புதிய மொபைல் போன்கள் ஒரு பார்வை ...
கடந்த சில
வாரங்களாக, பண்டிகை காலத்தை ஒட்டியும், அதற்குப் பின்னரும், சில மொபைல்கள்,
மக்களிடம் அதிக வரவேற்பைப் பெற்றவையாக உள்ளன. அவற்றில் சிலவற்றை இங்கு
காணலாம்.
1. சாம்சங் எஸ் 5360 காலக்ஸி ஒய்
ஆண்ட்ராய்ட் ஜிஞ்சர்
ப்ரெட் சிஸ்டத்தில் இயங்கும் இந்த போன் குறித்த அறிவிப்பு சென்ற ஆண்டே
வெளியானாலும், இப்போது தான் பரவலாக விற்பனை ஆகி வருகிறது. ஒரு ஜி.எஸ்.எம்.
மினி சிம்மை இயக்குகிறது. நான்கு அலைவரிசைகளில் இயங்குகிறது. இதன் பரிமாணம்
104x58x11.5 மிமீ. இதன் எடை 97.5 கிராம்.
பார் டைப் வடிவில்
வந்திருக்கும் இதில், கெபாசிடிவ் டச் ஸ்கிரீன் திரை 3 அங்குல அகலத்தில்
தரப்பட்டுள்ளது. இதன் பின்புறக் கவர்களை நம் விருப்பமான வண்ணங்களில்
மாற்றிக் கொள்ளும் வசதி கிடைக்கிறது. தொடுதிரை கண்ட்ரோல் கிடைப்பதுடன்,
மல்ட்டி டச் வசதியும் தரப்பட்டுள்ளது.
ஸ்டீரியோ எப்.எம்.
ரேடியோ, லவுட் ஸ்பீக்கர், 3.5 மிமீ ஆடியோ ஜாக், 32 ஜிபி வரை மெமரி
அதிகப்படுத்தும் திறனுடன் மைக்ரோ எஸ்.டி. கார்ட் ஸ்லாட், 290 எம்பி ராம்
நினைவகம், ஜி.பி.ஆர்.எஸ். மற்றும் எட்ஜ் தொழில் நுட்ப செயல்பாடு, 3ஜி,
வைபி, புளுடூத், ஹாட் ஸ்பாட் செயல்பாடு ஆகியவை கிடைக்கின்றன. 2 எம்பி
கேமரா, வீடியோ பதிவுடன் செயல்படுகிறது.
830 மெகா ஹெர்ட்ஸ்
வேகத்தில் செயல்படும் ப்ராசசருடன் இதன் சிபியு உள்ளது. அக்ஸிலரோமீட்டர்
மற்றும் ப்ராக்ஸிமிட்டி சென்சார், காம்பஸ் ஆகியவை உள்ளன. எஸ்.எம்.எஸ்.,
எம்.எம்.எஸ்., இமெயில், புஷ் மெயில், இன்ஸ்டண்ட் மெசஞ்சர் இயங்குகின்றன.
பிரவுசர் தரப்பட்டுள்ளது. எம்பி3 மற்றும் எம்பி 4 பிளேயர்கள் சிறப்பாகத்
தரப்பட்டுள்ளன. டாகுமெண்ட் வியூவர் கிடைக்கிறது.
இவற்றுடன்
ஆர்கனைசர், இமேஜ் எடிட்டர், கூகுள் சர்ச், மேப்ஸ், ஜிமெயில், யுட்யூப்,
காலண்டர், கூகுள் டாக், பிகாஸா ஒருங்கிணைப்பு, வாய்ஸ் மெமோ ஆகிய அனைத்து
வசதிகளும் உள்ளன. 1200 mAh திறன் கொண்ட லித்தியம் அயன் பேட்டரி
தரப்பட்டுள்ளது.
ஒருமுறை சார்ஜ்
செய்தால், 850 மணி நேரம் மின்சக்தி தங்குகிறது. தொடர்ந்து 17 மணி நேரம்
பேசலாம். இதன் கதிர் வீச்சு விகிதம் 0.66 W/kg என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் அதிக பட்ச சில்லரை விலை ரூ. 6,665.
2. நோக்கியா ஆஷா 201
சந்தையில் அனைவரின்
கவனத்தையும் தற்போது பெற்று வரும் இன்னொரு போன் நோக்கியா நிறுவனத்தின் ஆஷா
201. இரண்டு அலைவரிசைகளில் இயங்கும் இந்த போனில் ஒரு சிம் மட்டுமே
பயன்படுத்த முடியும். இதன் பரிமாணம் 115.5x61.1x14மிமீ. எடை 105 கிராம்.
பார் டைப் வடிவில்,
குவெர்ட்டி கீ போர்டுடன் அமைக்கப்பட்டுள்ளது. எட்டுவித வண்ணங்களில்
கிடைக்கிறது. 2.4 அங்குல டி.எப்.டி. வண்ணத்திரை டிஸ்பிளே தருகிறது. 32 ஜிபி
வரை மெமரி அதிகப்படுத்தும் வசதியுடன் கூடிய மைக்ரோ எஸ்.டி. கார்ட் ஸ்லாட்
உள்ளது.
சிஸ்டம் மெமரி 64
எம்பி, ராம் மெமரி 32 எம்பி தரப்பட்டுள்ளது. ஜி.பி.ஆர்.எஸ்., எட்ஜ் தொழில்
நுட்பம், A2DP இணைந்த புளுடூத், வீடியோ பதிவுடன் கூடிய 2 எம்பி கேமரா,
ஸ்டீரியோ எப்.எம். ரேடியோ, எஸ்.எம்.எஸ்., எம்.எம்.எஸ்., இமெயில்,
இன்ஸ்டண்ட் மெசஞ்சர், பிரவுசர், எம்பி3 மற்றும் எம்பி4 பிளேயர், ஆர்கனைசர்,
வாய்ஸ் மெமோ ஆகியவைகிடைக்கின்றன.
1430 mAh திறன்
கொண்ட லித்தியம் அயன் பேட்டரி தரப்பட்டுள்ளது. ஒருமுறை சார்ஜ் செய்தால்,
888 மணி நேரம் மின்சக்தி தங்குகிறது. தொடர்ந்து 7 மணி நேரம் பேசலாம்.
பாடல்களைத் தொடர்ந்து 52 மணி நேரம் கேட்கலாம்.
இதன் கதிர் வீச்சு விகிதம் 0.92 W/kg என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் அதிக பட்ச சில்லரை விலை ரூ. 3,700.
Comments