Posts

Showing posts from December, 2012

விண்டோசுக்கு மாற்றாக ஒரு புதிய OS(இயங்குதளம்)

தொழில்நுட்பம் லினக்சின் அடிபடையில் நிறைய இயங்குதளங்கள் உள்ளன.அவற்றில் சில வணிக அடிப்படையிலும் சில இலவசமாகவும் வழங்கப்படுகின்றன . இதற்கு காரணம் இவற்றின் மூல வரைவு இலவசமாக கொடுக்கப்படுவதே.ஆனால் விண்டோஸ் இயங்கு தளத்தின் மூல வரைவு மைக்ரோசாப்ட் மட்டுமே அறிந்த ஒன்று .இதுவரை எந்த இயங்கு தளமும் மைக்ரோசாப்ட்டின் மூல வரைவைச் சார்ந்து எந்த இயங்குதளமும் வரவில்லை இதை நிறைவு செய்து உள்ளது ரியாக்ட் ஓஸ் . ஆம் ரியாக்ட் ஓஸ் மைக்ரோசாப்ட்டின் விண்டோஸ் NT கட்டமைப்பில் அமைத்து இருக்கிறது. ரியாக்ட் ஓஸ் முற்றிலும் விண்டோசை போன்றது . இந்த குழுவினர் இல்லா நிரலையும் சி மற்றும் சி++ மொழியில்தான் எழுதி இதனை வடிவமைத்து உள்ளனர். இதன் மூல வரைவை அணுகுவதற்கு எந்த தடையும் இல்லை. விண்டோஸில் இயங்க கூடிய இல்லா மென்பொருள்களும் இதில் எவ்வித சிக்கலும் இன்றி இயங்கும் வண்ணம் இதை தயாரித்து உள்ளனர் இந்த குழுவினர் .பயன்படுத்துவோருக்கு மிக எளிதான அச்சு அசலாக விண்டோஸின் முகப்பைக் கொண்டது இது. இதை தரவிறக்க நாம் இதன் தளத்திற்கு செல்லவேண்டும். FREE DOWNLOAD REACT OPERATING SYS...

மொபைல் ரோமிங் கட்டணம் ரத்தாகிறது

மொபைல் போன் பயன்படுத்துபவர்கள், தங்களின் மாநிலத்தைவிட்டு, அடுத்த மாநிலத்தில் அவற்றைப் பயன்படுத்துகையில், அதற்கான ரோமிங் கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது. இது நீக்கப்படும் என முன்பு அரசு அறிவித்தது. இதற்கான பணிகளை மூன்று மாதத்திற்குள் முடித்து, மார்ச் மாதம் முதல் அமல்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. இதனால், நாட்டின் எந்த பகுதிக்குச் சென்று ஒருவர் தன் மொபைல் போனைப் பயன்படுத்துகையில், அது உள்ளூர் அழைப்பாகவே கருதப்படும். இதுவரை வெளி மாநிலங்களில் இருக்கும்போது அழைப்பு வந்தால், வரும் அழைப்பிற்கு, அழைப்பு பெறுபவரும் கட்டணம் செலுத்த வேண்டும். இனி, இது நீக்கப்படுகிறது. எப்படி, உள்ளூர் அழைப்புகளைப் பெறுபவர், அதற்கெனத் தனிக் கட்டணம் செலுத்தத் தேவையில்லையோ, அதே போல கூடுதல் கட்டணம் செலுத்த தேவை இருக்காது. இதே போல, ஒருவர் எண்ணை மாற்றாமல், தனக்கு மொபைல் சேவை தரும் நிறுவனத்திற்கு மாறும் வசதியில் உள்ள சில தடைகள் நீக்கப்படுகின்றன. இப்போது ஒருவர் தான் வாங்கியுள்ள இணைப்பு உள்ள இடத்தில் இயங்கும், மற்றொரு மொபைல் சேவை நிறுவனத்திற்கு மட்டுமே மாறிக் கொள்ள முடியும். இனி, ஒரு நிறுவனத்திடம் எண் மற்றும் சேவை பெற...

