கையில் மடித்து எடுத்துச் செல்ல புதிய தொழில்நுட்ப கீபோர்ட்

வணக்கம் நண்பர்களே..!

கையில் ஒரு பேப்பரை சுருட்டு எடுத்துக்கொண்டு போவதைப் போல் இந்த கீபோர்ட்டையும் கையோடு சுருட்டு எடுத்துக்கொண்டு போய்விடலாம்..

அதுதான் இந்த கீபோர்ட்டின் சிறப்பே... தரமான சிலிகனால் உருவாக்கப்பட்ட இந்த கீபோர்ட்டை பயன்படுத்தும்பொழுது கொஞ்சம்கூட உராய்வால் ஏற்படும் சத்தம் வராது என்பது கூடுதல் சிறப்பு..

அதுமட்டுமில்லீங்க... சாதாரணமாக நாம் தற்போது பயன்படுத்தும் கீபோர்ட்டில் தண்ணீர் அல்லது டீ, காபி போன்றவைகள் பட்டால் கீர்போர்ட் வேலை செய்யாமல் மக்கர் செய்யும்.. ஆனால் இந்த கீபோர்ட்டை தூசி, அழுக்கை அகற்ற தண்ணீர் விட்டே துடைக்கலாம்... ஒன்றும் ஆகாது.


தண்ணீர் உறிஞ்சா தன்மைக்கொண்டது. பிளாஸ்டிக் போன்ற நெகிழும் தண்மை கொண்டதால் ஒட்டாத தன்மையாலும், தண்ணீர் இதற்கு எதிரியே அல்ல..

வயர்லஸ் டைப் கீபோர்ட் என்பதால் நமக்கு வசதியான இடத்தில் வைத்து தட்டச்சிட்டுக்கொள்ள முடியும். அதேபோல USB Port-ல் இணைத்தும் கூட பயன்படுத்த முடியும்.

மிக குறைந்த எடை கொண்ட இந்த கீபோர்ட் 2.4 கிகா ஹெர்ட் வேகத்தில் இயங்கி நம்மை ஆச்சர்யப்பட வைக்கிறது.

சாதாரணமாக நாம் பயன்படுத்தும் அதே QWERTY போர்ட்தான். மொத்தம் 121 விசைகளைக் கொண்டுள்ளது.

இதை ஆங்கிலத்தில் Multimedia Roll up USB Keyboard என குறிப்பிடுகின்றனர்.


கீழிருக்கும் வீடியோவையும் பார்த்துக்கொள்ளுங்கள்..!!

கீபோர்ட்டை தண்ணீரில் நனைத்து முறுக்கி உலர்த்துகிறார்கள்... !!


வீடியோ - 1: 



வீடியோ - 1: 


நன்றி நண்பர்களே..!

Comments

Popular posts from this blog

மறந்துபோன மொபைல் நம்பரை கண்டுபிடிக்க எளிய வழி..!

புதிதாக கணினி வாங்கும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன?

திருமண பொருத்தம் சுலபமாக பார்க்க