நோக்கியா ஆஷா 210 ஒரு பார்வை..!
தன்னுடைய ஆஷா வரிசை மொபைல் போன்களால், பலரைச் சென்றடைந்திருக்கும் நோக்கியா நிறுவனம், அண்மையில் ஆஷா 210 என்ற பெயரில், இரண்டு சிம் பயன்பாடு உள்ள மொபைல் போனை விற்பனைக்கு வெளியிட்டுள்ளது.
இதில் இரண்டு மினி ஜி.எஸ்.எம். சிம்களைப் பயன்படுத்தலாம். இது ஒரு 2ஜி போன். இதன் பரிமாணம் 111.5 x 60 x 11.8 மிமீ. எடை 99.5 கிராம்.
பார் டைப் வடிவில் உருவாக்கப்பட்டுள்ள இந்த போனில், 2.4 அங்குல அகலத்தில் திரை உள்ளது. லவுட் ஸ்பீக்கர், 3.5 மிமீ ஆடியோ ஜாக், 32 ஜிபி வரை மெமரி அதிகப்படுத்தும் மைக்ரோ எஸ்.டி. கார்ட் ஸ்லாட், 64 எம்.பி. ராம் மெமரி, 32 எம்.பி. ஸ்டோரேஜ் மெமரி தரப்பட்டுள்ளது.
நெட்வொர்க் இணைப்பிற்கு ஜி.பி.ஆர்.எஸ்., எட்ஜ், புளுடூத் ஆகிய தொழில் நுட்ப இயக்கங்கள் கிடைக்கின்றன.
2 எம்.பி. திறன் கொண்ட கேமரா இயங்குகிறது. வீடியோ இயக்கம் கிடைக்கிறது.
பதியும் வசதி கொண்ட எப்.எம். ஸ்டீரியோ ரேடியோ தரப்பட்டுள்ளது. MP3/WAV/ WMA/AAC,MP4/ ஆகிய ஆடியோ மற்றும் வீடியோ பார்மட் பைல்களை இதில் கையாளலாம்.
ஆர்கனைசர், பிரிடிக்டிவ் டெக்ஸ்ட் அமைப்பு ஆகிய வசதிகள் உள்ளன. இதில் தரப்பட்டுள்ள லித்தியம் அயன் பேட்டரி 1,200 mAh திறன் கொண்டது.
இதன் உதவியுடன் 12 மணி நேரம் தொடர்ந்து பேசலாம். 55 மணி நேரம் மின் சக்தி தாக்குப்பிடிக்கிறது.
Comments