சத்தமில்லாமல் அறிமுகமான நோக்கியா 114

Image
சென்ற மாதம், நோக்கியா நிறுவனம் தன் ஆஷா மொபைல் போன் வரிசையில்ஆஷா 205 மற்றும் 206 போன்களை அறிவித்து அறிமுகம் செய்தது. ஆனால், அதே நேரத்தில், தன் இந்திய இணைய தளத்தில், நோக்கியா 114 என்ற மொ பைல் போனையும் அறிமுகப் படுத்தியுள்ளது. நோக்கியா 114, இரண்டு சிம்களில் இயங்குகிறது. போகிற போக்கில், பேஸ்புக் தளத்தினை அணுகி இயக்க, தனி கீ தரப்பட்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் திரை 1.7 அங்குல அகலத்தில் வண்ணத்தில் உள்ளது. நோக்கியா பிரவுசர் இணைக்கப்பட்டுள்ளது. புளுடூத் 2.1, ஜி.பி.ஆர்.எஸ். மற்றும் எட்ஜ் தொழில் நுட்பங்கள், நெட்வொர்க் இணைப்பினைத் தருகின்றன. மைக்ரோ எஸ்.டி. கார்ட் மூலம், இதன் மெமரியை 32 ஜிபி வரை அதிகப்படுத்தலாம். இதன் உள் நினைவகம் 16 எம்பி. இதன் பேட்டரி 1020 mAh திறன் கொண்டதாக உள்ளது. இரண்டு ஜி.எஸ்.எம். சிம்களை இதில் இயக்கலாம். டிக்ஷனரி, டிஜிட்டல் கடிகாரம், ரெகார்டர், கால்குலேட்டர் போன்ற தனி நபர் விரும்பும் வசதிகள் பல இதில் தரப்பட்டுள்ளன. 0.3 எம்பி திறனில் இயங்கும் கேமராவும் இதில் உள்ளது.இதன் விலை குறித்து கேட்டபோது, விரைவில் அறிவிக்கப்படும் என நோக்கியா நிறுவன விற்பனைப் பிரிவு அ...

4 கோடி விண்டோஸ் 8 உரிமம் விற்பனை

Image
சென்ற அக்டோ பர் 26ல் வெளியான, விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் உரிமங்கள் விற்பனை 4 கோடி என்ற எண்ணிக் கையைத் தாண்டியதாக, நவம்பர் 27ல் அறிவிக்கப் பட்டுள்ளது.  "எங்கள் நிறுவன த்தின் ஒரு மிகச் சிறந்த வெற்றி தயாரிப்பாக இது தடத்தைப் பதித்து வருகிறது'' என மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை விற்பனை அதிகாரியும், நிதி அலுவலருமா ன டாமி ரெல்லர் தெரிவித்துள்ளார். விண்டோஸ் 7 வெளியான போது இதே போல ஒரு வரவேற்பினைப் பெற்றது. இந்த இரண்டு ஆப்பரேட்டிங் சிஸ்டங்கள் வெளியான காலநிலை மற்றும் சிஸ்டங்களின் செயல்பாட்டு நிலை வேறு வேறானவையாகும். விஸ்டாவின் செயல்பாட்டில் அதிருப்தி அடைந்த மக்கள், அடுத்த ஆப்பரேட்டிங் சிஸ்டம், அந்தக் குறைகளைத் தீர்க்கும் என நம்பிக்கை வைத்து விண்டோஸ் 7 சிஸ்டத்தினைப் பிரியத்துடன் வரவேற்றனர். ஆனால், விண்டோஸ் 8, முற்றிலும் ஒரு மாறுதலான இயக்கச் சூழ்நிலையைத் தர இருப்பதனைக் காட்டியதால், மக்கள் ஆர்வத்துடன், தாங்களாகவே முன் வந்து இதனைப் பெற்றுள்ளனர். இதே போல, மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் அவுட்லுக் டாட் காம், மீண்டும் வெளியிடப்பட்டதில், அதற்கு 2 கோடியே 50 லட...

Award Keylogger - கணினி கண்காணிப்பு மென்பொருள்

Image
இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியின் விளைவாக பல நன்மைகள் இருக்கின்ற போதும் கூடவே தீமைகளும் இருக்கவே செய்கின்றன. இதனால் பல்வேறு வழிகளில் கணனிகளின் செயல்பாடுகளை கண்காணிக்க வேண்டியது கட்டாயமாக இருக்கின்றது. இந்த மென்பொருள் கணினியை கண்காணித்தலில் முக்கிய பங்கு வகிக்கின்றது. இதற்கென பல்வேறு மென்பொருட்கள் காணப்படுகின்றன.    இவற்றின் வரிசையில் Award Keylogger எனும் மென்பொருளும் இணைந்துள்ளது. இம்மென்பொருளானது பயன்படுத்துவதற்கு எளிதாக காணப்படுவதுடன் மறைமுகமாக கணனியின் ஒவ்வொரு செயற்பாடுகளையும் Screen Shot ஆக பதிவு செய்துகொள்கின்றது. அத்துடன் இவ்வாறு பதிவு செய்த கோப்புக்களை மின்னஞ்சல் முலமாகவே அல்லது FTP முறையிலோ பெற்றுக் கொள்ளவும் முடியும் என்பது சிறப்பம்சமாகும். இயங்குதளம்: விண்டோஸ் எக்ஸ்பி / விஸ்டா / 7 டவுன்லோட் லிங்க்   

