கூகுள் ட்ரைவ் ஒரு சில டிப்ஸ்
கூகுள் தரும் பல வசதிகளில், நமக்கு மிகச் சிறப்பாக உதவுவது அதன் தேடுதல், மெயில் ஆகியவற்றை அடுத்து பைல்களைச் சேமிக்க உதவும் கூகுள் ட்ரைவ் (Google Drive) ஆகும். இதன் மூலம், கூகுள் தரும் பல வசதிகளை ஒன்றிணைக்கலாம். சரியான டூல்களை செம்மைப் படுத்தி, செட்டிங்குகளை அமைத்தால், கூகுள் ட்ரைவ் வசதியை நமக்கு சில வேலைகளை மேற்கொண்டு செய்து தரும் வசதியாக மாற்றி விடலாம். அதற்கான டிப்ஸ்களை இங்கு பார்ப்போம். 1. இணைய இணைப்பு இல்லாமல்: கூகுள் ட்ரைவ் என்பதே க்ளவ்ட் கம்ப்யூட்டிங் முறையில் இயங்குவதாகும். ஆனாலும், ஒரு இரண்டு நிமிடங்கள் செலவு செய்து, செட்டிங்ஸ் மேற்கொண்டால், இணைய இணைப்பு இல்லாமலேயே, உங்கள் டாகுமெண்ட்களைப் பார்க்கலாம் மற்றும் திருத்தலாம். இதற்கான ஒரே தேவை, நீங்கள் கூகுள் தரும் குரோம் பிரவுசரைப் பயன்படுத்த வேண்டும். குரோம் பிரவுசரில் முதலில் கூகுள் ட்ரைவ் அப்ளிகேஷனை இன்ஸ்டால் செய்ய இந்த லிங்க் ஐ கிளிக் செய்யவும் . அடுத்து கூகிள் டிரைவ் என்ற இணைய தளம் செல்லவும். இதில் இடது பக்கம் கிடைக்கும் மெனுவில், "More” என்ற ஆப்ஷனில் கிள...