விண்டோஸ் 8 ஜூனில் கடைசி பீட்டா ரிலீசிங்....
ஆப்பரேட்டிங் சிஸ்டம், புதிய பிரவுசர் பதிப்பு மற்றும் அப்ளிகேஷன் சாப்ட்வேர்புரோகிராம்கள் வடிவமைக்கப்பட்டு வெளியிடப் படுகையில், சோதனைப் பதிப்பு முதலில் வெளியிடப்படும். பின்னர், வெளியீட்டுக்கு முந்தையதாகப் பல பதிப்புகள் வெளி யாகும் (கடைசி பீட்டா ரிலீசிங்). இவற்றிற்கான பின்னூட்டத் தகவல் களைப் பெற்று, ஒரு முழுமையான பிரச்னையற்ற வெளியீட்டினை மேற் கொள்ளவே இந்த வெளியீட்டு முறை பின்பற்றப்படுகிறது. இந்த வகையில் விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டம் முதலில், இதன் அடிப்படையில் புரோகிராம் தயாரிப்பவர் களுக்கு வழங்கப்பட்டது. பின் நுகர்வோருக் கான பதிப்பு வெளியிடப்பட்டது. இப்போது ஜூன் மாதம், வெளியீட்டிற்கு முந்தைய பதிப்பு வெளியாகும் என அறிவிக்கப் பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து முழுமையான வெளியீட்டிற்கு முன், வேறு சில பதிப்புகளும் வெளியிடப்படும் எனத் தெரிகிறது. இந்த தகவலை விண்டோஸ் பிரிவின் தலைவர் ஸ்டீபன் ஸினோப்ஸ்கி தெரிவித்துள்ளார். முழுமையான வெளியீட்டிற்கு முந்தைய பதிப்பு, ஏறத்தாழ இறுதிப் பதிப்பு போலவே இருக்கும். எனவே, டவுண்லோட் செய்து பயன்படுத்துபவர்கள் கூறும் நிறை குறைகள் கணக்கில் கொள்ளப்பட்டு, ஆப்பரேட்டிங...