உங்களின் கேள்விகளுக்கு மிகச்சரியாக விடைதரும் Search Engine

Image
Wolfram|Alpha இந்த சொல்லைப் படித்தவுடன் இது என்ன வினோதமான பெயராக இருக்கிறதே என்று பார்க்கிறீர்களா? இது ஒரு விடை தரும் சர்ச் இன்ஜின்(search engine).யாஹூ ஆன்ஸர்(yahoo answer) தளம் போல இயங்குகிறது.ஆனால் இதன் செயல்பாட்டில் பெரும் வேறுபாடு உள்ளது.இதில் பார்முலா,கேள்விகள் என எதனை வேண்டுமானாலும் டைப் செய்து விடையை எதிர்பார்க்கலாம்.                                               எடுத்துக்காட்டாக நான் இந்த தளம் சென்ற போது " Where is tajmahal ?" என்ற கேள்வியை டைப் செய்தேன்.மற்ற தளங்கள் என்ன செய்திடும்? அனைத்து சர்வர்களிலும் தேடி ஒரு நீள பட்டியலைக் கொடுக்கும்.பின் அதனைப் படித்துப் பார்த்து தளத்தைக் கிளிக் செய்து தகவல்களைத் தேடித் பெற வேண்டும்.ஆனால் இந்த இஞ்சின் எனக்கு ஒரு உலக மேப்பினைத் திரைக்குக் கொண்டு வந்து இது தான் தாஜ்மஹால் என்று காட்டியது. செயல்படும் விதம் இணையப் பயனாளர்கள் தரும் கேள்வியைக் கொண்டு தன்னுடைய டேட்டா ஸ்ட்ரக்சரைத் தேடி விடையை அமைத்து இந்த த...

Useful Websites 10

Image
கம்ப்யூட்டரைப் பயன்படுத்துவதற்கான முழுமையான குறிப்புகளை நம்மால் நினைவில் வைத்துக்கொள்ள முடிவதில்லை. அதனால் எளிய முறையில் குறிப்பு களைத்தரும் பயனுள்ள தளங்கள் மற்றும் நவீன தொழில்நுட்பக் கருவிகள் குறித்த சில தளங்களைத் இந்த பதிவில் பார்க்கலாம்.                                     www.quotedb.com நீங்கள் சிறந்த பேச்சாளராக வேண்டுமா? உங்கள் உரை வீச்சுகளில் அடிக்கடி பல பெரிய அறிஞர்கள் மற்றும் பெய தலைவர்களின் கூற்றுக்களைக் கோடிட்டுக் காட்ட வேண்டுமா? அப்படியானால் அவற்றுக் கான சிறந்த தளம் இதுதான். 60 வகை பொருள்களில், ஏறத்தாழ 4,000 புகழ் பெற்ற மேற்கோள் உரைகள் உள்ளன.சிறந்த பேராசியராக, மாணவர்களிடம் நற்பெயர் பெற விரும்பும் ஆசியர்களுக்கும் இது உகந்த தளம். www.photonhead.com டிஜிட்டல் CAMERA வாங்கிப் பயன்படுத்தாதவர்கள் மிகவும் குறைவு என்றே கூறலாம். எளிதாக, சிறுவர்கள்கூட இவற்றைக் கையாளத் தொடங்கிவிட்டனர். ஆனால், முழு மையாக அதன் வசதிகளைப் பயன்படுத்துகின்றனரா என்றால் இல்லை என்ற...

கணினிகளுக்கான Font டவுன்லோட் செய்ய சிறந்த 6 தளங்கள்

Image
Windows சிஸ்டத்துடன் வரும் எழுத்துவகைகளுடன்(FONT COLLECTION), நமக்குப் பிடித்த எழுத்து வகைகளையும் சேர்த்து வைத்தே நாம் பயன்படுத்துகிறோம். வெளியே இருந்து கிடைக்கும் சில எழுத்து வகைககள் சில நமக்குப் பிடித்துப் போகின்றன.சில வேளைகளின், அவற்றின் அடிப்படையில், சில கோணங்களில் அல்லது வளைவுகளில் எழுத்துக்கள் இருந்தால், நன்றாக இருக்குமே என்று ஆசைப்படுகிறோம். நம் எதிர்பார்ப்பிற்கும் மேலாக, பலவகையான பாண்ட் வகைகள் இணையத்தில் இலவசமாகவே கிடைக்கின்றன. அந்த தளங்களை இங்கு பார்க்கலாம்.                                                          1. http://www.fawnt.com/ டிசைனர்கள், டெவலப்பர்கள், இணைய தள வடிவமைப்பாளர்களின் கற்பனைக்குத் தீனி போடும் வகையில் இங்கு பாண்ட் வகைகள் கிடைக்கின்றன.விண்டோஸ் சிஸ்டம் மற்றுமின்றி மேக் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் பயன்படுத்தவும் எழுத்து வகைகள் கிடைக்கின்றன.10,000 எழுத்துவகைகள் இலவசமாய் இங்கு உள்ளன. 2. http://www.abstrac...

