ஸ்பாம் மெயில் அனுப்புவதில் இந்தியா முதலிடம்
தேவையற்ற,
விரும்பப்படாத, நோக்கமற்ற மெயில்களை ஸ்பேம் என அழைக்கிறோம். அநேகமாக
அனைவரின் மெயில் இன்பாக்ஸிலும் இது போல நிறைய ஸ்பேம் மெயில்கள் நிறையக்
காணலாம்.
பன்னாட்டளவில்
இந்த ஸ்பேம் மெயில்கள் அனுப்புவது பலரின் வழக்கமாக உள்ளது. சில வேளைகளில்
இந்த மெயில்கள் கெடுதல் விளைவிக்கும் மால்வேர் புரோகிராம்கள் உள்ள
தளங்களுக்கும் நம்மை இழுத்துச் செல்லும் மெயில்களாக அமைந்து விடுகின்றன.
சரி,
இந்த ஸ்பேம் மெயில்களை அதிகமாக அனுப்புபவர்களைக் கொண்டு முதல் இடம்
பிடித்திருக்கும் நாடு எது தெரியுமா? நம் இந்தியா தான். தகவல் பாதுகாப்பு
பிரிவில் இயங்கி வரும் Sophos என்ற நிறுவனம்
இந்த
தகவலை அண்மையில் தன் ஆய்விலிருந்து அறிந்து வெளியிட்டுள்ளது. 2012 மார்ச்
வரை இதற்கான டேட்டாவினைத் தேடிப் பெற்று இந்த முடிவிற்கு வந்துள்ளது. உலக
அளவில் வெளியாகும் 10 ஸ்பேம் மெயில்களில் ஒன்று இந்தியாவிலிருந்து
செல்கிறது. இந்த வகையில் இதுவரை முதல் இடம் பிடித்திருந்த அமெரிக்காவினை
முந்திவிட்டது இந்தியா.
இந்த
ஸ்பேம் மெயில்கள் பெரும்பாலும், ஹேக்கர்கள் தங்கள் மால்வேர் புரோகிராம்கள்
மூலம் கைப்பற்றிய கம்ப்யூட்டர் களிலிருந்தே அனுப்பப்படுகின்றன. இன்டர்நெட்
இணைப்பினைப் புதியதாகப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை, அண்மைக் காலமாகப்
பெருகி வருகிறது.
ஆனால்,
இவர்கள் தங்கள் கம்ப்யூட்டர்களைப் பாதுகாக்கும் வழிகளை மேற்கொள்ள மறந்து
விடுகின்றனர். விளைவு? மால்வேர் புரோகிராம்களால், இந்த கம்ப்யூட்டர்கள்
கைப்பற்றப்பட்டு, இது போல ஸ்பேம் மெயில்கள் நூற்றுக் கணக்கில்
அனுப்பப்படுகின்றன.
இந்தியாவில்
இயங்கும் இன்டர்நெட் சேவை வழங்கும் நிறுவனங்களும் இந்த வகையில் குறை
சொல்லப்பட வேண்டியவையே. இந்த நிறுவனங்களும் அதி தீவிரப் பாதுகாப்பு வழிகளை
மேற்கொள்வதில்லை. இதனால் ஸ்பேம் மெயில்கள் பரவ இவையும் காரணமாகின்றன.
பரவும்
ஸ்பேம் மெயில்களில் பல பொருளாதார ரீதியாக, குறுக்கு வழிகளில் பணம்
கிடைக்கும் என புதியதாக இன்டர்நெட் பயனாளர்களுக்கு வலை வீசுகின்றன.
இதற்குப் பலியாகுபவர்களின் யூசர் நேம், பாஸ்வேர்ட் ஆகியவற்றைத்
திருடுகின்றன.
இந்த
ஸ்பேம் மெயிலை அனுப்புவர்கள், அண்மையில் பேஸ்புக் மற்றும் ட்விட்டர்
தளங்களைப் பயன்படுத்தத் தொடங்கினர். ஆனால் தற்சமயம் இது கட்டுப்படுத்தப்
பட்டு விட்டதாகவே தெரிகிறது. தற்போது புதிதாகப் பிரபலமாகி வரும் Pinterest
என்னும் சோசியல் நெட்வொர்க் தளத்தின் மூலமாக ஸ்பேம் மெயில்கள் பரவுகின்றன.
இந்த
மெயில்களில் பொருட்கள் விற்பனை செய்திடும் தளங்களுக்கும், விற்பனை
செய்வதில் கமிஷன் கிடைக்கும் என்ற செய்தி உள்ள தளங்களுக்கும் லிங்க்
தரப்படுகின்றன. இதில் கிளிக் செய்திடும் நபர்கள் மாட்டிக் கொள்கின்றனர்.
இந்த தகவல்கள் அனைத்தும் Sophos நிறுவனத்தின் ஆய்வில் தெரிய வந்துள்ளன.
Comments