உங்கள் கணினியில் தேவையில்லாத மென்பொருளை முழுவதுமாக நீக்க
வேண்டாத மென்பொருள்களை Uninstall செய்யும்போது அதனுடன் தொடர்புடைய அனைத்து கோப்புகளும் நீக்கப்படுகிறதா? என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

ஏதாவது ஒரு முறைப் பயன்படுத்துவதற்கென தரவிறக்கி நிறுவிய மென்பொருள்களை, பயன்படுத்தியப் பின் தேவையில்லையென நீங்கள் நீக்கியிருப்பீர்கள். ஆனால் அவை முழுவதும் கணினியில் இருந்து நீங்காது. அதன் சார்புடைய சில கோப்புகளும்(Files), கோப்புறைகளும்(Folder) நம்முடைய கணினியின் ரெஜிஸ்டிரியில்(Registry) தங்கிவிடும். இதுபோன்று தங்கியிருக்கிற கோப்புகள் அதிகமாகும்போது தானாகவே நம்முடைய கணினியானது தன்னுடைய இயல்பான வேகத்தை(lose speed) இழக்கும்.
இப்படியே தொடர்ந்துதேவையில்லாத கோப்புகள் சேரும்போது கணினியின் வேகம் வெகுவாக குறைந்துவிடும். இவ்வாறு தேவையில்லாத கோப்புகள் கணினியில் சேராமல் இருக்க, நீக்க வேண்டிய மென்பொருள்களை முறையாக நீக்க தெரிந்திருக்க வேண்டும். அது நமக்கு சாத்தியமில்லை. காரணம் சிலவேளைகளில் தவறாக கணினியின் முக்கிய கோப்புகளையும்(computer important files) நாம் நீக்கிவிட வாய்ப்பிருக்கிறது. இதனால் கணினி முடங்கிவிடும் அபாயம் உள்ளது. இதற்கான தீர்வாகத்தான் இந்த Total Uninstall என்ற மென்பொருள் பயன்படுகிறது.
இது ஒரு இலவச மென்பொருள்தான். இம்மென்பொருளை தரவிறக்கி(Download) உங்கள் கணினியில் நிறுவிக்கொள்ளுங்கள்(Installation). மென்பொருளை இயக்கி நீக்க வேண்டிய மென்பொருளைத் தேர்ந்தெடுத்து நீக்கிக்கொள்ளுங்கள்.
இம்மென்பொருள் Uninstall செய்ய வேண்டிய மென்பொருளின் அனைத்துக்கோப்புகளையும் ஒன்றுவிடாமல் தேடிப்பிடித்து நீக்குகிறது.
- மென்பொருளைத் தரவிறக்கச் சுட்டி; http://www.martau.com/uninstaller-download.php
- மென்பொருளுக்கான தளம்: http://www.martau.com
- கட்டண மென்பொருளுக்கான சுட்டி: http://www.martau.com/tu_buy_now.php
Comments