உங்களின் கேள்விகளுக்கு மிகச்சரியாக விடைதரும் Search Engine
Wolfram|Alpha இந்த சொல்லைப் படித்தவுடன் இது என்ன வினோதமான பெயராக
இருக்கிறதே என்று பார்க்கிறீர்களா? இது ஒரு விடை தரும் சர்ச்
இன்ஜின்(search engine).யாஹூ ஆன்ஸர்(yahoo answer) தளம் போல
இயங்குகிறது.ஆனால் இதன் செயல்பாட்டில் பெரும் வேறுபாடு உள்ளது.இதில்
பார்முலா,கேள்விகள் என எதனை வேண்டுமானாலும் டைப் செய்து விடையை
எதிர்பார்க்கலாம்.
எடுத்துக்காட்டாக நான் இந்த தளம் சென்ற போது "Where is tajmahal?"
என்ற கேள்வியை டைப் செய்தேன்.மற்ற தளங்கள் என்ன செய்திடும்? அனைத்து
சர்வர்களிலும் தேடி ஒரு நீள பட்டியலைக் கொடுக்கும்.பின் அதனைப் படித்துப்
பார்த்து தளத்தைக் கிளிக் செய்து தகவல்களைத் தேடித் பெற வேண்டும்.ஆனால்
இந்த இஞ்சின் எனக்கு ஒரு உலக மேப்பினைத் திரைக்குக் கொண்டு வந்து இது தான்
தாஜ்மஹால் என்று காட்டியது.
செயல்படும் விதம்
இணையப்
பயனாளர்கள் தரும் கேள்வியைக் கொண்டு தன்னுடைய டேட்டா ஸ்ட்ரக்சரைத் தேடி
விடையை அமைத்து இந்த தளம் கொடுக்கிறது.ஏறத்தாழ ஆர்ட்டிபிஷியல்
இன்டெலிஜென்ஸ் எனச் சொல்லப்படும் வகையில் இது செயல்படுகிறது.மேத்ஸ்
பார்முலா,நகரங்களின் பெயர்கள்,சில தேதிகள் மற்றும் இது போன்றவற்றை இந்த
தேடல் இன்ஜினில் கொடுத்துப் பார்த்தல் இதன் வழிமுறை தெரிய வரும்.
தளத்திற்க்கான முகவரி:http://www.wolframalpha.com/
Comments