Subtitle Edit - உங்கள் விடியோவில் வசன வரிகள் திருத்த எளிதான மென்பொருள் 3.3

Image
    வசன வரிகள் திருத்தி மென்பொருளனது (எஸ்இ) ​​வீடியோ வசன வரிகள் திருத்த உதவிகரமாக உள்ளது. வசன வரிகளை திருத்தியும் அதை வீடியோ sync இன் அவுட் என்ற முறையில் எளிதாக ஒரு வசன வரிகள் தொடங்குவதற்கு நேரத்திற்க்கு எற்றார் போல் மாற்றிக் கொள்ள முடியும். எஸ்இ சி # எழுதப்பட்ட மற்றும் முழு மூலம் சேர்க்கப்பட்டுள்ளது. அம்சங்கள்: ஒரு வசன வரிகள் (துவக்க / இறுதி நிலை மற்றும் வேகம்) ஒத்திசைக்க / மாற்றிக்கொள்ளலாம். மொழிபெயர்ப்பு உதவி (கையேடு மொழிபெயர்ப்பு) பிரி / சேர் நேரம் காட்சிக்கு ஒழுங்குபடுத்தலாம் பொதுவான பிழைகள் சரி செய்யலாம் SubRib, MicroDVD, துணை நிலையம் ஆல்ஃபா, இடையே மாற்றுகிறது பலவீனமான கேட்கும் உரை அகற்றலாம் மறு எண்ணிடல் UTF-8 மற்றும் யூனிகோட் கோப்புகளை (ANSI தவிர) எழுத முடியும் உள்ளமைக்கப்பட்ட டானியம் மொழிபெயர்ப்பு கூகிள் மொழிபெயர்ப்பு உள்ளமைக்கப்பட்டது கோப்புகளின் உள்ளே பதிக்கப்பட்ட வசனவரிகளை திறக்க முடியும் தேவை: மைக்ரோசாப்ட் டாட்நெட் ஃப்ரேம்வொர்க் 2.0. இயங்குதளம்: விண்டோஸ் எக்ஸ்பி / விஸ்டா / 7 டவுன்லோட் லிங்க்   

ஆபத்தைத் தரும் பழைய பிரவுசர்கள்

Image
குறிப்பிட்ட சில இணைய பயனாளர்கள் பயன்படுத்தும் இணைய பிரவுசர்கள், மிகப் பழையதாகவும், பழைய பதிப்புகளாகவும் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.  காஸ்பெர்ஸ்கி நிறுவனம், பன்னாட்டளவில் மேற்கொண்ட தங்கள் வாடிக்கையாளர்களின் பயன்பாடு குறித்த ஆய்வில் இந்த தகவல் தெரிய வந்துள்ளது.  மொத்தத்தில் 23% பேர் பயன்படுத்தும் பிரவுசர்கள், மிகப் பழையதாக உள்ளன. ஏறத்தாழ பத்தில் ஒருவர் பழைய பதிப்புகளையே பயன்படுத்தி வருகின்றனர். இதனால், அவர்கள் பயன்படுத்தும் கம்ப்யூட்டர் பாதுகாப்பு பிரச்னைக்குரியதாகின்றன. இவர்களில் 14.5% பேர், தற்போது வெளியிடப்பட்டிருக்கும் பதிப்பிற்கு முந்தைய பதிப்பினையே பயன்படுத்துகின்றனர்.  8.5% பேர், மிகப் பழைய பிரவுசர்கள் மூலம் இணையத்தைக் காண்கின்றனர். 77% பயனாளர்கள், சோதனைப் பதிப்பு மற்றும் புதிய பதிப்பினைப் பயன்படுத்துகின்றனர். ஒரு பிரவுசரின் புதிய முழுமையான பதிப்பு வெளியான பின்னர், ஒரு மாதம் கழித்தே, அதனைப் பயனாளர்கள் பயன்படுத்தத் தொடங்குகின்றனர்.  ஆனால், சைபர் உலகத்தினை தங்கள் மால்வேர் புரோகிராம்களால் ஆட்டிப் படைக்கும் ஹேக்கர்கள், புதிய...

