4 கோடி விண்டோஸ் 8 உரிமம் விற்பனை
சென்ற
அக்டோபர் 26ல் வெளியான, விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் உரிமங்கள் விற்பனை 4 கோடி என்ற எண்ணிக் கையைத் தாண்டியதாக, நவம்பர் 27ல் அறிவிக்கப்
பட்டுள்ளது.
"எங்கள்
நிறுவனத்தின் ஒரு மிகச் சிறந்த வெற்றி தயாரிப்பாக இது தடத்தைப் பதித்து வருகிறது'' என மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை விற்பனை அதிகாரியும், நிதி அலுவலருமான டாமி ரெல்லர் தெரிவித்துள்ளார்.
விண்டோஸ் 7 வெளியான போது இதே போல ஒரு வரவேற்பினைப் பெற்றது. இந்த இரண்டு ஆப்பரேட்டிங் சிஸ்டங்கள் வெளியான காலநிலை மற்றும் சிஸ்டங்களின் செயல்பாட்டு நிலை வேறு வேறானவையாகும்.
விஸ்டாவின் செயல்பாட்டில் அதிருப்தி அடைந்த மக்கள், அடுத்த ஆப்பரேட்டிங் சிஸ்டம், அந்தக் குறைகளைத் தீர்க்கும் என நம்பிக்கை வைத்து விண்டோஸ் 7 சிஸ்டத்தினைப் பிரியத்துடன் வரவேற்றனர்.
ஆனால், விண்டோஸ் 8, முற்றிலும் ஒரு மாறுதலான இயக்கச் சூழ்நிலையைத் தர இருப்பதனைக் காட்டியதால், மக்கள் ஆர்வத்துடன், தாங்களாகவே முன் வந்து இதனைப் பெற்றுள்ளனர்.
இதே போல, மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் அவுட்லுக் டாட் காம், மீண்டும் வெளியிடப்பட்டதில், அதற்கு 2 கோடியே 50 லட்சம் வாடிக்கையாளர்கள் கிடைத்திருப்பதாகவும் டாமி ரெல்லர் கூறினார்.
ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் சார்ம்ஸ் மற்றும் ஸ்டார்ட் பயன்பாடு பரவலாக உள்ளதெனவும், மைக்ரோசாப்ட் அப்ளிகேஷன் ஸ்டோரினை பெரும்பாலான வாடிக்கையாளர்கள் பயன்படுத்தி வருவதனையும் குறிப்பிட்டார்.
பயனாளர்கள் சராசரியாக, 19 டைல்ஸ்களை விண்டோஸ் 8 ஸ்டார்ட் திரையில் புதியதாக இணைத்து வருகின்றனர். இது வாடிக்கையாளர்கள், புதிய சிஸ்டத்தின் இயக்கத்தினைப் புரிந்து கொண்டு, இணைந்து செயல்படுவதனைக் காட்டுகிறது.
விண்டோஸ் 8 வெளியான பின்னர், இதற்கான ஸ்டோரில் கிடைக்கும் அப்ளிகேஷன் புரோகிராம்களின் எண்ணிக்கையும் இரு மடங்காகியுள்ளது. நவம்பர் இறுதியில், இதன் எண்ணிக்கை 20 ஆயிரத்தைத் தாண்டி இருந்தது. (சரியாக 20,610) விரைவில் இதனை ஒரு லட்சமாக ஆக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
விண்டோஸ் 95 சிஸ்டம் தொகுப்பிற்குப் பின்னர், விண்டோஸ் 8 தான், மைக்ரோசாப்ட் வெளியிட்டிருக்கும் மிகப் பெரிய திட்டமாகும். மற்ற ஆப்பரேட்டிங் சிஸ்டங்களைக் காட்டிலும், விண்டோஸ் 8 முற்றிலும் புதிய மாற்றங்களை வாடிக்கையாளர்களுக்குத் தந்து வருகிறது.
ஸ்டீவன் சிநோப்ஸ்கி மைக்ரோசாப்ட் நிறுவனத்திலிருந்து விலகிய பின்னர், அவரின் சில பணிகளை ரெல்லர் தலைமையேற்று நடத்தி வருகிறார்.

Comments