வைரஸ்களின் வகைகளை அறிந்துகொள்ள (Types of Viruses)
நச்சு நிரல்கள் கணிப்பொறியின் எந்தப் பகுதியைப் பாதிக்கின்றன என்பதைப் பொறுத்து, அவைகளை பின்வருமாறு வகைப்படுத்தலாம்.
Boot sector virus
இவ்வகை நச்சு நிரல், வன்வட்டின் தலைமைத் தொடக்க ஏட்டைத் (Master Boot Record - MBR) தாக்கி, அதிலுள்ள நிரலுக்கு பதிலாக தனது சொந்த நிரலை எழுதி வைக்கிறது. கணிப்பொறி இயங்கத் தொடங்கியதும் இந்த நச்சு நிரல் நினைவகத்தில் குடியேறுகிறது. இவ்வகை நச்சு நிரல் "boot sector virus" அல்லது "bootstrap virus" எனவும் அழைக்கப்படுகிறது.
- Polyboot.B,
- AntiEXE,
- Brain,
- Stoned,
- Empire,
- Form,
- Azusa,
- Michelangelo
போன்றவை இவ்வகை நச்சு நிரல்களாகும்.
File infecting virus
இவ்வகை நச்சு நிரல்கள் பெரும்பாலும் .COM மற்றும் . EXE என்ற விரிவுள்ள கோப்புகளைத் தாக்குகின்றன. இவை கணிப்பொறி நினைவகத்தில் இருந்து கொண்டு அதில் இயக்கப்படும் செயல்படுநிலைக் கோப்புகளைத் (Executable files) தாக்குகின்றன. Dir - II மற்றும் Fridya the 13th போன்றவைகள் இந்த நச்சு நிரல்களாகும்.
Multipartite virus
இவ்வகை நச்சு நிரல்கள், தொடக்க வட்டக்கூறு நச்சு நிரல்(Boot sector virus) மற்றும் கோப்புகளைத் தாக்கும் நச்சு நிரல்(File infecting virus) போன்ற இரண்டின் பண்புகளையும் பெற்றுள்ளன. அதனால் இவ்வகை நச்சு நிரல்கள் வன்வட்டின்(Hard disc) தொடக்க வட்டக்கூறை மட்டுமல்லாமல் செயல்படுநிலைக் கோப்புகளையும் தாக்குகின்றன. Tequila என்பது இவ்வகை நச்சு நிரலாகும்.
ஒவ்வொரு வைரசைப் பற்றியும் இப்பதிவில் பார்த்தோம். இத்தகைய வைரஸ்களை நமது கணினியைத் தாக்கமலிருக்க Anti virus program இருக்கிறது. அவற்றில் முக்கியமான ஒரு சிலவற்றைப் பற்றி அடுத்தப் பதிவில் காண்போம்.
இந்த தகவல் பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள். நன்றி நண்பர்களே..!!

Comments