Useful Websites 10

கம்ப்யூட்டரைப் பயன்படுத்துவதற்கான முழுமையான குறிப்புகளை நம்மால் நினைவில் வைத்துக்கொள்ள முடிவதில்லை. அதனால் எளிய முறையில் குறிப்பு களைத்தரும் பயனுள்ள தளங்கள் மற்றும் நவீன தொழில்நுட்பக் கருவிகள் குறித்த சில தளங்களைத் இந்த பதிவில் பார்க்கலாம்.

                                 
 www.quotedb.com

நீங்கள் சிறந்த பேச்சாளராக வேண்டுமா? உங்கள் உரை வீச்சுகளில் அடிக்கடி பல பெரிய அறிஞர்கள் மற்றும் பெய தலைவர்களின் கூற்றுக்களைக் கோடிட்டுக் காட்ட வேண்டுமா? அப்படியானால் அவற்றுக் கான சிறந்த தளம் இதுதான். 60 வகை பொருள்களில், ஏறத்தாழ 4,000 புகழ் பெற்ற மேற்கோள் உரைகள் உள்ளன.சிறந்த பேராசியராக, மாணவர்களிடம் நற்பெயர் பெற விரும்பும் ஆசியர்களுக்கும் இது உகந்த தளம்.


www.photonhead.com

டிஜிட்டல் CAMERA வாங்கிப் பயன்படுத்தாதவர்கள் மிகவும் குறைவு என்றே கூறலாம். எளிதாக, சிறுவர்கள்கூட இவற்றைக் கையாளத் தொடங்கிவிட்டனர். ஆனால், முழு மையாக அதன் வசதிகளைப் பயன்படுத்துகின்றனரா என்றால் இல்லை என்றே கூற வேண்டும். டிஜிட்டல் CAMERAவின் வசதிகள் என்ன? எதனைப் பயன்படுத்தினால் என்ன கிடைக்கும் என்று விலாவாயாகத் தரும் தளம் இது. அபெர்ச்சர், ஸ்பீட், ரெட் ஐ எனப் பல விஷயங்கள் குறித்து இங்கு தகவல்கள் தரப்படுகின்றன. குழந்தைக்குச் சொல்லிக் கொடுப்பது போன்ற பல டுடோரியல்கள் உள் ளன. சிலேட்டர் றையில் ஒரு CAMERA ஆன்லைனிலேயே தரப்பட்டு எப்படி இயக்குவது என்பது சொல்லிக் கொடுக்கப்படுகிறது. ஆனால், கொஞ்சம் பழைமையானது போல சில விஷயங்கள் இருக்கின்றன. நவீன தொழில் நுட்பம் தான் வேண்டும் என எண்ணுபவர்கள்  www.slrgear.com    என்ற தளத்திற்குச் செல்லலாம்.

www.downloadsquad.com

SOFTWARE மற்றும் வெப் புரோகிராம்களில் அவ்வப்போது ஏற்படும் மாற்றங்கள் குறித்து இந்தத் தளத்தில் தகவல்கள் அப்டேட்        செய்யப்படும். மிகவும் பயனுள்ள தகவல்களைத் தருவதுடன், வேடிக்கையாகவும் சில சமயம் செய்தி களைத் தரும்.

www.stopbadware.org

இது பக்கத்து வீட்டுக் காவல்காரன்போல் செயற்படுகிறது. ஏதேனும் மோசமான விளைவு களைத் தருவதற்கென்றே உருவாக்கப்படும் தளங்கள் குறித்த தகவல்களைத் தருகிறது. இதுபோன்ற தளங்களால் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து வரும் தகவல்களைத் திரட்டி அவற்றின் அடிப் படையில் மோசமான தளங்கள் மற்றும் புரோகிராம்களின் பட்டியலை அளிக் கிறது.

www.techcrunch.com


இணையதள வெப்சைட் குறித்த செய்திகள் மற்றும் ஆய்வுகள் குறித்த தகவல்களைத் தருகி றது. குறிப்பாக அண்மைக்காலத்திய செய்திகள் அதிகம்.
 
www.gmailtips.com

கூகுள் மெயில் பயன்படுத்துபவர்களுக்கான தகவல் களஞ்சியம். அதிகமான எண்ணிக்கை யில் குறிப்புகள், டிப்ஸ் மற்றும் ட்ரிக்ஸ் தரப்பட்டுள்ளன.

 
www.thegreenbutton.com

 கூகுள் மெயில் பயன்படுத்துபவர்களுக் கான தகவல் களஞ்சியம். இதிலும் பல் வேறு விதமான, அதிகளவு எண்ணிக்கை யிலான குறிப்புகள், மற்றும் ட்ரிக்ஸ் தரப் பட்டுள்ளன.

 
www.tweakguides.com

இதுவும் உங்கள் சிஸ்டத்தை ட்யூன் செய்து அதன் திறனை அதிகப்படுத்த வேண்டுமா? அதற்கு இதுதான் நீங்கள் செல்ல வேண்டிய தளம். விளையாட்டுகள், பிரவுசர்கள், டிரைவர்கள் என அனைத்தையும் இந்ததளம் மூலம் மேம்படுத்தி உங்கள் COMPUTER இயக்கத்தை புதுப்பிக்கலாம்.

www.ilounge.com

இதனுடைய பெயர் தெரிவிப்பது போல் இது ஐபாட் மற்றும் ஐட்யூன் ஆகியன குறித்த தக வல்களை தரும் தளம். இந்த இரண்டு விஷயங்கள் குறித்தும் உங்களுக்கு என்ன உதவி வேண்டுமானாலும் இங்கு கிடைக்கும். எப்படிப் பயன்படுத்துவது என்ற டுடோரியல் தகவல்கள் மிகவும் பயனுள்ளன. இந்த இரண்டைப் பொறுத்தவரை இந்தத் தளத்தை ஒரு கடல் எனலாம். இதில், ஐபாட் 2.2 வழி காட்டி இபுக்காக உள்ளது. இதில், 202 பக்க தகவல்கள் ஐபாட் குறித்து உள் ளன.

 www.goaskalice.com

அமெரிக்க கொலம்பியா பல்கலைக்கழகம் நடத்தும் மெடிக்கல் இணையதளம். சிலர் கேட்கக் கூச்சப்படும் கேள்விகளை, யாரென்று காட்டிக்கொள்ளாமல் இங்கு இடலாம். சரியான முறையான பதில் கிடைக்கும்.

Comments

Popular posts from this blog

மறந்துபோன மொபைல் நம்பரை கண்டுபிடிக்க எளிய வழி..!

திருமண பொருத்தம் சுலபமாக பார்க்க

புதிதாக கணினி வாங்கும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன?