கணினியில் அழிய மறுக்கும் கோப்புகளை முற்றிலும் அழிக்க
கணினியில்
ஒரு சில மென்பொருட்களின் தேவையில்லாத கோப்புகள் இருந்துக்கொண்டு நம்மை
இம்சிக்கும். அவற்றை அழிக்க முற்பட்டாலும் அவை அழிச்சாட்டியம் செய்து அழிய
மறுக்கும். அவ்வாறு அழிக்க கோப்பைத் தேர்ந்தெடுத்து delete கொடுத்தாலும்
ஏதாவது ஒரு செய்தியைக் காட்டி அழிக்க முடியாது எனக்கூறும். அதாவது அழிய
மறுபதற்குரிய பொய்யான காரணம் ஒன்றையும் தெரிவிக்கும்.
உதாரணமாக இந்த புரோகிராம் செயல்பாட்டில் உள்ளது. இதனை மூன்றாம்நபர் ஒருவர் பயன்படுத்திக்கொண்டிருக்கிறார். என ஏதாவது ஒரு செய்தி வந்து நம்மை எரிச்சலுக்குள்ளாக்கும். நாம் அந்த கோப்பை அழிக்க முயற்சி செய்து தோற்றுப்போயிருப்போம். இத்தகைய கோப்புகளை முற்றிலும் அழிக்கப் பயன்படும் பதிவுதான் இது.
உதாரணமாக இந்த புரோகிராம் செயல்பாட்டில் உள்ளது. இதனை மூன்றாம்நபர் ஒருவர் பயன்படுத்திக்கொண்டிருக்கிறார். என ஏதாவது ஒரு செய்தி வந்து நம்மை எரிச்சலுக்குள்ளாக்கும். நாம் அந்த கோப்பை அழிக்க முயற்சி செய்து தோற்றுப்போயிருப்போம். இத்தகைய கோப்புகளை முற்றிலும் அழிக்கப் பயன்படும் பதிவுதான் இது.
இவ்வாறு அழிய மறுத்து, அடம்பிடிக்கும் கோப்புகளை அழிக்க
ஒரு எளிய வழி உள்ளது. முதலில் நீங்கள் அழிக்க வேண்டிய கோப்பின் சரியான
FilePath கண்டறிய வேண்டும். உதாரணமாக, palani.txt எனும் கோப்பு உள்ளதாக
வைத்துக்கொள்வோம். அதனுடைய முழு முகவரி C:\Documents and Settings\User
Name\My Documents\palani.txt என இவ்வாறு இருக்கும்.
- இதை எதாவது ஒரு தாளில் குறித்துவைத்துக்கொள்ளுங்கள். பிறகு உங்கள் கணினியை மறுதொடக்கம்(Restart) செய்யுங்கள்.
- உங்கள் கணினி Boot ஆகும்.
- இப்போது F8 அழுத்துங்கள்.
- இப்போது Advanced Boot Options மெனு கிடைக்கும்.
- இதில் Safe Mode with Command Prompt என்பதைத் தேர்ந்தெடுங்கள்.
- இப்போது DOS PROMPT-ல் கணினி வந்து நிற்கும்.
- இப்போது தோன்றும் கர்சரில்cd C:\Documents and Settings\Your Name\My Documents என தட்டச்சிட்டு என்டர் தட்டுங்கள்.
- பிறகு டெலிட் செய்ய வேண்டிய கோப்பின் பெயரை கொடுக்கவும்.
- உதாரணமாக del palani.txt என சரியாக தட்டச்சிட்டு Enter தட்டுங்கள். ( palani.txt என்பதற்கு பதிலாக உங்களுடைய கோப்பின் பெயரைக்கொடுக்கவும்)
- இப்போது நீங்கள் அழிய மறுத்த கோப்பானது எளிதாக அழிக்கப்பட்டிருக்கும்.
குறிப்பு:-Prompt Mode-ல்
நீங்கள் தட்டச்சிட வேண்டியதை சரியாக தட்டச்சிட்டால்தான் கோப்பானது
நீக்கப்படும். வார்த்தை இடைவெளிகள் சரியாக இருக்க வேண்டும். File Path-ம்
சரியானதாக இருக்க வேண்டும். அழிக்க வேண்டிய கோப்பின் பெயரும் எழுத்து
மாறாமல் அப்படியே இருக்க வேண்டும். இவை அனைத்தையும் கவனித்தில்
எடுத்துக்கொண்டு செய்தால் உங்களுடைய அழிக்க முடியாத கோப்புகளனைத்தையும்
இம்முறையில் அழிக்கலாம்.
Comments