வீடியோகான் வழங்கும் பட்ஜெட் விலை போன்கள்

அண்மையில் வீடியோகான் நிறுவனம், மூன்று மொபைல் போன்களை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்துள்ளது. ரூ. 2,500 அதிக பட்ச விலையாகக் குறியிடப்பட்டுள்ள போன் வி 1546 என அழைக்கப்படுகிறது.

இரண்டு மினி சிம் இயக்கத்தில் இரண்டு பேண்ட் அலைவரிசையில் இது செயல்படுகிறது. இதன் பரிமாணம் 99து56து13.5 மிமீ. பார் டைப் ஆக இது வடிவமைக்கப் பட்டுள்ளது.

வழக்கம் போல ஆல்பா நியூமெரிக் கீ போர்ட் தரப்பட்டுள்ளது. கருப்பு மற்றும் கிரே கலந்த வண்ணத்திலும், கருப்பு மற்றும் பழுப்பு கலந்த வண்ணத்திலுமாக இரண்டு வண்ணங்களில் இது கிடைக்கிறது. இதன் திரை டி.எப்.டி. டச் ஸ்கிரீனாகும். 2.8 அங்குல அகலம் உடையது. இதன் பிக்ஸெல் திறன் 240x320 ஆகும்.

லவுட் ஸ்பீக்கர், 3.5 மிமீ ஆடியோ ஜாக், 4 ஜிபி வரை மெமரி அதிகப்படுத்தக் கூடிய மைக்ரோ எஸ்.டி. கார்ட் ஸ்லாட், 500 முகவரிகள் கொள்ளும் முகவரி புக் ஆகியவை தரப்பட்டுள்ளன. புளுடூத், யு.எஸ்.பி. கிடைக்கின்றன. கேமரா 1.3 எம்.பி. திறன் கொண்டதாக அமைந்துள்ளது.

இதன் பிக்ஸெல் திறன் 1280து1024. பதிவு செய்யக் கூடிய எப்.எம். ரேடியோ, எம்பி 4 மற்றும் எம்பி3 பிளேயர்கள், இ-புக் ரீடர் கிடைக்கின்றன. கொடுக்கப்பட்டுள்ள பேட்டரி தொடர்ந்து 4.5 மணி நேரம் பேசும் திறனை அளிக்கிறது.

இரண்டாவதாக வெளியாகியுள்ள வீடியோகான் மொபைல் வி1528. இதன் அதிக பட்ச விலை ரூ. 1,700. இரண்டு மினி சிம் இயக்கம் மற்றும் இரண்டு பேண்ட் அலை வரிசை இயக்கம் கிடைக்கிறது. இதன் பரிமாணம் 113.2x51.3x14.3 மிமீ. பார் டைப் ஆக இது வடிவமைக்கப் பட்டுள்ளது. வழக்கம் போல ஆல்பா நியூமெரிக் கீ போர்ட் தரப்பட்டுள்ளது.

2.4 அங்குல டி.எப்.டி. டிஸ்பிளே ஸ்கிரீன் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் பிக்ஸெல் திறன் 240x320 ஆக உள்ளது. லவுட் ஸ்பீக்கர், 8 ஜிபி வரை மெமரியை அதிகப்படுத்தும் வசதி, 1000 முகவரி கொள்ளும் முகவரி புக், புளுடூத், யு.எஸ்.பி., 1.3 எம்பி திறன் உள்ள கேமரா 1280 x1024 பிக்ஸெல் மற்றும் டிஜிட்டல் ஸூம் திறனுடன் கிடைக்கிறது.

பதிவு செய்திடும் வசதியுடன் கூடிய எப்.எம். ரேடியோ, எம்பி3 மற்றும் எம்பி 4 பிளேயர் ஆகியவை உள்ளன. பேஸ்புக் மற்றும் ட்விட்டர் தளங்களுக்கான நேரடி தொடர்பு தரப்பட்டுள்ளது. 1500 ட்அட திறனுடன் கூடிய லித்தியம் அயன் பேட்டரி தொடர்ந்து பத்து மணி நேரம் பேசக் கூடிய வசதியைக் கொடுக்கிறது.

மூன்றாவதாக வி1533 என்ற போனை வீடியோகான், அதிக பட்ச விலையாக ரூ.1,900 என்ற அறிவிப்புடன் வெளியிட்டுள்ளது. இரண்டு சிம் இயக்கத்தில் இரண்டு பேண்ட் அலைவரிசையில் இயங்குகிறது. இந்த போனின் திரை 2.2 அங்குல அகலத்தில் உள்ளது.

8 ஜிபி வரை இதன் மெமரியை அதிகப்படுத்தலாம். 1000 முகவரிகளை இதன் அட்ரஸ் புக் கொள்கிறது. புளுடூத்,யு.எஸ்.பி. வசதிகள் உள்ளன. 1.3 எம்.பி. திறனுடன் கேமரா, வீடியோ பதியும் வசதி, டிஜிட்டல் ஸூம் ஆகியவற்றுடன் தரப்படுகிறது. பதிவு செய்யக் கூடிய எப்.எம். ரேடியோ இயங்குகிறது.

எம்பி3 மற்றும் எம்பி 4 பிளேயர்கள் உள்ளன. 1500 mAh திறனுடன் கூடிய லித்தியம் அயன் பேட்டரி தொடர்ந்து ஐந்து மணி நேரம் பேசக் கூடிய வசதியைக் கொடுக்கிறது. ஒருமுறை சார்ஜ் செய்தால், 300 மணி நேரம் மின்சக்தி தங்குகிறது.

மேற்குறிப்பிட்டுள்ள மூன்று பட்ஜெட் போன்களும் அனைத்து மொபைல் கடைகளிலும் கிடைக்கின்றன.

Comments

Popular posts from this blog

மறந்துபோன மொபைல் நம்பரை கண்டுபிடிக்க எளிய வழி..!

புதிதாக கணினி வாங்கும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன?

திருமண பொருத்தம் சுலபமாக பார்க்க