Crystal Disk Info Portable - ஹர்ட் டிஸ்க்ன் விவரங்களை தரும் மென்பொருள் 5.1.1

Image
Crystal Disk Info மென்பொருளானது உங்களின் வன் வட்டு இயக்கி பற்றிய விவரங்களை பார்வையிட அனுமதிக்கும் ஒரு HDD பயன்பாடு ஆகும். இந்த மென்பொருள் முற்றிலும் இலவச பயன்பாடகும் அம்சங்கள்: S.M.A.R.T. ஆதரவு வட்டு அளவு, பரிமாற்ற முறைமை, இடையக அளவு, போன்ற HDD தகவல் காட்டுகிறது. சுலபமாக புரிந்து கொள்ளும் பயனர் இடைமுகம் நிலை மற்றும் வெப்பநிலை கண்காணிக்கிறது S.M.A.R.T தகவல் வரைபடம் டவுன்லோட்  லிங்க் 

Download The New TeamViewer 8 For Free

Image
0 in Sh   TeamViewer is one of the best software for Remote desktop functioning. You can operate any computer from your computer. You just need TeamViewer to do this. Now it is released the New version TeamViewer 8 which comes with some new features. New Features in Windows Version Optimized for Windows 8 Session handover Remote printing Transfer remote sound and videos TeamViewer Touch app for Windows 8/RT Retina support New features: Session handover from one expert to another Comment on sessions for billing documentation Share selected groups with other TeamViewer accounts Easy remote printing in your home office Schedule online meetings easily in Microsoft Outlook Session recording, including sound and video for perfect documentation Remote sound and video Remote account logout Automatically log out of operating systems after remote access Completely new: The TeamViewer Management Console web-based administration of your entire support ...

புதிய மொபைல் போன்கள் ஒரு பார்வை ...

Image
கடந்த சில வாரங்களாக, பண்டிகை காலத்தை ஒட்டியும், அதற்குப் பின்னரும், சில மொபைல்கள், மக்களிடம் அதிக வரவேற்பைப் பெற்றவையாக உள்ளன. அவற்றில் சிலவற்றை இங்கு காணலாம். 1. சாம்சங் எஸ் 5360 காலக்ஸி ஒய் ஆண்ட்ராய்ட் ஜிஞ்சர் ப்ரெட் சிஸ்டத்தில் இயங்கும் இந்த போன் குறித்த அறிவிப்பு சென்ற ஆண்டே வெளியானாலும், இப்போது தான் பரவலாக விற்பனை ஆகி வருகிறது. ஒரு ஜி.எஸ்.எம். மினி சிம்மை இயக்குகிறது. நான்கு அலைவரிசைகளில் இயங்குகிறது. இதன் பரிமாணம் 104x58x11.5 மிமீ. இதன் எடை 97.5 கிராம். பார் டைப் வடிவில் வந்திருக்கும் இதில், கெபாசிடிவ் டச் ஸ்கிரீன் திரை 3 அங்குல அகலத்தில் தரப்பட்டுள்ளது. இதன் பின்புறக் கவர்களை நம் விருப்பமான வண்ணங்களில் மாற்றிக் கொள்ளும் வசதி கிடைக்கிறது. தொடுதிரை கண்ட்ரோல் கிடைப்பதுடன், மல்ட்டி டச் வசதியும் தரப்பட்டுள்ளது.  ஸ்டீரியோ எப்.எம். ரேடியோ, லவுட் ஸ்பீக்கர், 3.5 மிமீ ஆடியோ ஜாக், 32 ஜிபி வரை மெமரி அதிகப்படுத்தும் திறனுடன் மைக்ரோ எஸ்.டி. கார்ட் ஸ்லாட், 290 எம்பி ராம் நினைவகம், ஜி.பி.ஆர்.எஸ். மற்றும் எட்ஜ் தொழில் நுட்ப செயல்பாடு, 3ஜி, வைபி, புளுடூத்...

Youtube வீடியோக்களை VLC Player மூலம் டவுன்லோட் செய்வது எப்படி?

Image
கடந்த இரண்டு VLC பற்றிய பதிவுகளில் பல அரிய பயனுள்ள செயல்களை எப்படி VLC மூலம் செய்வது என்று சொல்லி இருந்தேன். இன்றைய பதிவு நிறைய பேருக்கு புதியது. ஆம் இன்றைய பதிவில் Youtube வீடியோ ஒன்றை எப்படி VLC மூலம் டவுன்லோட் செய்வது என்று பார்க்கலாம். 1. முதலில் Youtube -இல் எந்த வீடியோவை டவுன்லோட் செய்ய வேண்டுமோ, அந்த வீடியோ முகவரியை காபி செய்து கொள்ளவும்.  2. இப்போது VLC Player - ஐ ஓபன் செய்து Media --> Open Network Stream என்பதை தெரிவு செய்யவும்.  3. கீழே உள்ளது போல, அதில் வீடியோ முகவரியை கொடுத்து Play கொடுக்கவும்.  4. இப்போது வீடியோவின் Thumbnail இமேஜ் வரும். உடனே Play பட்டனை கிளிக் செய்யவும். இப்போது வீடியோ ஸ்ட்ரீம் ஆகி play ஆக ஆரம்பிக்கும்.  இப்போது உங்கள் வீடியோவை இரண்டு வழிகளில் தரவிறக்கம் செய்யலாம். ஒன்று Network Stream பகுதியில் Play கொடுப்பதற்கு பதிலாக convert என்று கொடுப்பதன் மூலம். இது எல்லா வீடியோவுக்கும் வேலை செய்யாது என்பதால் இது உதவவில்லை என்றால் அடுத்த முயற்சி.  இப்போது உங்கள் வீடியோ play ஆகிக் கொண்டிருக்க வேண...

