விண்டோஸ் 8ல் மறைக்கப்பட்ட பைல்களை காண
விண்டோஸ் சிஸ்டம் தொடக்கம் முதல், சில பைல்களை மறைத்தே வைத்திருக்கும்.
இவை பெரும்பாலும் சிஸ்டம் பைல்களாகவே இருக்கும். தேவை இல்லா நிலையில், இவற்றை அணுகி, பைல்களைத் திறந்து, சிஸ்டம் இயங்கா நிலையை உருவாக்கிவிடக் கூடாது என்ற எச்சரிக்கையில், இவை மறைத்து வைக்கப்பட்டிருக்கும்.
இவற்றை நாம் விரும்பினால், பெற்று, பைல்களைக் கையாளலாம்.
விண்டோஸ் 8 சிஸ்டத்தில், இவை எளிதாகப் பெறும் வகையில் வைக்கப் படவில்லை.
மறைக்கப்படும் பைல்களை எப்படிப் பெறுவது எனப் பார்க்கலாம்.
1. முதலில் திறந்து இயக்கிக் கொண்டி ருக்கும் அனைத்து புரோகிராம்களையும் மூடவும்.
2. இடது மூலையில் கீழாக ரைட் கிளிக் செய்து, கண்ட்ரோல் பேனல் திறக்கவும்.
3. கண்ட்ரோல் பேனல் தோற்றத்தில் View by: Small Icons என்பதில் கிளிக் செய்து மாற்றவும்.
4. கண்ட்ரோல் பேனல் பட்டியலில், போல்டர் ஆப்ஷன்ஸ் ("Folder Options”) என்பதனை டபுள் கிளிக் செய்திடவும்.
5. பின்னர் வியூ ("View”) டேப் கிளிக் செய்து, "Show hidden files, folders and drives” என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர், ஓகே கிளிக் செய்து வெளியே வரவும்.
இனி, மறைக்கப்பட்ட பைல்கள் மற்றும் போல்டர்கள் உங்களுக்குக் காட்டப்படும்.
Comments