லேப்டாப் இப்போது வாங்கலாமா?
விண்டோஸ்
8 மற்றும் இன்டெல் நிறுவனத்தின் அடுத்த கட்ட சி.பி.யு சிப்கள் Ivy Bridge
ப்ராசசர்களுடன் வெளியாக இருப்பதால், லேப்டாப் கம்ப்யூட்டர் வாங்க
விரும்புபவர்கள், இப்போது கிடைக்கும் கம்ப்யூட்டர்களை வாங்கலாமா? அல்லது
பொறுத்திருந்து வரும் அக்டோபர் மாதத்தில் இவை இரண்டும் அல்லது ஒன்றாவது
விற்பனைக்கு வரும்போது வாங்கிக் கொள்ளலாமா? என்ற பரிதவிப்பில்
இருக்கின்றனர்.
ஒரு
சிலர், இது போல அறிவிப்புகளை நம்பி நம் தேவைகளை ஒத்தி போட வேண்டியது
இல்லை. மேலும், இப்போது வாங்கிக் கொண்டாலும், அதனால் பெரிய தொழில் நுட்ப
வசதி இழப்பு பெரிய அளவில் இருக்காது; நம் தேவைகளுக்கான சாதனங்களை
தேவைப்படும்போது வாங்கிப் பயன்படுத்துவதே புத்திசாலித்தனம் என்று
எண்ணுகின்றனர்.
ஆனால்,
ஒரு சிலர், காத்திருந்து வாங்குவதே சிறந்தது என்று கூறி வருகின்றனர்.
விண்டோஸ் 8 மற்றும் இன்டெல் ஐவி பிரிட்ஜ் ப்ராசசர் மட்டுமின்றி, என்விடியா
நிறுவனமும் லேப்டாப் கம்ப்யூட்டர்களுக்கான புதிய கிராபிக்ஸ் கட்டமைப்பினை
உருவாக்கி வெளியிட உள்ளது. எனவே காத்திருப்பதே நல்லது என்று இவர்கள்
கருத்து தெரிவிக்கின்றனர்.
இப்போது
வாங்கும் கம்ப்யூட்டரில் விண்டோஸ் 8 அப்கிரேட் செய்து கொள்ளலாம்
என்றாலும், ஹார்ட்வேர் மாற்றத்தை மேற்கொள்ள முடியாது. புதிய சிபியு சிப்களை
எப்படி இணைப்பது இயலாது என்றும் கூறுகின்ற னர். வரும் ஆகஸ்ட்,
செப்டம்பரில் பழைய கம்ப்யூட்டராகப்போகும் ஒன்றை இப்போது வாங்குவது சரியா
என்றும் கேள்வி எழுப்புகின்றனர்.
தகவல்
தொழில் நுட்ப உலகம் வர இருக்கும் புதிய தொழில் நுட்பம் மற்றும் கூடுதல்
வசதிகள் (அதிகப் பணத்தை செலவு செய்திட வைக்கும்) குறித்து அறிவிப்பு
வழங்கி, நம்மை செயல்பட விடாமல் நிறுத்தி வைக்கின்றனர். ஆனால், இது
பெரும்பாலும், நாம் உடனே வாங்கும் சாதனம் அதிகம் பயன்படுத்திய பின்னரே
கிடைக்கும். அது மட்டுமின்றி, பலருக்குத் தேவைப்படாத வசதிகள் தான்
புதியதாகக் கிடைக்கும்.
எனவே
நம் தேவைக்கேற்ப, அப்போது இருப்பதனை வாங்கிப் பயன் படுத்தத் தொடங்குவதே
புத்திசாலித்தனம் என்று கூறுவோரும் உள்ளனர். அப்படி வாங்கும்போது, அடுத்து
வர இருப்பதற்கு அப்டேட் செய்திடும் வசதி கொண்ட சாதனத்தைத் தேர்ந்தெடுப்பது
நம் சாமர்த்தியம் என்கின்றனர் இன்னொரு சாரார். அப்படி என்ன புதிய சாதனங்கள்
நம் வேலைப் பளுவினைக் குறைக்கப் போகின்றன.
இன்னும்
எத்தனை பேர் விண்டோஸ் எக்ஸ்பி போல இன்னொரு சிஸ்டம் வரப் போவதில்லை என்று
சொல்லி கடந்த பத்து ஆண்டுகளாக அதனையே இன்னும் பயன்படுத்தி வருகின்றனர்
என்று இவர்கள் எடுத்துக்காட்டுகின்றனர். குறிப்பாக, ஆப்பரேட்டிங் சிஸ்டம்
அப்கிரேட் செய்திட முடியும் என்றாலும், அதனை மேற்கொள்ளாதவர்கள் அதிகம்
இருக்கையில், என்றோ வரப்போகும் அடுத்த ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்காக ஏன்
காத்திருக்க வேண்டும் என்ற வாதமும் நியாயமானதே.
லேப்டாப்
கம்ப்யூட்டர்களைப் பொறுத்த வரை, இன்றைய லேப்டாப் கம்ப்யூட்டர்கள் நாம்
எதிர்பார்ப்பதைக் காட்டிலும் கூடுதலான திறனைக் கொண்டே அமைக் கப்பட்டுள்ளன.
சென்ற ஆண்டு வாங்கிய லேப்டாப் கம்ப்யூட்டர்கள், இன்றைக்கும் புதிய வசதிகள்
கொண்டதாக, நவீனமாகவே கருதப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
எனவே
புதிய விண்டோஸ் 8 மற்றும் ஹார்ட்வேர் கட்டமைப்பு வந்தாலும்,
பொறுத்திருந்து ஓராண்டு கழித்து வாங்குவது கூடத் தவறில்லை என்றே பலரும்
கருத்து தெரிவிக்கின்றனர்.
நம்
வேலைக்கு, நம் பணிப்பாங்கிற்கு ஏற்ற லேப்டாப் ஒன்றைத் தேர்ந்தெடுத்து
பயன்படுத்துவதே இதற்கான வழி என்று அமைதிப்படுபவர்களும் இருக்கின்றனர்.
Comments