இணைய பயன்பாட்டு அளவுகளை கணக்கிட..!

மொபைல் போனில் இரண்டு வகையான சிம் கார்டுகளை பயன்படுத்துவோம் பிரிபெய்டு, போஸ்ட்பெய்டு இவற்றில் பிரிபெய்டு சிம்கார்டில் இருப்புதொகை எவ்வளவு இருக்கிறது என்று பார்த்துக்கொள்ளும் வசதி உள்ளது. அதேபோல் போஸ்ட்பெய்டு சிம்கார்டில் எவ்வளவு தொகைக்கு பேசுகிறமோ அதனை பார்த்துக்கொள் வசதியும் உள்ளது. அதேபோன்று மீதமுள்ள இணைய பயன்பாட்டு அளவுகளையும் பார்த்துக்கொள்ளும் வசதி உள்ளது. மொபைல் போன் கொண்டு இணையத்தை பயன்படுத்தும் போது இதுவரை எவ்வளவு இணைய பயன்பாட்டினை பயன்படுத்தியுள்ளோம் என்று பார்த்துகொள்ளும் வசதி மொபைல் போன் நிறுவன புரவைடர்களிடம் உள்ளது.
அதுபோன்று டேட்டாகார்டு மூலம் இணைய இணைப்பினை பயன்படுத்தும் போதும் எவ்வளவு இணைய பயன்பாட்டினை பயன்படுத்தியுள்ளோம் என்று பார்த்துக்கொள்ளும் வசதியும் உள்ளது. ஒரே கணினியில் நாம் பல்வேறு இணைய இணைப்புகளை மாற்றி மாற்றி இணைத்து பயன்படுத்தும் வாய்ப்பு அதிகம்.

நம்முடைய கணினியில் எவ்வளவு இணைய பயன்பாட்டு அளவுகளை பயன்படுத்தி உள்ளோம் என்று முழுமையாக அறிந்து கொள்ள விண்டோஸ் இயங்குதளத்தில் வழி இல்லை, இதற்கு ஒரு மாற்று மென்பொருள் ஒன்று வழிவகை செய்கிறது.
மென்பொருளை தரவிறக்க சுட்டி




இந்த மென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கி பின் ஒப்பன் செய்யவும். இது ஒரு போர்ட்டபிள் மென்பொருள் ஆகும். 32பிட் மற்றும் 64பிட் என தனித்தனியாக மென்பொருள் உள்ளது.


மேலும் தனிப்பட்ட ஒரு பயனர் பயன்படுத்தும் இணைய இணைப்பு அளவுகளையும் அறிந்து கொள்ளும் வசதியும் இந்த மென்பொருளில் உண்டு. மேலும் எக்சல் கோப்பு வடிவில் பயன்படுத்திய அளவுகளை பிரதி எடுத்துக்கொள்ளும் வசதி இந்த மென்பொருளில் உள்ளது.

Comments

Popular posts from this blog

மறந்துபோன மொபைல் நம்பரை கண்டுபிடிக்க எளிய வழி..!

புதிதாக கணினி வாங்கும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன?

திருமண பொருத்தம் சுலபமாக பார்க்க