Free Make - மிகச் சிறந்த Video Converter இலவசமாக

Image
சில மென்பொருட்கள் பணம் கொடுத்து வாங்கும் படி நிலைமை இருக்கும், ஆனால் நாம் எதிர்பார்க்கும் வசதிகள் எல்லாம் அதில் இருக்காது. ஆனால் இலவசமாக கிடைக்கும் சிலவற்றில் போதும் போதும் என்கிற அளவுக்கு வசதிகள் கிடைக்கும். அப்படி பட்ட ஒன்றும் தான் Free Make Video Converter. Converter என்ற ஒன்றைத் தவிர நிறைய பலன்களை கொண்டிருப்பது இதன் சிறப்பு.  இதன் சிறப்பம்சங்களை காண்போம். 1. 200 க்கு அதிகமான ஆடியோ, வீடியோ வகைகளை ஏற்றுக் கொள்கிறது. 2. ஆன்லைனில் இருந்து வீடியோக்களை தரவிறக்கம் செய்யும் வசதி. Youtube, Facebook, Vimeo, Dailymotion என 50 தளங்களில் இருந்து செய்ய முடியும். என்ன Output Format வேண்டும் என்றாலும் நீங்கள் தெரிவு செய்ய ம்டுயும். 3. மிக சிறந்த Output Format களை தருவது இதன் மிகப் பெரிய சிறப்பு. இப்போது வந்துள்ள HTML 5 வரை Update செய்து உள்ளார்கள். 4.Android, iPhone போன்ற Smartphone-களை பயன்படுத்தும் நபரா நீங்கள்? அதற்கென்றே தனி Output வசதிகள் இதில் உள்ளது.அத்தோடு Sony PSP, PS2, PS3, BlackBerry, Samsung, Nokia, Xbox, Apple TV, என பல வகையும் இதில் அடக்கம்....

Youtube கொஞ்சம் ரகசியங்கள்

Image
Youtube பற்றி தெரியாதவர்கள் யாராவது இருப்பார்களா? என்று நீங்கள் கேட்பது புரிகிறது. இருந்தாலும் full Screen வீடியோ உருவாக்குவது, Tags பற்றி, youtube வீடியோக்களை டவுன்லோட் செய்வது எப்படி என்றெல்லாம் சொல்கிறேன்.      1. எப்படி முழு ஸ்க்ரீன் வீடியோ உருவாக்குவது? youtube ஆனது ஆரம்பிக்கப்பட்ட போது  4:3 (Width:Height) என்ற அளவில் வீடியோக்களை பயன்படுத்தி வந்தது ஆனால் இப்போது 16:9 என்று உள்ளது. இதனால் உங்கள் வீடியோக்களை அந்த அளவுக்கு நீங்களும் கொடுக்க வேண்டும் அப்போதுதான் முழு ஸ்க்ரீன் வீடியோ வரும். சரி 16:9  இல்லை என்றால் என்ன செய்வது? ஒன்றும் இல்லை, Video upload செய்து முடித்த உடன் உங்கள் வீடியோ சிறியதாக இருந்தால் (Youtube இல் பார்க்கும் போது நிறைய கருப்பு ஏரியா இருக்கும் ) Edit என்ற பகுதியில் சென்று Tag என்பதில்  yt:Stretch=16:9 என்று கொடுக்கவும். இது கிட்டதட்ட முழு ஸ்க்ரீன் ஆக வீடியோவை கொடுக்கும். அதே வீடியோ பெரிதாக இருந்தால்  yt:crop=16:9. ஏற்கனவே upload செய்தவற்றையும் நீங்களும் இப்படி கொடுப்பதன் மூலம் மாற்றி கொள்ளலாம். ...

Youtube மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி?

