மக்களின் வாழ்க்கையை மாற்றிய கூகுளின் நிறுவனங்கள்..!! - அனைவரும் படிக்க வேண்டியது..
கூகிள் என்பது ஒரு தேடு பொறி மட்டுமல்ல இப்போது பல மக்களின் கடவுளாகக் கூட வந்துவிட்டது. ஆம் "கடவுளின்றி அணுவும் அசையாது என்பது போல "கூகிள் இன்றி இணையம் அசையாது" எந்தத் தேவையென்றாலும் நாம் பொதுவாகத் தேடும் தேடு பொறி கூகிள் தான்.
அப்படிப்பட்ட கூகிள் நிறுவனம் 1998 செப்டம்பர் மாதம் 4 ம் தேதி ஆரம்பிக்கப்பட்டது.
அப்படிப்பட்ட கூகிள் நிறுவனம் 1998 செப்டம்பர் மாதம் 4 ம் தேதி ஆரம்பிக்கப்பட்டது.
கூகிள் நிறுவனம் தன்னகத்தே பல நிறுவனங்களை வைத்திருக்கிறது. அவை அனைத்துமே அனைத்து மக்களாலும் பெரும்பாலும் உபயோகிக்கப்படுகிறது.
அந்த வகையில் நாம் இன்று அனைத்து கூகுளின் நிறுவனங்களைப் பற்றி ஒரு பார்வை பார்ப்போம்...
அந்த வகையில் நாம் இன்று அனைத்து கூகுளின் நிறுவனங்களைப் பற்றி ஒரு பார்வை பார்ப்போம்...
1.முதலாவதாக Google Adsense
Google Adsense என்பது விளம்பரங்களை இணையத்தளங்களில் இட்டு அதன் மூலம் அந்த இணையத்தள உரிமையாளருக்கு பணத்தினை ஈட்டிக்கொடுப்பது.
இந்த Google Adsense என்பது வேறு ஒரு கம்பனி மூலம் கூகுளிற்கு 2௦௦3 ல் விட்கப்பட்டதாகும்.
இதன் மூலம் பல இணையதளங்களை வைத்திருக்கும் பதிவர்கள் பணத்தினை ஈட்டும் வழியினை அளிக்கிறது..
2. அடுத்து.. Blogger
இந்த Blogger என்பது ஒரு தனிப்பட்ட நபரின் கருத்துகளை உலகத்துடன் பகிர ஒரு வாய்ப்பளிக்கும் சேவை.
இந்த வசதி மூலம் தான் இப்போது நான் உங்களுடன் என் கருத்துகளைத் தெரிவித்துக்
கொண்டிருக்கிறேன்.
Blogger என்பது 1999 ஆம் ஆண்டில் Pyra Labs என்ற நிறுவனத்தினால் ஆரம்பிக்கப்பட்டது. பின்
2003 ஆம் ஆண்டில் கூகிள் இந்த சேவையைத் தனதாக்கி பல லட்சக்கணக்கான பதிவர்களை உருவாக்கியுள்ளது. Blogger ல் நீங்களும் ஒரு இணைப்பை ஆரம்பித்து உங்கள் கருத்துகளை உலகுடன் இலவசமாகப் பகிர இவ் வசதி உதவுகிறது.
3. அடுத்து Android
Android தான் பல தொலைபேசிப் பிரியர்களாலும் விரும்பி பாவனை செய்யப்படும் Operating System ஆகும். இது ஒரு open source வகையைச் சேர்ந்தது.
Android.Inc என்ற நிறுவனத்திலிருந்து கூகிள் 2௦௦5 ஆம் ஆண்டில் பெற்று தனதாக்கிக் கொண்டது. இந்த Android ஐ உருவாக்கியவர்கள் Andy Rubin,Rich Miner,Nick Sears and Chris White ஆவர்...
இது பற்றி நான் உங்களுக்குப் பெரிதாகக் கூறத்தேவை இல்லை.. உங்களுக்கே தெரிந்திருக்கும்..
4. You Tube
உலகிலேயே பல மில்லியன் பயனர்களால் அன்றாடம் எந்த வகையான வீடியோக்களையும் பார்த்து ரசிக்கும் ஒரே ஒரு இணையத்தளம் என்றால் யூடியுப் தான். Youtube கூட கூகிளின் சொந்த தயாரிப்பு அல்ல Steve Chen, Chad Hurley, and Jawed Karim என்ற மூன்று paypal.com ல் பணி புரிந்த பட்டதாரிகளின் உழைப்பு தான். தங்களின் வேலைகளை குறிப்பிட்டுக் காட்டும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்டது.
இதோ இந்த வீடியோ தான் youtube ஆரம்பிப்பதில் ஒருவராக இருந்த Jawed என்பவரால் முதல் முதல் upload செய்யப்பட்ட வீடியோ....
5.அடுத்து Picasa
இதோ இந்த picasa மூலம் படங்களை எடிட் செய்யலாம் , எனப் பல படங்களை வைத்து புதுப் புது விடயங்களை மேட்கொள்ளலாம்..
இந்த சேவையை கூகிள் Lifescape(IdeaLab) என்ற நிறுவனத்திடமிருந்து 2004 ல்
பெற்றது.
6.அடுத்ததாக Google Maps
Google Map பல லட்சக்கணக்கான மக்களால் பாவனை செய்யப்படுகிறது. இவ் Google Maps சேவை c++ coding ஐ வைத்து இரு சகோதரர்களான
Lars and Jens Rasumssen என்போரால் உருவாக்கப்பட்டது.
இந்த சேவையை கூகிள் "Where2 Technologies" என்ற நிறுவனத்திடம் 2004 ஆம் ஆண்டு பெற்றது. இந்த சேவையை கூகிள் தனதாக்கிய பின் பல புதிய சிறப்பம்சங்களையும் உள்ளடக்கி இப்போது வெற்றிநடை போட்டு வருகிறது...
7.அடுத்து FeedBurner
இந்த சேவையானது blog வைத்திருப்போருக்கு மிகவும் உதவியானது. ஏநெனில் இந்த சேவையைப் பயன்படுத்தி அந்தக் குறிப்பிட்ட இணையத்தளத்தின் செய்திகளை மின்னஞ்சல் மூலம் வாசிக்க உதவும் சேவை...
நண்பர்களே...!! எனது தளத்திலும் Feedburner வசதி உள்ளது எனவே பதவின் கீழுள்ள பெட்டியில் உங்கள் மின்னஞ்சல் முகவரியைக் குறிப்பிட்டு submit ஐ கொடுத்தால் தொடர்ந்து என்னுடன் எனது பதிவுகளை வாசித்து மகிழலாம்...
பதிவு பயனானதாக இருந்தால் நண்பர்களுடனும் பகிருங்கள்....!!
நன்றி...!!
Comments