்க