காசோலை விவரங்களை வீட்டு பிரிண்டரில் டைப் செய்ய முடியுமா?
"தற்போது அனைத்து வங்கியின் காசோலை ஒரே அளவில் உள்ளது. எனவே காசோலையில் தேதி, பெயர், தொகை - எண்ணால் மற்றும் எழுத்தால் உரிய இடத்தில் வீட்டில் உள்ள பிரிண்டரில் டைப் செய்ய வழி முறை உள்ளதா?". நான் வோர்டில் இந்த செட்டிங்சை செய்து வைத்திருந்தேன். ஆனால் அதைவிட எளிதாக காசோலை கணக்குகளை எளிதில் கையாளும் வண்ணம் எக்செல்லில் ஒரு இலவச டெம்ப்ளேட் கிடைத்தது. அதன் மூலம் நம் வீட்டில் உள்ள பிரிண்டரில் கூட காசோலையில் பெயர் தேதி தொகைகளை எளிதாக நிரப்ப செய்ய முடியும்.
கையாள்வதற்கு மிக எளிமையான இதை பயன்படுத்த Excel மேக்ரோ Enable செய்யப்பட்டிருக்க வேண்டும் இதோ விளக்கம்,
கீழுள்ள இணைப்பின்மூலம் Cheque Print என்ற எக்செல் கோப்பை டவுன் லோட் செய்யவும்.
இதை கணினியில் உங்களுக்கு வசதியான இடத்தில் வைத்துக் கொள்ளவும். கோப்பை திறந்தவுடன் மேக்ரோக்கள் செயல்பட அனுமதி கேட்கும்.படத்தில் உள்ளவாறு Options ஐ கிளிக் செய்துEnable the Content தேர்ந்தெடுக்கவும்
முதல் சீட் HOME..இதில் காசோலை பிரிண்ட் செய்வதற்கான குறிப்புகள் கொடுக்கப் பட்டுள்ளன.
இந்த விவரங்களில் Amount in words நான் forumula பயன்படுத்தி இருக்கிறேன்.நீங்கள் ரூபாயை எழுத்துக்களால் டைப் செய்தும் கொள்ளலாம்
(Formula பயன்படுத்த வேண்டுமெனில் இந்த பதிவைப் பார்க்க EXCEL இல் எண்களில் உள்ள ரூபாயை எழுத்துக்களாக மாற்ற முடியுமா?)
(Formula பயன்படுத்த வேண்டுமெனில் இந்த பதிவைப் பார்க்க EXCEL இல் எண்களில் உள்ள ரூபாயை எழுத்துக்களாக மாற்ற முடியுமா?)
மூன்றாவது சீட் CHEQUE. இதில்தான் காசோலை அமைப்பு LAYOUT உள்ளது.
- DATE BOX
- NAME BOX
- AMOUNT IN WORDS BOX
- AMOUNT IN FIGURES
இதில் வழங்கும் வங்கிக் கணக்கில் செலுத்தியா பின்னர் தொகை பெரும் வகையில் காசோலையை A/C PAYEE ஆக வழங்க இட்டு மேற்புறத்தில் YES ஐ கிளிக் செய்ய வேண்டும் இது தேவை இல்லையெனில் YES க்கு பக்கத்தில் DROP DOWN MENU உண்டு, அதில் NO வை தேர்ந்தெடுக்க வேண்டும்.
முந்தைய SHEET ஆனா DATA வில் அளிக்க வேண்டிய காசோலையின் விவரங்களை தட்டச்சு செய்திருக்கிறோம் அல்லவா அதில் நமக்கு தேவையான ஒன்றை RIGHT CLICK செய்தால் போதும். அதன் விவரங்கள் CHEQUE பக்கத்திற்கு தானாக உள்ளீடு செய்துவிடும்.எளிதில் செக் பிரிண்ட் எடுக்கலாம்.
நம்மிடம் உள்ள காசோலைத் தாளில் உரிய இடங்களில் விவரங்கள் இல்லாமல் சற்று மேலேயோ கீழேயோ இடதுபுறமாகவோ வலது புறமாகவோ பிரிண்ட் ஆகிவிட வாய்ப்பு உண்டு. இதை சரியான இடத்தில் அச்சடிக்க இதில் உள்ள வசதியே வலது புறத்தில் அமைந்துள்ள LAYOUT SELECTION BOX.
முதல் செக்கை பிரிண்ட் எடுக்குமுன் நம்மிடம் உள்ள காசோலையை A4 தாளில் மேற்புறமாக அமையும்படி XEROX எடுத்துக் கொள்ளவேண்டும்.அதில் மாதிரி பிரிண்ட் எடுத்துப் பார்த்தால் விவரங்கள் சரியான இடத்தில் அமைந்துள்ளனவா என்பதை அறிந்து கொள்ள முடியும்.
உதாரணத்திற்கு தேதி சரியான இடத்தில் விழவில்லை என்று வைத்துக் கொள்வோம். வலது புறத்தில் உள்ள LAYOUT SELECTION BOX உள்ளது
அதில் கிளிக் செய்தால் DROPDOWN MENU கிடைக்கும் அதில்
1.DATE BOX
2.NAME BOX
3.AMOUNT IN WORDS BOX
4.AMOUNT IN FIGURES
ஒன்றன கீழ் ஒன்றாக உள்ளது.அதில் DATE BOX ஐ தேர்ந்தெடுக்க வேண்டும். பின்னர் தேதியை இடதுபுறம் நகர்த்த வேண்டும் எனில் < ஐயும் வலதுபுறம் நகர்த்த > ஐயும் கீழுப்புரமாக நகர்த்த v ஐயும் மேற்புறமாக நகர்த்த ^ ஐயும் கிளிக் செய்யவேண்டும். இப்படி தொகை, பெயர் இவற்றையும் சரியாக செட் செய்து கொள்ளலாம். XEROX இல் சரியாக வந்ததும் ஒரிஜனல் காசோலையில் பிரிண்ட் எடுத்துப் பார்த்து சேமித்துக் கொள்ளலாம்.
இந்த பக்கத்தில் காசோலை விவரங்களை உரிய பகுதிகளில் நேரடியாக டைப் செய்தும் மேற்புறத்தில் உள்ள PRINT NOW கட்டளையை கிளிக்செய்து பிரிண்டரில் செக்கை உள்ளிட்டால் அழகாக பிரிண்ட் செய்து விடும்.
Comments