Image
Youtube ஐ நாம் இணையத்தின் டிவி என்று சொல்லலாம். மிகப் பிரபலமான இந்த தளத்தில் கிடைக்காத வீடியோக்களை விரல் விட்டு எண்ணி விடலாம். அவ்வளவு வீடியோக்கள் உள்ளன. ஒரு நிமிடத்தில் சராசரியாக 48 மணிநேர வீடியோ Youtube தளத்தில் Upload செய்யப்படுகிறது. இதை ஒரு டிவி சேனல் என்று வைத்தால் இந்தியாவில் அதிகம் பேரால் பார்க்கப்படும் பத்தாவது மிகப் பெரிய சேனல் இது. இவ்வளவு பெரிய தளத்தில் சாதாரணமானவர்களும் பணம் சம்பாதிக்க முடியும் என்றால் நம்புவீர்களா? அது தான் உண்மை.  எப்படி என்று பார்ப்போம். Charlie bit my finger  என்ற வீடியோவை நீங்கள் பார்த்து இருப்பீர்கள். இரண்டு சிறுவர்கள் இருக்கும் இந்த வீடியோ சேனல் பல கோடிகளை சம்பாதித்து உள்ளது. இதே போல நிறைய பேர் உள்ளார்கள். Digital Inspiration தளத்தின் நிர்வாகி அமித் அகர்வால் சேனல் இது  Labnol . இவர் இந்தியாவின் மிகப் பெரிய Tech Blogger. தனது தளம் மட்டும் இன்றி Youtube மூலமும் இவர் வருமானம் பெறுகிறார்.  தனி நபர்கள் மட்டும் இன்றி தொலைக்காட்சி நிறுவனங்கள், மற்ற நிறுவனங்கள் பலவும் Youtube மூலம் பணம் சம்பாதிக்கின்றன. விஜய் தொலை...

Audacity - இலவசமாக ஒரு Audio Editor

Image
Video Editor எவ்வளவு முக்கியமோ அதே போல முக்கியமான ஒன்று Audio Editor. அதில் மிகவும் பயனுள்ள ஒன்று Audacity. இது Audio Editor என்பதோடு Audio Recording வசதியையும் தருகிறது. ஓபன் சோர்ஸ் மென்பொருளான இது பல விதமான பயன்களை கொண்டுள்ளது. அதை பற்றி இன்று பார்ப்போம்.  இதன் சிறப்பம்சங்கள் கீழே.  Microphone, line input, USB/Firewire devices என மற்றும் பல Device- களின் மூலம் Audio Record செய்யும் வசதி.  ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்ப்பட்ட Device -களில் இருந்தும் Record செய்ய முடியும்.  கிட்டத்தட்ட எல்லா Audio Format - களையும் சப்போர்ட் செய்கிறது.  நிறைய Track - களை Edit, Mix செய்யும் வசதி.  தேவையற்ற சத்தங்களை (Noise) நீக்கும் வசதி.  Tempo Adjustment வசதி.இது ஆடியோ வேகத்தை வீடியோவுக்கு மேட்ச் செய்ய உதவுகிறது.  வேகத்தை மாற்றாமல் Pitch (சுருதி) அட்ஜஸ்ட் செய்யும் வசதி.  Audio Effect - கள் உருவாக்கும் வசதி.  மிகத் தெளிவான Output  இது Windows, Mac, Linux கணினிகளில் இயங்கும் வண்ண...

MS OFFICE - ஷார்ட்கட் கீகள் 2010

Image
நாம் அன்றாடம் பயன்படுத்தும் எம்.எஸ். ஆபீஸ் தொகுப்பின் பல அப்ளிகேஷன் சாப்ட்வேர் தொகுப்புகளில், அடிக்கடி பயன்படுத்தக் கூடிய சில ஷார்ட்கட் கீ தொகுப்புகள் இங்கே தரப்பட்டுள்ளன. வேர்ட் தொகுப்பு: Ctrl + Shift + Spacebar: பிரிக்க முடியாத ஸ்பேஸ் ஒன்றை சொற்களுக்கு நடுவே தருகிறது. இந்த இடைவெளியினை டெக்ஸ்ட் ராப்பிங் போன்ற பார்மட் வழிகள் எடுக்க முடியாது. Ctrl + Shift + Hyphen: பிரிக்க முடியாத சிறிய இடைக்கோட்டினை அமைக்கிறது. இதனால் ஹைபன் அமைக்கப்பட்ட இரு சொற்களும் பிரிக்கப்பட மாட்டா. Ctrl + T: பாராக்களை ஒரு ஹேங்கிங் இன்டென்ட் எனப்படும் முன் இடைவெளியிட்டு அமைக்கிறது.   Ctrl + Shift + T: மேலே சொன்ன பாரா ஹேங்கிங் இன்டென்ட் இருப்பின் அதனை நீக்குகிறது. எக்ஸெல் தொகுப்பு: Shift + F11: அப்போதைய ஒர்க் புக்கில் புதிய ஒர்க் ஷீட் ஒன்றை இணைக்கிறது.   Alt + Shift + F1: மேலே சொன்ன அதே வேலையை மேற்கொள்கிது. ஆம், இந்த இரண்டு ஷார்ட்கட் கீகளும் ஒரே வேலையைச் செய்கின்றன. நீங்கள் எதனை வேண்டுமானாலும் பின்பற்றலாம். அவுட்லுக்: Ctrl + Shift + H: கர்சருக்கு வலது பக்கம் உள்ள சொல்லை ...

