ஒரு வெப்சைட் திறக்க ஆகும் நேரத்தை கணக்கிட...........!ost title

வணக்கம் நண்பர்களே..! பொதுவாக இணையத்தில் உலவுபவர்கள் அனைவருமே ஒரு தளமானது (web page) கிளிக் செய்த உடனேயே திறக்க வேண்டும் என்று எண்ணுவார்கள். அவ்வாறு உடனே திறக்கிற தளங்களில் அதிக நேரத்தை செலவிடுவார்கள். ஒரு சில தளங்கள் பொறுமையைச் சோதிக்கும். நீண்ட நேரம் லோட்(Load) ஆகிக்கொண்டே இருக்கும். ஆனால் தளம் திறக்காது. காத்திருந்து காத்திருந்து பொறுமை இழந்து பாதிபேர் தளத்தை மூடிவிடுவார்கள். அல்லது வேறொரு தளத்தை நாடுவார்கள்.
சில பேர் கோபம் வந்து தளத்தை மூடிவிட்டு, "இனி இந்த தளத்திற்கே வரக்கூடாது" என முடிவெடுத்துவிடுவார்கள். இத்தகைய சூழ்நிலை உங்களின் தளத்திற்கும் வரக்கூடாதில்லையா? அப்படியென்றால் உங்கள் தளம் திறக்க எடுத்துக்கொள்ளும் நேரத்தை நீங்கள் முதலில் கண்டறிய வேண்டும்.

உங்களின் வலைப்பூ(Blog) அல்லது வலைத்தளம்(Website) எவ்வளவு நேரத்தில் திறக்கிறது? உங்களுடைய தளம் திறக்க எடுத்துக்கொள்ளும் நேரம் எவ்வளவு ? என்பதை கண்டறிய இந்த தளம் பயனுள்ளதாக இருக்கிறது.
உங்கள் தளம் திறக்கும் நேரத்தைக் கண்டறியும் முறை: 
  • http://www.numion.com என்ற தளத்தில் நுழைந்துகொள்ளுங்க.
  • அங்குள்ள Measure your website என்பதை கிளிக் செய்தால் படத்தில் உள்ளது போல பக்கம் திறக்கும். 
  • அதில் உங்களின் வலைதளத்தின் பெயரை (URL)கொடுத்து start stop watch என்ற பொத்தானை அமுக்குங்கள்.

உடனே அந்தப் பக்கத்தில் உங்கள் தளம் திறக்கப்பட்டு, தளம் திறக்கும் நேரத்தை கண்டறிவதற்கான watch-ம் ஓடிக்கொண்டிருக்கும். உங்கள் தளம் முழுமையாக திறந்த பிறகு stop watch நின்று விடும். இப்போது உங்கள் தளம் திறக்க எடுத்துக்கொள்ளும் நேரத்தை துல்லியமாக காட்டிவிடும். நமது 'தங்கம்பழனி' வலைத்தளம் திறக்க எடுத்துக்கொள்ளும் நேரத்தை கீழிருக்கும் படத்தில் பாருங்கள்.


நமது வெப்சைட் திறக்க ஆகும் நேரம் வெறும் 4.6 நொடிகள் மட்டுமே 

தடையில்லா இணைய இணைப்புக் (Brad band Internet connection) வைத்திருப்பவர்களுக்கு இத்தளம் காட்டும் அளவு மிகவும் துல்லியமாக இருக்கும். குறைந்த வேக இணைய இணைப்பு(Slow internet connetion) உள்ளவர்களுக்கு சற்றேறக்குறைய சரியான தளம் திறக்கும் நேரத்தைக் கொடுக்கும்.

இந்த இணைப்பில் சென்று நீங்களும் உங்கள் தளம் திறக்க எடுத்துக்கொள்ளும் நேரத்தைக் கண்டறியுங்கள். நேரடியாக உங்கள் தளம்திறக்கும் வேகத்தைக் காண கீழிருக்கும் இணைப்புச் சுட்டியை அழுத்தவும்.
http://www.numion.com/Stopwatch/index.html?

Comments

Popular posts from this blog

மறந்துபோன மொபைல் நம்பரை கண்டுபிடிக்க எளிய வழி..!

திருமண பொருத்தம் சுலபமாக பார்க்க

புதிதாக கணினி வாங்கும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன?