பயர்பாக்ஸ் ஸ்மார்ட் போன்..
வேகமாக வளர்ந்து வரும் ஸ்மார்ட் மொபைல் போன் சந்தையில், சற்று வித்தியாசமான வழியுடன் மொஸில்லா நுழைந்துள்ளது.
அதன்தொடக்கத்தினை இந்தியாவில் தொடங்கியுள்ளது இன்னும் சிறப்பானதாகும்.
தன்னுடைய பயர்பாக்ஸ் மொபைல் ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்ட ஸ்மார்ட் போன் விற்பனையை இந்தியாவில் தொடங்கியது.
Cloud FX எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட் போனை இண்டெக்ஸ் டெக்னாலஜிஸ் (Intex Technologies) நிறுவனம் வடிவமைத்துள்ளது.
ஆகஸ்ட் 25, திங்கள் கிழமை அன்று இது விற்பனைக்கு வந்துள்ளது. இதன் அதிக பட்ச விற்பனை விலை ரூ.1,999.
Snapdeal வர்த்தக இணைய தளம் மூலம் இதனைப் பெறலாம்.
இரண்டு மாதங்களுக்கு முன்னர் தான், மொஸில்லா இது குறித்து தெரிவித்திருந்தது.
இந்திய நிறுவனமான ஸ்பைஸ் நிறுவனத்துடனும், இந்த போனைத் தயாரித்து விற்பனை செய்திட ஒப்பந்தம் மேற்கொண்டு இருப்பதாகக் கூறியது.
இண்டெக்ஸ் நிறுவனத்தின் ஒத்துழைப்புடன், தொடக்க நிலை ஸ்மார்ட் போன் விற்பனையில் புதிய திருப்புமுனையினைக் கொள்ளப் போவதாக மொஸில்லா தெரிவித்தது.
இந்தியா மட்டுமின்றி, ஆசிய நாடுகள் அனைத்திலும் இது விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்படும்.
இந்த க்ளவ்ட் எப்.எக்ஸ் (Cloud FX) ஸ்மார்ட் போனில்,
3.5 அங்குல அளவில் திரை,
2 மெகா பிக்ஸெல் கேமரா,
1 கிகா ஹெர்ட்ஸ் இயக்க வேக ப்ராசசர்,
டூயல் சிம் இயக்கம் ஆகியவை இருக்கும்.
ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளுடன், தமிழ் மொழிக்கான சப்போர்ட்டும் தரப்படும்.
மொபைல் போன்களுக்கான ஆப்பரேட்டிங் சிஸ்டம் விற்பனைச் சந்தையில், மொஸில்லா சற்று தாமதமாகவே இந்தியாவில் நுழைந்துள்ளது.
ஏற்கனவே, சாம்சங் மற்றும் மோட்டாரோலா நிறுவனங்களின் போட்டியுடன், சீனாவின் ஸியோமி (Xiaomi) நிறுவனமும் சென்ற மாதம் இந்தியாவில் நுழைந்துள்ளது.
கூகுளின் ஆண்ட்ராய்ட், மைக்ரோசாப்ட் விண்டோஸ் போன் ஆகியவையும் இந்த போட்டியில் ஏற்கனவே, நல்ல இடத்தைப் பிடித்துள்ளன.
மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் போன்கள், சாம்சங் நிறுவனத்தின் போன்களுக்கு சவால் விட்டு வருகின்றன.
ஐ.டி.சி. அமைப்பின் அறிக்கையின்படி, ஒரு கோடியே 84 லட்சம் ஸ்மார்ட் போன்கள், இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டில் விற்பனைக்கு வந்தன.
இவற்றில் ஒரு கோடியே 49 லட்சம் போன்கள் (81%) ரூ.12,000 க்கும் குறைவாக விலையிடப்பட்டவையாகும்.
ரூ.3,000க்கும் குறைவான விலையில் சீன நிறுவனமும், மொஸில்லாவும் தங்கள் போன்களை வெளியிட்டு நிலையில், வரும் மாதங்களில், தொடக்க நிலை ஸ்மார்ட் போன் விற்பனைச் சந்தையில் பலத்த போட்டியினைப் பார்க்கலாம்.
மொஸில்லாவுடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ள ஸ்பைஸ் நிறுவனம், ஆகஸ்ட் 29ல் தன் Fire One Mi-FX என்ற ஸ்மார்ட் போனை விற்பனைக்குக் கொண்டு வருகிறது.
இதன் அதிக பட்ச விலை ரூ.2,299 ஆக இருக்கும் என எதிர்பர்கப்படுகிறது.
Comments