கையில் மடித்து எடுத்துச் செல்ல புதிய தொழில்நுட்ப கீபோர்ட்

Image
வணக்கம் நண்பர்களே..! கையில் ஒரு பேப்பரை சுருட்டு எடுத்துக்கொண்டு போவதைப் போல் இந்த கீபோர்ட்டையும் கையோடு சுருட்டு எடுத்துக்கொண்டு போய்விடலாம்.. அதுதான் இந்த கீபோர்ட்டின் சிறப்பே... தரமான சிலிகனால் உருவாக்கப்பட்ட இந்த கீபோர்ட்டை பயன்படுத்தும்பொழுது கொஞ்சம்கூட உராய்வால் ஏற்படும் சத்தம் வராது என்பது கூடுதல் சிறப்பு.. அதுமட்டுமில்லீங்க... சாதாரணமாக நாம் தற்போது பயன்படுத்தும் கீபோர்ட்டில் தண்ணீர் அல்லது டீ, காபி போன்றவைகள் பட்டால் கீர்போர்ட் வேலை செய்யாமல் மக்கர் செய்யும்.. ஆனால் இந்த கீபோர்ட்டை தூசி, அழுக்கை அகற்ற தண்ணீர் விட்டே துடைக்கலாம்... ஒன்றும் ஆகாது. தண்ணீர் உறிஞ்சா தன்மைக்கொண்டது. பிளாஸ்டிக் போன்ற நெகிழும் தண்மை கொண்டதால் ஒட்டாத தன்மையாலும், தண்ணீர் இதற்கு எதிரியே அல்ல.. வயர்லஸ் டைப் கீபோர்ட் என்பதால் நமக்கு வசதியான இடத்தில் வைத்து தட்டச்சிட்டுக்கொள்ள முடியும். அதேபோல USB Port-ல் இணைத்தும் கூட பயன்படுத்த முடியும். மிக குறைந்த எடை கொண்ட இந்த கீபோர்ட் 2.4 கிகா ஹெர்ட் வேகத்தில் இயங்கி நம்மை ஆச்சர்யப்பட வைக்கிறது. சாதாரணமாக நாம் பயன்படுத்தும் அதே QWERTY போர...

வீடியோகான் வழங்கும் பட்ஜெட் விலை போன்கள்

அண்மையில் வீடியோகான்  நிறுவனம், மூன்று மொபைல் போன்களை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்துள்ளது. ரூ. 2,500 அதிக பட்ச விலையாகக் குறியிடப்பட்டுள்ள போன் வி 1546 என அழைக்கப்படுகிறது. இரண்டு மினி சிம் இயக்கத்தில் இரண்டு பேண்ட் அலைவரிசையில் இது செயல்படுகிறது. இதன் பரிமாணம் 99து56து13.5 மிமீ. பார் டைப் ஆக இது வடிவமைக்கப் பட்டுள்ளது. வழக்கம் போல ஆல்பா நியூமெரிக் கீ போர்ட் தரப்பட்டுள்ளது. கருப்பு மற்றும் கிரே கலந்த வண்ணத்திலும், கருப்பு மற்றும் பழுப்பு கலந்த வண்ணத்திலுமாக இரண்டு வண்ணங்களில் இது கிடைக்கிறது. இதன் திரை டி.எப்.டி. டச் ஸ்கிரீனாகும். 2.8 அங்குல அகலம் உடையது. இதன் பிக்ஸெல் திறன் 240x320 ஆகும். லவுட் ஸ்பீக்கர், 3.5 மிமீ ஆடியோ ஜாக், 4 ஜிபி வரை மெமரி அதிகப்படுத்தக் கூடிய மைக்ரோ எஸ்.டி. கார்ட் ஸ்லாட், 500 முகவரிகள் கொள்ளும் முகவரி புக் ஆகியவை தரப்பட்டுள்ளன. புளுடூத், யு.எஸ்.பி. கிடைக்கின்றன. கேமரா 1.3 எம்.பி. திறன் கொண்டதாக அமைந்துள்ளது. இதன் பிக்ஸெல் திறன் 1280து1024. பதிவு செய்யக் கூடிய எப்.எம். ரேடியோ, எம்பி 4 மற்றும் எம்பி3 பிளேயர்கள், இ-புக் ரீடர் கிடைக்கின்றன. கொடுக்கப...