உங்கள் கணினியில் வைரஸ் தாக்கத்தைக் கண்டறிய...! (Symptoms of a Computer VIRUS)

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjVvnmWo3v4TZbaqnXasU0GvPUEveJ23cNvu_if_cL4jCoJVQcf1-Kyyp8M41zrwqVtp8ht6Z9P92AlRJMuzySg3Kq5Dup8ONYfc1Qs4jHJulVsjAxN5VhBmYXuUDpFaYHKsZ37xg8-XiTl/s1600/computer-virus.jpg
 
உங்கள் கணிப்பொறியில் நச்சு நிரல்களால்(Virus) பாதிக்கபட்டிருந்தால் கீழ்க்கண்ட பிரச்னைகள் ஏற்படலாம்.

கணிப்பொறியின் வேகம் குறைந்து காணப்படும்.(very slow on computer speed).
 
கணிப்பொறி அடிக்கடி செயலிழந்து போகும். (computer failure ).
 
கணிப்பொறி சரிவர செயல்படாததுடன் அடிக்கடி தானாகவே மீண்டும் இயங்கும். (Automatic Restart).
 
கணிப்பொறியில் இருக்கும் பயன்பாடுகள்(computer applications) சரிவர இயங்காது வட்டுகளையும், வட்டு இயக்கிகளையும் பயன்படுத்த முடியாது.(Disks, disk drives will not be able to use.)
 
அச்சிட வேண்டிய ஆவணங்களை சரியாக அச்சிட முடியாது. (Cannot print documents correctly.)
 
அடிக்கடி தேவையில்லாத பிழைச் செய்திகள்(Error Message) தோன்றும்.அண்மையில் திறந்த ஆவணங்களுக்கு இரண்டிரண்டு விரிவுகள் (Double extension)தோன்றலாம். 
 
எந்த ஒரு காரணமும் இன்றி நச்சு நிரல் எதிர்ப்பி(Anti virus software) செயல் இழந்துவிடும். அதை மீண்டும் இயக்குவது கடினமாக இருக்கும். 
 
நீங்கள் தோற்றுவிக்காத புதிய பணிக்குறிகள்(Short Cuts) திரைமுகப்பில் காணப்படும். தேவையில்லாமல் வினோதமான ஒலிகள் கேட்கும். 
 
உங்கள் கணிப்பொறியிலுள்ள முக்கியமான நிரல்கள் உங்களுக்குத் தெரியாமலேயே நீக்கப்பட்டிருக்கும்.(Important files are removed without your permission).
 
எந்தவொரு காரணமும் இன்றி கணிப்பொறியின் நினைவகம் குறைந்து போகும். (The computer's memory Reduced without any reason ).
 
வினோதமான செய்திகள் திரையில் தோன்றும்.(Strange news appear on screen).
 
வினோதமான கோப்புகள் கோப்புறைகளில் காணப்படும்.(Strange files are in folders).
 
உங்களுடைய கோப்புகளில் சில உங்களுக்குத் தெரியாமலேயே நகலெடுக்கப்பட்டிருக்கும். (Unbeknownst to you, some of your files will be copied.).
 
மேற்கண்ட அறிகுறிகள் உங்களுடைய கணினியில் இருக்குமானால் நிச்சயம் உங்கள் கணினி வைரசால் பாதிக்கப்பட்டிருக்கும் என்பதை அறிந்துக்கொள்ளுங்கள். நன்றி..!!!

Comments

Popular posts from this blog

மறந்துபோன மொபைல் நம்பரை கண்டுபிடிக்க எளிய வழி..!

புதிதாக கணினி வாங்கும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன?

திருமண பொருத்தம் சுலபமாக பார்க்க