ஓவியம் தீட்டும் ரோபோ கண்டுபிடிப்பு.........
விளையாட்டு
சாதனங்களில் தொடங்கிய ரோபோக்கள் படிப்படியாக ஆதிக்கத்தை வளர்த்து கார்
தொழிற்சாலைகள், கனரக சாதனங்கள் உற்பத்தி வகையில் புகுந்தன.
பின்னர் மருத்துவமனைகளில் சில குறிப்பிட்ட ஆபரேஷன்களையும் வெற்றிகரமாக செய்து சாதனை நிகழ்த்தின.
தற்போது ஜெர்மனி நாட்டில் கார்ல்ஸ்ருதி நகரை சேர்ந்த ஒரு நிறுவனத்தினர் ஓவியம் தீட்டும் ரோபோவை கண்டுபிடித்துள்ளனர்.
இந்த ரோபோ முன்பு அமர்ந்தால் போதும் 10 நிமிடங்களில் நமது உருவத்தை மிகவும் தத்ரூபமாக வரைந்து விடுமாம்.
அதன் செயல்பாடு குறித்து இதனை வடிவமைத்த நிறுவனத்தின் விஞ்ஞானி மார்டினா ரிசெர் கூறுகையில்,
இதில்
உள்ள கேமரா மனித உருவத்தை படம் எடுத்து, நுட்பமான மென்பொருள் உதவியுடன்
ரோபோ கரங்களுக்கு அது கட்டளையிடப்பட்டு உருவம் வரையப்படுகிறது என்றார்.
விரைவில் இந்த ரோபோ சந்தைகளில் அறிமுகமாகவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது
Comments